Thursday, November 23, 2017


சிவகங்கை அருகே ஊரை காலி செய்யும் மக்கள் : 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறவில்லை

Added : நவ 23, 2017 00:43

சிவகங்கை: சிவகங்கை அருகே பாதை இல்லாததால் கிராம மக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளனர். சிரமம் ஊராட்சி ஆலங்குடியில் 200 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கான ரேஷன்கடை 2 கி.மீ., உள்ள சேம்பார் கிராமத்தில் உள்ளது. 

பஸ் ஏறுவதற்கும் அக்கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும். அதேபோல் ஆலங்குடியைச் சேர்ந்த 20 குழந்தைகள் சேம்பார் நடுநிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
ஆனால் ஆலங்குடியில் இருந்து சேம்பார் செல்வதற்கு பாதை
கிடையாது.


இதனால் கிராம மக்கள், மாணவர்கள் கண்மாயின் குறுக்கே தற்காலிக பாதை அமைத்து சென்று
வருகின்றனர். 


கண்மாயில் நீர் நிரம்பினால் இந்த பாதையை பயன்படுத்த முடியாது. அந்த சமயங்களில் தண்ணீருக்குள் நனைந்த படிதான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியும். பாதை இல்லாததால் அக்கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. 


நோயாளியை துாக்கி சென்று சேம்பாரில் தான் ஏற்ற வேண்டும். இருபது ஆண்டுகளாக பாதை கேட்டு அக்கிராமமக்கள் போராடி வருகின்றனர். கிராமத்தினர் தொடர்ந்த வழக்கில் பாதை அமைத்து தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கலெக்டர் ஆய்வு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் ஆய்வு செய்தார். பின், கண்மாய் குறுக்கே 16 லட்சம் ரூபாய்க்கு பாலம், 24 லட்சம் ரூபாய்க்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பின் கலெக்டர் மாறியதால் திட்டம் கிடப்பில்
போடப்பட்டது.


இதுவரை பாதை இல்லாததால் அக்கிராமமக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளனர்.
டி.சண்முகம், ஏ.ராஜசேகரன் கூறியதாவது: அனைத்து தேவைகளுக்கும் சேம்பாருக்கு கண்மாய் வழியாகத் தான் செல்ல வேண்டும். கண்மாய் நிரம்பினால் சிக்கல்தான்.


கலெக்டர் முயற்சியால் பாலம், சாலை கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தோம்.
அதுவும் நடக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக விவசாயமும் பொய்த்துவிட்டது, பாதையும் கிடைக்கவில்லை. இதனால் ஊரை காலி செய்வதை தவிர வேறுவழியில்லை, என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024