Sunday, January 28, 2018

தத்கலில்' பாஸ்போர்ட் பெற அதிகாரிகள் கையொப்பம்... தேவையில்லை! வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

Added : ஜன 28, 2018 00:16


புனே: விரைவில் பாஸ்போர்ட் கேட்டு, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்போர், இனி, முதல் நிலை அரசு அதிகாரிகளின் கையொப்பம் பெற வேண்டிய அவசியம் இல்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது. இதனால், 'தத்கல்' முறையில் பாஸ்போர்ட் பெறுவது எளிதாகி உள்ளது.

வெளிநாடு செல்வதற்காக, பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர், பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், ஒரு மாதத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

அவசர வேலையாக வெளிநாடு செல்பவர்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பது வழக்கம். இவர்கள், விண்ணப்பித்ததில் இருந்து, மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட்
வழங்கப்படும்.

'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பவர்கள், தங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும், உண்மையானதா என்பதை உறுதி செய்ய, முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை பெற்று தர வேண்டும்.

மத்திய, மாநில அரசில், இணை செயலர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், போலீஸ் உதவி கமிஷனர், தாசில்தார் ஆகியோர் முதல் நிலை அரசு அதிகாரிகளாக கருதப்படுகின்றனர்.

இந்நிலையில், 'தத்கல்'முறையின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை, பெற்றுத் தர தேவையில்லை என, வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்த மாற்றம், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

வெளியுறவுத்துறை செயலர், தியானேஷ்வர் முலே, கூறியதாவது:மத்திய அரசு, மக்களை முழுமையாக நம்புகிறது. இதை, அவர்களுக்கு உணர்த்தவே, 'தத்கல்' முறையின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு
விண்ணப்பிப்பவர்கள், முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை, பெற்றுத் தர தேவையில்லை என றிவிக்கப்பட்டுள்ளது.வெளியுறவுத்துறையின், மக்கள் ஆதரவு நடவடிக்கையில் இதுவும் ஒன்று. 'தத்கல்' திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைவராலுமே, முதல் நிலை அரசு அதிகாரியின் கையொப்பத்தை வாங்கி விட
முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.இனி, 'தத்கல்' முறையில் விண்ணப்பிப்பவர்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய மூன்று ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும்.
இவை உண்மையானது என்று உறுதியளிக்க யாருடைய கையொப்பமும் இனி தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு சலுகை

தினமும், ஒவ்வொரு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்தும் வழங்கப்படும், பாஸ்போர்ட்களில் ஐந்து சதவீதம், 'தத்கல்' முறையில் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் வழங்குவதில், மாணவர்களுக்கு தனிச் சலுகை இருக்கிறது. ௧௮ வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதாருடன் சேர்த்து, கல்வி நிறுவனம் வழங்கும் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து விண்ணப்பித்தால் போதும்.

வழக்கமான முறையில் விண்ணப்பிக்கும், ௧௮ வயதுக்குட்பட்ட மாணவர்கள், அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால், 'தத்கல்'
கட்டணம் இல்லாமலேயே அவர்களுக்கு பாஸ்போர்ட் உடனடியாக வழங்கப்படும்.
சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதாருக்கு கவுரவம்

Added : ஜன 28, 2018 02:35 |


ஜெய்ப்பூர், 'ஆதார்' கடந்த, 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை கேட்டிராத மக்களே இல்லை எனலாம். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், இலக்கிய திருவிழா நடந்து வருகிறது. அப்போது, பத்திரிகையாளர், சவுரவ் திவிவேதி கூறியதாவது:ஆதார் 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'மித்ரன், நோட்பந்தி, காவ் - ரக் ஷக்' போன்ற வார்த்தைகளும், இந்த சிறப்பை பெறுவதற்காக பரிசீலிக்கப்பட்டன.இருப்பினும், பிற வார்த்தைகளை விட, ஆதார், நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்ட வார்த்தையாக இருந்ததால், அதற்கு, 2017ன், சிறந்த ஹிந்தி வார்த்தை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் வருது, 'அம்பாசடர்' கார் தமிழகத்தில் உற்பத்தியாகிறது


Added : ஜன 28, 2018 04:33

நான்கு ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி நிறுத்தப்பட்ட, 'அம்பாசடர்' ரக கார்கள், மீண்டும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கான ஆலையின் கட்டுமான பணி, ஓசூரில் துவங்கி உள்ளது.

தனக்கென, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தனி அடையாளத்துடன், இந்திய சாலைகளை, அம்பாசடர் ரக கார்கள், கம்பீரமாக அணிவகுத்தன. மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சிவப்பு நிற சுழல் விளக்குடன், அதில், வலம் வருவதை பெருமையாக கருதினர்; இன்றோ, கறுப்பு வண்ணத்துடன், வரலாற்றின் எச்சமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக தென்படுகின்றன.

மாருதி சுசூகி நிறுவனம், 1980ம் ஆண்டுகளில், கால் பதித்தபோது, அதற்கு, சிறிய சறுக்கல் ஏற்பட்டது. கடந்த, 1990க்கு பின், 'போர்டு, ஹுண்டாய்' போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் வர துவங்கியதும், அதன் விற்பனை வேகம் மேலும் குறைந்தது. கடந்த, 2014ல், மேற்கு வங்க ஆலையில், அம்பாசடர் உற்பத்தியை, 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' நிறுவனம் நிறுத்தியது. தற்போது, அதற்கு புத்துயிர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக தொழில் துறையினர் கூறியதாவது: பிரான்சை சேர்ந்த, பி.எஸ்.ஏ., குழுமம், 'பியுஜோ' உள்ளிட்ட, பல்வேறு பெயர்களில், வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில், இரு முறை, கால் பதித்து, அம்முயற்சியை கைவிட்ட, பி.எஸ்.ஏ., மீண்டும் களம் இறங்கியுள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் நடத்தும், சி.கே.பிர்லா குழுமம், அம்பாசடர் என்ற பெயரின் உரிமையை, 50 சதவீதம் தக்க வைத்து, மீதத்தை, பி.எஸ்.ஏ., நிறுவனத்திற்கு, 2017ல் விற்றது.இந்நிலையில், பி.எஸ்.ஏ., நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தன் கார்களுக்கான, 'இன்ஜின், கியர் பாக்ஸ்' போன்றவை அடங்கிய, 'பவர் டிரெய்ங்' உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. அதற்கான கட்டுமான பணி டிசம்பரில் துவங்கிஉள்ளது.

தமிழகத்தில், இரு நிறுவனங்களும் சேர்ந்து, 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. அதில், ஒரு வாகனம், 'அம்பாசடர் ' பெயரில் உற்பத்தியாக உள்ளது. அதனால், பழைய, அம்பாசடர் தயாரிக்கப்படும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

பி.எஸ்.ஏ.,வின், கார்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 'ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்' ஆலையில், இறுதி வடிவம் தரப்படும். அங்கு, 2019ல், வாகன உற்பத்தி துவங்கி, 2020 முதல் சந்தைக்கு வரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
அசுத்தமான மனதுடன் பூஜை செய்வதில் எந்த பலனும் இல்லை: ஐகோர்ட் கருத்து

Added : ஜன 28, 2018 01:37 |.

.


.
சென்னை,'அசுத்தமான மனதுடன், நிறைய பணம் செலவழித்து, பூஜைகள் செய்வதில் எந்த பலனும் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், மண்டப கட்டளை பூஜைக்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'எங்கள் குடும்பம், 70 ஆண்டுகளாக, மண்டப கட்டளை பூஜை செய்து வருகிறது. பிடரியூர் மூன்று கிராம நாட்டு கவுண்டர்கள் மடம் என்ற பெயரில், எங்கள் பெரிய தாத்தா, மடத்தை துவக்கினார்.

இந்த ஆண்டு, தைப்பூசத்தை முன்னிட்டு, மண்டப கட்டளைக்காக, எங்களிடம் கட்டணம் பெற, அறநிலையத் துறை மறுத்து விட்டது. மண்டப கட்டளை பூஜைக்கு, எங்களை அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த, நீதிபதி, ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு: மண்டப கட்டளை பூஜையை, மனுதாரர் நடத்த, கடுமையான ஆட்சேபனை இல்லை. பூஜையின் போது, மனுதாரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கவே ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதில், கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை.

கடவுளின் ஆசி கிடைக்க வேண்டும் என்றால், சுத்தமான, தெளிவான மனது வேண்டும். மனித சமூகத்திடம், அன்பு, பாசம் காட்ட வேண்டும். அசுத்தமான மனது, தீய எண்ணங்களை உடையவர்கள், நிறைய பணம் செலவு செய்து, பூஜைகள் செய்வதால் மட்டும், எந்த பலனும் வந்து விடாது. அவர்களுக்கு வேண்டுமானால், அது திருப்தி அளிக்கலாம்; கடவுளுக்கு திருப்தி அளிக்காது.மகரிஷி சித்த அகத்தியர், 'நம் மனம் சுத்தமாக, தெளிவாக, நேர்மையாக இருந்தால், எந்த மந்திரமும் சொல்ல வேண்டியதில்லை; மனம் சுத்தமாக இருந்தால் தான், மந்திரம் சொல்வதும் சுத்தமாக இருக்கும். அன்பு, பணிவு, தெளிவு, எளிமையாக வாழும் ஒவ்வொருவருக்கும், கடவுளின் ஆசி உண்டு' என, கூறியுள்ளார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரிடம் உரிய கட்டணத்தை பெற்று, மண்டப கட்டளை பூஜை செய்ய, அனுமதிக்க வேண்டும். தங்களுக்கே முழு உரிமை வேண்டும் என கோருபவர்கள், அறநிலையத் துறையை அல்லது சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் சென்ற போது மினி ஆட்டோவில் வளையம் சிக்கி வங்கி ஊழியர் கை துண்டானது

.
மோட்டார்சைக்கிளில் சென்றபோது வங்கி ஊழியரின் கையில் அணிந்திருந்த வளையம் மினிஆட்டோவின் கொக்கியில் சிக்கிக்கொண்டதில் அவருடைய கை துண்டானது. ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜனவரி 27, 2018, 04:00 AM
எடப்பாடி,

இளைஞர்கள் பலர் தங்கள் கைகளில் இரும்பு, எவர்சில்வர் உள்ளிட்ட உலோக வளையங்களை அணிந்து வலம் வருகின்றனர். இவ்வாறு அணியும் வளையங்கள் சிலநேரங்களில் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் உடல் உறுப்புகளை இழக்க நேரிடுகிறது. இதேபோல் ஒரு சம்பவம் எடப்பாடி பகுதியில் நிகழ்ந்து உள்ளது. உருக்கமான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் எடப்பாடியில் இருந்து வீட்டிற்கு செல்ல எடப்பாடி-சங்ககிரி சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எடப்பாடி நோக்கி ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த மினி ஆட்டோ சதீஷ்குமார் அருகே வந்த போது அவரது வலது கை மினி ஆட்டோவில் உரசியது. அப்போது சதீஷ்குமாரின் வலதுகையில் அணிந்திருந்த சில்வர் வளையம் மினிஆட்டோவின் பின்புற கதவு கொக்கியில் மாட்டிக்கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரின் வலதுகை துண்டாகி சாலையில் விழுந்தது. இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறித்துடித்தார்.

இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துண்டான கையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச்சென்றனர். அந்த மருத்துவமனையில் கையை பொருத்தும் வசதி இல்லாததால் உடனடியாக சதீஷ்குமாரை கோயம்புத்தூருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மினி ஆட்டோ டிரைவர் முனுசாமி மகன் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Friday, January 26, 2018

மீண்டும் மீண்டும் வெறுப்பை சம்பாதிக்கும் பிஎஸ்என்எல்; அப்படி என்ன செய்தது.? 

Written By: Muthuraj Published: Friday, January 26, 2018, 8:00 [IST]

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இலவச இரவு அழைப்பு நேரங்களில் திருத்தங்களை நிகழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மீண்டும் வெறுப்பை சம்பாதிக்கும் பிஎஸ்என்எல்; அப்படி என்ன செய்தது.?

வெளியாகியுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் சிடிஎம்ஏ பிக்ஸட் / சி.டி.எம்.ஏ. மொபைல் இணைப்புகளுக்கான இலவச அழைப்பு நன்மைகளானது இனி இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை வழங்கப்படும். இந்த புதிய மாற்றமானது 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் சிடிஎம்ஏ திட்டங்களின் வழியாக வீட்டு வட்டங்களுக்குள்ளான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது. இதன் அர்த்தம் வரம்பில்லாத ஆன்-நெட் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.

! இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை முன்னதாக, இந்த இலவச குரல் அழைப்புகளுக்கான நேர வரம்பானது இரவு 9:00 மணி முதல் காலை 7 மணி வரை என்று இருந்தது. இப்போது இரவு 10:30 முதல் காலை 6 மணி வரை என்று நிறுத்தப்பட்டுள்ளது. அரசு நடத்தும் இந்த டெலிகாம் நிறுவனமானது மீபத்தில் இதே மாதிரியான திருத்தத்தை அதன் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் எப்டிடிஎச் திட்டங்களில் நிகழ்த்தியது.

ஆக்கிரோஷம்

 அதன்படி பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான இலவச வரம்பற்ற இரவு குரல் அழைப்புகளின் வரம்பானது இரவு10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2018 முதல் செயல்படுத்தப்பட்டன. இந்த புதிய ஆண்டு துவங்குவதிலிருந்தே பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பயனர்கள் மீது ஆக்கிரோஷமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது முதலில், இலவச குரல் அழைப்பு நேரங்களை மறுசீரமைப்பதன் மூலம் பிராட்பேண்ட் பயனர்களின் வெறுப்பை சம்பாதித்தது. பின்னர் ஞாயிறு இலவச குரல் அழைப்பு நன்மையை திரும்ப பெற்றது. இப்போது சிடிஎம்ஏ போஸ்ட்பெயிட் திட்டத்தின் நேரங்களை திருத்தியுள்ளது. அழுத்தத்தை உணரமுடிகிறது அழுத்தத்தை உணரமுடிகிறது இந்த நடவடிக்கைகளில் இவர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களிடம் இருந்து பிஎஸ்என்எல் பெறும் அழுத்தத்தை உணரமுடிகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Read more at: https://tamil.gizbot.com/news/bsnl-revises-free-night-voice-calling-timings/articlecontent-pf127338-016494.html?c=hgizbot
“அட்ஜெஸ்ட் பண்ணிக்க...!”- சபலப் பேராசிரியர் கைது 
 
RAGHAVAN M

மாணவி ஒருவரின் சிறு தவறை காரணமாக வைத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய உதவிப் பேராசிரியர் காரைக்காலில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.



காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த செருமாவிலங்கையில் பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்தக் கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.எஸ்.சி. (விவசாயம்) முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே துறையில் காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் மண் அறிவியில் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவி மாலதியின் ரெக்கார்டு நோட்டில் உதவிப் பேராசிரியர் குமரவேல் போட்டிருந்த கையெழுத்து எதிர்பாராவிதமாக தண்ணீர்த் துளிகள் பட்டு அழிந்திருக்கிறது. எனவே, மாலதி உதவிப் பேராசிரியரின் கையெழுத்துப் போலவே தானாகவே போட்டிருக்கிறார். இதனைக் கண்டுபிடித்த உதவிப் பேராசிரியர் குமரவேல் மாலதியை தனிமையில் அழைத்து மிரட்டி, இது பற்றி நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால், 'என் ஆசைக்கு நீ ஒருமுறை இணங்க வேண்டும்' என்று வற்புறுத்தியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன மாலதி, அதற்கு சம்மதிக்கவில்லை. என்றாலும், ஆசிரியரின் தொடர் மிரட்டல் எல்லை மீறியதால் கல்லூரிக்கு விடுப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, புதுச்சேரியில் உள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கும் யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடவே, அதனைக் கண்ட பெற்றோர் பதறிப்போய் காப்பாற்றினார்கள். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியிருக்கிறார் மாலதி.

கொதித்துப்போன பெற்றோர், உடனடியாக புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்துள்ளனர். கிரண்பேடி, உதவிப் பேராசிரியர் குமரவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டார். அதன்படி உதவிப் பேராசிரியர் குமரவேலை கைதுசெய்து, அவர் மீது ஐ.பிசி. 353 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து திருநள்ளாறு காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதுபற்றி காரைக்கால் சீனியர் எஸ்.பி. சந்திரனிடம் கேட்டபோது, “தவறு ஏதும் நடக்கவில்லை என்றாலும், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதை சகிக்கமுடியாது. ஜாமீனில் விடக்கூடிய வழக்கு பதிவுச் செய்த போதிலும், குமரவேலுவை கைதுசெய்து ரிமாண்ட் செய்யச் சொல்லியிருக்கிறேன். ஆசிரியர்கள் இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை வன்iமையாக கண்டிக்க வேண்டும்” என்றார்.

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe

Endoscopic camera used to copy paper in sealed packet CM orders probe 23.08.2026 Raipur: A tiny endoscopic camera was allegedly slipped thro...