Wednesday, May 30, 2018

இன்றும், நாளையும் வங்கிகள் 'ஸ்டிரைக்'; ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்படையும்

Added : மே 30, 2018 06:31



ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும்(மே 30, 31) வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோ பரில் முடிந்தது. 2017 நவ., முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து, வங்கி நிர்வாகத்துடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது.

கடைசியாக, மே, 28ல், டில்லியில் உள்ள தொழிலாளர் நல தலைமை ஆணையருடன், சமரச பேச்சு நடந்தது; இந்த பேச்சு தோல்வில் முடிந்தது. இதையடுத்து, 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, இன்றும், நாளையும், 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில், வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகத்தில், 300 கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், 2,000 கோடி ரூபாய் வரை, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.

வாடிக்கையாளர் நலன் கருதி, வங்கியின் அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...