தமிழகத்தை வாட்டிய கத்திரி வெயில் இன்று விடைபெறுகிறது
Added : மே 28, 2018 06:59 |
சென்னை: நடப்பாண்டு கோடையில், மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம்(கத்திரி வெயில்) இன்றுடன் விடைபெறுகிறது.
ஆண்டுதோறும் கோடையில் அதிகப்பட்ச வெயில் அக்னி நட்சத்திரத்தில் (கத்திரி) மக்களை வாட்டி வதைக்கும். வெயில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை அதிகரிக்கும். அனல் காற்று வீசும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக அமைந்தது.
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி 24 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில், இன்றுடன் விடைபெறுகிறது. இந்த நாட்களில் வெயில் அதிகபட்சமாக 100 டிகிரிக்கு குறைவாகவே பதிவாகியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கோடை மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தபின், அதிக பட்ச வெயில் இருக்காது. பருவமழை துவங்கும் போது வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment