Sunday, May 27, 2018


ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு: சிகிச்சை பெற்றபோது பதிவு செய்யப்பட்டதாக தகவல்

By சென்னை, | Published on : 27th May 2018 02:01 AM


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலைப் பதிவு செய்யக் கூறும் போது ஜெயலலிதா பேசிய சிறு உரையாடலில் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்த உரையாடல் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த உரையாடலை சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் தாக்கல் செய்தார்.

கடந்த 2016 செப்.22-ஆம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படவே அதுகுறித்து மருத்துவருக்குத் தெரிவிக்க அதனைப் பதிவு செய்யும்படி, சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமாரிடம் ஜெயலலிதா கோருகிறார்.

ஒரு நிமிடம் ஏழு விநாடிகள்: ஆடியோ உரையாடல் ஒரு நிமிடம் ஏழு விநாடிகள் வரை நீள்கிறது. இந்த உரையாடலுடன் ஜெயலலிதா தனது உணவு வகைகள் குறித்த பட்டியலையும் அவரே கைப்பட எழுதித் தந்ததாக மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் விவரங்களைத் தாக்கல் செய்தார்.
அதன்படி, கடந்த 2016 ஆக.2-ஆம் தேதி உடல் எடை 106.9 கிலோவாகவும், காலை உணவாக ஒன்றரை இட்லி, நான்கு துண்டு ரொட்டி, காபி 400 மி.லி, மதியம் ஒன்றரை கப் சாதம், கொழுப்பு இல்லாத தயிர் ஆகியனவும், இரவு உணவாக அரை கப் உலர் பழங்களும், இட்லி உப்புமா ஒரு கப், தோசை 1, ரொட்டி 2 துண்டுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அவற்றைத் தான் உண்டு வந்ததாகக் கூறி ஜெயலலிதா எழுதித் தந்ததாக சிவக்குமார் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 செப்.27-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட உரையாடல் விவரம்...
ஜெயலலிதா: மூச்சுத் திணறல் கேட்கிறதா?
சிவக்குமார்: பெரிசா இல்லை.
ஜெயலலிதா: அப்போ இருந்த போது கூப்பிட்டேன். அப்போது எடுக்க முடியவில்லை என்றீர்கள்.
சிவக்குமார்: விஎல்சி (பதிவு செய்வதற்கான மென்பொருள்) அப்ளிகேஷன் டவுன்லோடு பண்ணிக் கொண்டிருந்தேன்.
ஜெயலலிதா: என்ன ஒண்ணு கிடக்க, ஒண்ணு.
சிவக்குமார்: சரி. சரி.
ஜெயலலிதா: நீங்களும் சரி. எடுக்க முடியலன்னா விடுங்க.
(இதைத் தொடர்ந்து, பேச முடியாமல் இருமுகிறார்.....ஜெயலலிதா)
ஜெயலலிதா: நல்லா வருதே....வீல் வீல்-னு...தியேட்டரில் பிரண்ட் சீட்டில் விசில் அடிக்கிற மாதிரி.
இதனிடையே, ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தத்தின் அளவை வேறொரு மருத்துவர் பரிசோதிக்கிறார். அப்போது அவரிடம்...
ஜெயலலிதா: எவ்வளவு
மருத்துவர்: 140-80 இருக்கு. கொஞ்சம் உயர்வா இருக்கு.
ஜெயலலிதா: எனக்கு இது ஓ.கே. நார்மல் தான்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...