Monday, May 28, 2018

வங்கி கிளைகள் திறப்பு பணிச்சுமை அதிகரிப்பு

Added : மே 28, 2018 02:31 | 

 'ஐந்து ஆண்டுகளில், வங்கி கிளைகள் திறப்பு அதிகமானதால், வங்கி ஊழியர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது' என, சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலர், வெங்கடாச்சலம் கூறியதாவது: தேசிய வங்கிகளில், நாடு முழுவதும், 70 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், 68 ஆயிரம் கிளைகள் இருந்தன. தற்போது, 90 ஆயிரம் கிளைகள் உள்ளன. புதிதாக, 22 ஆயிரம் கிளைகள், ஐந்து ஆண்டுகளில் துவக்கப்பட்டுள்ளன. புதிதாக துவங்கப்பட்ட வங்கி கிளைகளுக்கேற்ப, ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. புதிய கிளைகளில், ஒரு மேலாளர், காசாளர் மற்றும் கணக்காளர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். பதவி நிலை இல்லாத அதிகாரிகளை, வங்கிகளின் கிளை மேலாளராக நியமிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது.

இதன் காரணமாக, ஊழியர்கள் மீது, அதிக சுமை ஏற்றப்படுகிறது. அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாகவும், வாராக் கடன் மீது சரியான கவனம் செலுத்த தவறியதாலும், ஐந்து ஆண்டுகளில், வாராக் கடனின் அளவு, ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வாராக் கடன்களை ஈடுகட்ட, வங்கி நிகர லாபத்தில், 70 சதவீதம் தொகை ஒதுக்கப்படுகிறது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024