Thursday, November 23, 2017


குறையுது முட்டை விலை : அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி


Added : நவ 22, 2017 22:02

சென்னை: தமிழகத்தில், 15 நாட்களாக எகிறிய முட்டை விலை, இரண்டு நாட்களாக குறைய துவங்கி உள்ளது. சென்னையில், சில்லரை விற்பனையில், முட்டை விலை, 7.50 ரூபாயில் இருந்து, 6.25 ரூபாயாக குறைந்துள்ளது. தமிழகத்தில், 4.36 ரூபாயாக முட்டையின் கொள்முதல் விலை, 15 நாட்களுக்கு முன், திடீரென, 5.65 ரூபாயாக உயர்ந்தது. இதனால், சென்னை யில், முட்டை விலை, ஆறு ரூபாயில் இருந்து, 7.50 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக முட்டை விலை குறைந்து வருகிறது.

இது குறித்து, சென்னை முட்டை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும், மழை பொழிவு அதிகம். இதனால், வட மாநிலங்களுக்கான முட்டை ஏற்றுமதி, 20 நாட்களாக அதிகரித்தது. காய்கறி விலை அதிகரிப்பால், முட்டை பயன்பாடு அதிகரித்து, விலை உயர்ந்தது. இரண்டு நாட்களாக, அவற்றின் விலை குறைந்து வருகிறது. நேற்று, கொள்முதல் விலை, நாமக்கல்லில், 5.05 ரூபாய்; சென்னையில், 5.40 ரூபாயாக இருந்தது. சில்லரையில், 7.50 ரூபாயில் இருந்து, 6.25 ரூபாயாக குறைந்துள்ளது. சில நாட்களில் விலை, இயல்பு நிலைக்கு வந்து விடும். இதனால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024