Monday, May 28, 2018

மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து சஸ்பெண்ட் ஆன மாணவர்: சிபிஎஸ்இ தேர்வில் 91 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி

Published : 27 May 2018 13:01 IST
T
திருவனந்தபுரம்





கேரளாவில் மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91 சதவீத மதிப்பு பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியைப் பாராட்டுவதற்காக பிளஸ் 2 மாணவர் கட்டிப்பிடித்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மாணவர் மாணவி இருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 
இடைநீக்கத்தினால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை மாணவருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவரின் பெற்றோர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்தனர். மாணவியையும் இடைநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.

இதையடுத்து செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர், மாணவி, பெற்றோரிடையே சமரச முயற்சிகள் நடந்தன. திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. மாணவரையும் மாணவியையும் மீண்டும் சேர்த்துக் கொண்டது அந்த பள்ளி.

எனினும் அந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகம் சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கியது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் பொதுத் தேர்வை எழுதினார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவர் 91.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவர் ஆங்கிலத்தில் 100க்கு, 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் 99, வணிகவியலில் 88, கணக்கு பதிவியலில் 92, உளவியலில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுபற்றி அந்த மாணவரின் தந்தை கூறுகையில் ‘‘எனது மகனின் ஒழக்கம் பற்றி பலரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் அவர் சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்’’ எனக் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024