Wednesday, May 30, 2018

தேனி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற 500 பேருக்கு கண் எரிச்சல் : அதிக வெளிச்ச விளக்கே காரணம் என டாக்டர்கள் விளக்கம்

Added : மே 30, 2018 01:50



தேனி; தேனி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு அதிக வெளிச்ச மின்விளக்கால் கண்பாதிப்பு ஏற்பட்டது.தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழா நான்கு நாட்களாக நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு நெஞ்சில் கத்தியை வைத்து கீறும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரத்தகாயங்களில் விபூதி வைத்தனர்.அருகில் இருந்தவர்களின் கண்களில் விபூதி துாசி விழுந்துள்ளது. விபூதியில் ரசாயனம் கலந்ததால் கண் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.தேனி கண் மருத்துவமனைகளுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அரவிந்த் கண் மருத்துவமனையில் மட்டும் 42 குழந்தைகள் உட்பட 349 பேர் சிகிச்சைக்காக குவிந்தனர். சிறிது நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.ரசாயனம் இல்லைதிருவிழா நிர்வாக குழு உறுப்பினர் வைரவன் கூறியதாவது: நிர்வாகத்தின் செலவில் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளோம். விபூதியை ஆய்விற்கு அனுப்பினோம். அதில் எந்த ரசாயனமும் இல்லை என்று கூறிவிட்டனர், என்றார்.கண் பாதிக்கப்பட்ட நாகராஜ் கூறியதாவது: நிகழ்ச்சியின் போதே கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. காலையில் எழுந்தபோது கண்களை திறக்க முடியவில்லை, என்றார்.கண் டாக்டர்கள் கூறியதாவது: திருவிழாவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததே கண்பாதிப்பிற்கு காரணம். கண்களுக்கு சொட்டுமருந்து தரப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைவருக்கும் குணமாகிவிடும், என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024