Sunday, May 27, 2018

நன்மையும் தீமையும் நம்மால்தான்

By எஸ்ஏ. முத்துபாரதி  |   Published on : 26th May 2018 01:15 AM 
 |
நம் நாட்டில் நடக்கும் லஞ்சம், ஊழல் உட்பட அனைத்துக் குற்றங்களுக்கும் காரணம் பொதுமக்களாகிய நாம்தான். இது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. நமக்கானஆட்சியாளர்கள் குறித்து நாம் பெருமைப்படுவது, குற்றம் சொல்வது எல்லாவற்றையும் நமது மனநிலைதான் நிர்ணயம் செய்கிறது.

பொதுவாக நமக்கு இது தெரிந்ததுதான். ஆனால் நாம் எப்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டுமோ, அப்போது ஏதோ ஒரு மயக்கத்தில் தவறான முடிவை எடுத்து விடுகிறோம். ஒரு நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் எடுக்கும் முடிவே நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பலன் தருவதாகவோ அல்லது பாதிப்படைவதாகவோ அமைந்து விடுகிறது.
ஒரு நாட்டைப் பொருத்தவரைஅல்லது ஒரு மாநிலத்தைப் பொருத்தவரைஅரசு அலுவலகங்களில் நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் நலனுக்காகத்தான். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் எப்போதும் அதை மறந்து விடுகிறார்கள்.

அரசு அலுவலகங்களில் எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு கூடுதல் பலனை எதிர்பார்க்கும் ஓர் அநாகரிக நிலைமை இன்று ஏற்பட்டுவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் திருவாளர் பொதுஜனம்தான்.
பொதுமக்களில் யாராவது ஒருவர் ஏதாவது ஓர் அலுவலுக்காக அரசு அலுவலகத்தை அணுகினால், அவருடைய வேலை முடிவடைவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் ஆகக்கூடும் என்று அங்குள்ள ஊழியர் கூறினால் அதுவரை பொதுஜனம் பொறுத்திருக்க வேண்டும்.
ஆனால், மாண்புமிகு பொதுஜனம் தனது அவசரத்திற்கு ஏற்றபடி அரசு ஊழியருக்கு ஏதாவது ஒரு பலன் கிடைக்கும்படிச் செய்து, தனது சொந்த வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்து வாங்கிச் சென்று விடுவார். இங்குதான் லஞ்சம் ஆரம்பமாகிறது.

இப்படி ஒருவரிடம் வாங்கிய பின்னர், அந்த ஊழியருக்கு இயல்பாகவே மற்றவர்களிடமும் எதையாவது எதிர்பார்க்கத் தோன்றும். அப்படிக் கிடைக்காதபோது, அவர்களின் வேலையை முடித்துத் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது நடக்கும். பிறகு, வேறு வழியின்றிஅவரைஅணுகி விவரம் கேட்டால்,கையூட்டுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவார். பிறகு நமது பொதுஜனம் மேலும் காத்திருக்கப் பொறுமையின்றி தன்னால் இயன்றதைக் கொடுத்து வேலை முடித்துக் கொண்டு விடுவார்.

சாதாரண பிறப்பு சான்றிதழ் வாங்குவதில் ஆரம்பித்து, சொத்துகள் வாங்கும் பத்திரப்பதிவு வரை - நூறு ரூபாயிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை - வேலைக்குத் தகுந்தபடியும் வேலையின் மதிப்பிற்குத் தகுந்தபடியும், இடத்திற்கு ஏற்றபடியும், அவசரத்திற்கு ஏற்றபடியும் தொகை மாறிக்கொண்டே இருக்கும். நிலைமை இப்படியிருக்க, நாம் இந்தச் சமூகத்தில் யாரைக் குற்றம் சொல்வது?

அடுத்ததாக ஊழல். அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஊழல், உலகில் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஓர் அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சில இடங்களில் நூற்றுக்கு ஐந்து சதவீதமாகவும் பல இடங்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமாகவும் இருக்கிறது. இதுபோன்ற முறையற்ற வழிகளில் சென்றால்தான் வேலை முடியும் என்ற நிலையே எங்கும் உள்ளது. நாட்டுக்கு நாடு பணமதிப்பும், பணத்தின் பெயரும் மாறியிருந்தாலும் முறையற்ற செயல்கள் என்பது சர்வதேச அளவில் எங்கும் பொதுவாகத்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட லஞ்சம், ஊழல் போன்ற முறையற்ற செயல்களை நாம் பட்டியலிட்டாலும், அத்தனைக்கும் அடிப்படையாக இருப்பது, மனிதனின் மனதில் எழும் பேராசைதான். எதையும் முறையான வழியில் செய்வோம்; குறிப்பிட்ட வேலைக்காக விண்ணப்பித்திருந்தால் முறைப்படி நமக்கான முறை வரும்போது நமது வேலையை முடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதே முறையானது. நமது முறை வரும் முன் அவசரப்படுவதும், அதற்காக ஏதாவது குறுக்கு வழியைக் கையாள்வதும்தான் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. எதையும் நேர்மையான வழியில் சென்று செய்து முடிக்க வேண்டும் என்கிற உணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

ஏதோ ஒரு பலன் கிடைக்கிறது என்பதற்காக நாமும் முறையற்ற வழியில் பிறருக்கு வேலை செய்து கொடுக்கவும் கூடாது. பிறர் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணும்போது நமக்கும் அது பொருந்துமல்லவா?
கையூட்டு எனும் லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் பல்வேறு விதமான ஊழலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் - 'இந்தப் பலன் எனக்கு மட்டும் அல்ல, மேலதிகாரிகள் வரை பலருக்கும் சேர்த்துதான்' என்பதுதான்.

முறையற்ற செயலுக்கு எத்தனை பேர் கூட்டாளிகள்? அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் வேற்று கிரகத்திலிருந்தா வருகிறார்கள்? அவர்கள் நம்மிலிருந்து சென்றவர்கள்தானே. நாம்தான் நமக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறோம். எனவே, அவர்கள் பதவியில் இருந்து கொண்டு முறையற்ற வழியில் சம்பாதிப்பதும் நமக்குத் தவறாகவே தெரிவதில்லை.

சமூகத்தில் முறையற்ற வழியில் பணம் சம்பாதித்து பெரிய மனிதர்களாக வலம் வருபவர்களைப் பற்றிப் பலரும் பெருமையாக பேசும்போது, தவறான வழியில் பொருள் ஈட்டுவது தவறில்லை என்கிற மனநிலை மற்றவர்களுக்கும் உருவாக்கி விடும். ஆகவே, பொதுமக்களாகிய நாம்தான் சரியான மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்; அவர்கள் தவறு செய்யும்போது அவர்களை நிராகரிக்கவும் வேண்டும்!

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு: சிகிச்சை பெற்றபோது பதிவு செய்யப்பட்டதாக தகவல்

By சென்னை, | Published on : 27th May 2018 02:01 AM


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலைப் பதிவு செய்யக் கூறும் போது ஜெயலலிதா பேசிய சிறு உரையாடலில் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்த உரையாடல் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த உரையாடலை சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் தாக்கல் செய்தார்.

கடந்த 2016 செப்.22-ஆம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படவே அதுகுறித்து மருத்துவருக்குத் தெரிவிக்க அதனைப் பதிவு செய்யும்படி, சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமாரிடம் ஜெயலலிதா கோருகிறார்.

ஒரு நிமிடம் ஏழு விநாடிகள்: ஆடியோ உரையாடல் ஒரு நிமிடம் ஏழு விநாடிகள் வரை நீள்கிறது. இந்த உரையாடலுடன் ஜெயலலிதா தனது உணவு வகைகள் குறித்த பட்டியலையும் அவரே கைப்பட எழுதித் தந்ததாக மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் விவரங்களைத் தாக்கல் செய்தார்.
அதன்படி, கடந்த 2016 ஆக.2-ஆம் தேதி உடல் எடை 106.9 கிலோவாகவும், காலை உணவாக ஒன்றரை இட்லி, நான்கு துண்டு ரொட்டி, காபி 400 மி.லி, மதியம் ஒன்றரை கப் சாதம், கொழுப்பு இல்லாத தயிர் ஆகியனவும், இரவு உணவாக அரை கப் உலர் பழங்களும், இட்லி உப்புமா ஒரு கப், தோசை 1, ரொட்டி 2 துண்டுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அவற்றைத் தான் உண்டு வந்ததாகக் கூறி ஜெயலலிதா எழுதித் தந்ததாக சிவக்குமார் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 செப்.27-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட உரையாடல் விவரம்...
ஜெயலலிதா: மூச்சுத் திணறல் கேட்கிறதா?
சிவக்குமார்: பெரிசா இல்லை.
ஜெயலலிதா: அப்போ இருந்த போது கூப்பிட்டேன். அப்போது எடுக்க முடியவில்லை என்றீர்கள்.
சிவக்குமார்: விஎல்சி (பதிவு செய்வதற்கான மென்பொருள்) அப்ளிகேஷன் டவுன்லோடு பண்ணிக் கொண்டிருந்தேன்.
ஜெயலலிதா: என்ன ஒண்ணு கிடக்க, ஒண்ணு.
சிவக்குமார்: சரி. சரி.
ஜெயலலிதா: நீங்களும் சரி. எடுக்க முடியலன்னா விடுங்க.
(இதைத் தொடர்ந்து, பேச முடியாமல் இருமுகிறார்.....ஜெயலலிதா)
ஜெயலலிதா: நல்லா வருதே....வீல் வீல்-னு...தியேட்டரில் பிரண்ட் சீட்டில் விசில் அடிக்கிற மாதிரி.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தத்தின் அளவை வேறொரு மருத்துவர் பரிசோதிக்கிறார். அப்போது அவரிடம்...
ஜெயலலிதா: எவ்வளவு
மருத்துவர்: 140-80 இருக்கு. கொஞ்சம் உயர்வா இருக்கு.
ஜெயலலிதா: எனக்கு இது ஓ.கே. நார்மல் தான்.
சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவர்கள் சாதனை

Added : மே 27, 2018 00:21

காரைக்குடி:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. அனைத்து மாணவர்களும் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனர்.வணிகவியல் பிரிவை சேர்ந்த ஜவகர் ஸ்ரீராம் 500-க்கு 469 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அறிவியல் பிரிவில் ராகவ் 452 மதிப்பெண்ணும், ராஜூ விக்னேஷ் 437 மதிப்பெண் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடமும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குமரேசன், முதல்வர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. ஸ்ரீபிரகாதம்பாள் 475, சரவணன் 473, பத்ரிநாத் 466 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர். 450-க்கு மேல் 4 மாணவர்களும், 400-க்கு மேல் 6 மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சத்தியன், முதல்வர் சிவக்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி ஷீலா இம்மாகுலேட், துணை முதல்வர்கள் வெங்கடரமணன், ரீட்டா ஜார்ஜ், கல்வி ஆலோசகர் குழந்தைராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி 94.3 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அப்பள்ளியை சேர்ந்த எஸ்.காயத்திரி 449 மதிப்பெண்ணும், எம்.சகாஹ்மகாராஜன் 441, கார்த்திக் ஸ்ரீராம் 427 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர்.இவர்களை சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, முதல்வர் (பொ) நேரு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் 31 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சசிப்பிரியா, மாணவர் வீர அருண் ராஜ் ஆகியோர் 500 க்கு 468 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவர் கார்த்திக் 461 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி சிரஞ்சினி 435 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.இத்தகவலை பள்ளி முதல்வர் முத்தையா தெரிவித்துள்ளார்
முதுநிலை மருத்துவ இடம் கிடைக்காதவர்களுக்கு கட்டணம்

Added : மே 26, 2018 22:50

சென்னை, 'முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்காதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் திரும்ப அளிக்கப்படும்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய சுகாதார சேவை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட, அகில இந்திய கவுன்சிலிங்கில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் கிடைக்கப் பெறாதவர்களுக்கு, அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப தரும் நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள, வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டு வருகிறது.புனே ராணுவ மருத்துவ கல்லுாரி, மத்திய மருத்துவ பல்கலை, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கும், கூடிய விரைவில், கல்வி கட்டணம் திரும்ப அளிக்கப்படும். இதில், சந்தேகம் இருந்தால், financemcc1@gmail.com என்ற, மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை-பணம் திருட்டு




சேலையூர் அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 40 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

மே 27, 2018, 05:17 AM
தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம், சந்தனாம்மாள் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 60). ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தது.

பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

சீனிவாசன், தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடிச்சென்று உள்ளனர்.

இதுபற்றி சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மாநில செய்திகள்

திருவாரூரில் தியாகராஜர் சுவாமி கோவிலில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது




திருவாரூரில் தியாகராஜர் சுவாமி கோவிலில் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியது.

மே 27, 2018, 07:17 AM

திருவாரூர்,

தமிழகத்தின் திருவாரூரில் மிக பழமையான தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. சைவ தலங்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற மற்றும் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகவும் உள்ளது.

ஆசியாவிலேயே மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர் இக்கோயிலின் தேராகும். இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவில்கலந்துகொள்ளும்பக்தர்கள் மற்றும்பொதுமக்கள்தேரினைகோயிலைசுற்றிஉள்ளவீதிகளின் வழியே பக்தி பரவசத்துடன்இழுத்துவருவார்கள்.
மாநில செய்திகள் இலவச பயணம்: மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

 

  மெட்ரோ ரெயிலில் நேற்று இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மே 27, 2018, 05:30 AM

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.

இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:

தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-

மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.

இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-

என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.

இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-

மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...