Thursday, November 23, 2017

மின் வாரியத்திற்கு சனிக்கிழமை விடுமுறை : வைர விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை

Added : நவ 22, 2017 22:01

வைர விழாவை முன்னிட்டு, பொதுத்துறை வங்கி களில் இருப்பது போல், நான்காவது சனிக்கிழமை, ஊழியர்களுக்கு விடுமுறை விட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில், மின் வினியோக பணிகளை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.


மின் வாரியத்திற்கு, காலை, 10:30 மணி முதல் மாலை, 5:00 வரை வேலை நேரம். மின் கட்டண மையங்கள், காலை, 8:00 மணி முதல், மதியம், 2:30 மணி வரை செயல்படுகின்றன.
வாரத்தில், இரண்டாவது சனிக்கிழமை தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள்.

இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலகங்கள், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை வேலை நேரம்; அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை. அதேபோல், மின் வாரியத்திலும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விடுமாறும், வைர விழாவை முன்னிட்டு, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குமாறும், ஊழியர்கள் கோரி வருகின்றனர்.அவர்களுக்கு, 2015 டிச., மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வும், இதுவரை வழங்கவில்லை.தற்போது, நிலுவை தொகை இன்றி, ஊதிய உயர்வு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில், பொதுத் துறை வங்கிகளுக்கு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை இருப்பது போல், மின் வாரியத்திற்கும், நான்காவது சனிக்கிழமை விடுமுறை விட, திட்டமிடப்பட்டு உள்ளது. 


மின் வினியோக பிரச்னை ஏற்படும் போது, அதை சரி செய்யும் பணியில், வழக்கம் போல், எந்நேரமும் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024