Monday, May 28, 2018

நடுவழியில் நின்ற சிறப்பு ரயில்; சிக்கி தவித்த திருப்பூர் பயணியர்

Added : மே 28, 2018 02:55


திருப்பூர் : ஷீரடி சிறப்பு ரயிலில் புறப்பட்ட திருப்பூர் பயணியர், நடுவழியில் உணவின்றி தவித்தனர்.

திருப்பூரில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, திருப்பூரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம், ஐ.ஆர்.டி.சி., ஒப்புதலுடன், கடந்த, 25ம் தேதி, 940 பயணிகள், 14 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்த, 26ம் தேதி மதியம், தரிசனம் முடித்து, மீண்டும், 2௮ல் திருப்பூர் திரும்பும் வகையில், பயண திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், நேற்று மதியம் வரை, சீரடி சென்றடையாமல், ரயிலில் பயணியர் காத்திருக்கின்றனர். குறைவான பணம் எடுத்துச் சென்றவர்கள், குழந்தைகளுடன், உணவின்றி தவிப்பதாக தெரிவித்தனர்.

சேலம் கோட்ட, ஐ.ஆர்.டி.சி., மூத்த மேலாளர், விஜ்வனிடம் கேட்ட போது, ''ஷீரடி வழித்தடத்தில் நெரிசல் அதிகம் என்பதால், இதுபோன்று சிறப்பு ரயில் இயக்க அனுமதியில்லை.''இருப்பினும், டிராவல்ஸ் ஏஜென்சியினர், 'புக்கிங்' செய்து விட்டதால், வேறு வழியின்றி ரயில் இயக்க அனுமதியளித்தோம். செல்லும் வழியில் குடிநீர் மற்றும் உணவுக்காக, ரயிலை, 50 நிமிடம் வரை நிறுத்தியுள்ளனர். ''இதனால், அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு ரயில் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலால், அந்த வழித்தடத்தில் இயங்கிய, 14 ரயில் போக்குவரத்து தாமதமானது,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024