Monday, May 28, 2018

ஒரே மேடையில் 52 தம்பதியரின் 70ம் திருமணம்

Added : மே 28, 2018 01:20




காரைக்குடி:காரைக்குடியில், 52 தம்பதியருக்கு, 70ம் திருமணம், விமரிசையாக நடந்தது.

மனிதன் செய்ய வேண்டியதாக, 41 வகை சடங்குகள், இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதில், பல சடங்குகள், குழந்தை பருவத்திலும், வாலிப பருவத்திலும், தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

அதன் பின், தீயவற்றிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, 60, 70, 80, 90, 100 வயதில் சாந்தி சடங்குகளை செய்து கொள்கின்றனர். செட்டிநாட்டு நகரத்தார், இந்த சாந்தி நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில், நேற்று, 52 நகரத்தார் தம்பதியருக்கு, 70வது பீமரதசாந்தி விழா விமரிசையாக நடந்தது. செட்டிநாட்டின், 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார், இதில் பங்கேற்றனர்.
காலை, 7:00 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம்   நடந்தது. பின், 102 கும்பங்கள், யாகசாலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து, தம்பதியருக்கு கும்ப கலசங்கள் வழங்கப்பட்டு, அவர்களது வாரிசுதாரர்கள் அபிஷேகம் செய்தனர். காலை, 11:30 மணிக்கு, 52 ஜோடிகளும், திருப்பூட்டி கொண்டனர். தம்பதியரின் பிள்ளைகள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...