Thursday, May 31, 2018


Rajini gets taste of bitter politics after victim asks ‘who are you?’

Superstar Gets Trolled On Social Media



Pradeepkumar.V@timesgroup.com

Chennai:

K Santhosh Raj wasn't born when Rajinikanth's 1989 flick ‘Raja Chinna Roja’ was released. “Superstar-u yaaru-nu ketta, chinna kozhandaiyum sollum," (Even a child will answer the question who is superstar") goes the lyrics in a popular song in the movie.

On Wednesday, Santhosh posed this question not to any child, but to the actor's face. "Who are you?" asked the 21-year-old Tuticorin native, to which Rajini responded, "I am Rajinikanth!"

A video clip which caught this momentary exchange then went viral on social media unleashing trolling of a kind that Rajini had never witnessed before.

Within a few hours, twitterati created, and made a trend out of hashtags #Naan-ThanPaRajinikanth (I am Rajinikanth) and #AntiTamilRajinikanth. Some tweeted with wit while others used memes juxtaposing Santhosh's question with a scene from one of Rajini films. For instance, a picture of a bloodied Rajini walking out of his palatial residence in the 1995 flick ‘Muthu’ or the picture of Rajini living through his notorious gangster past in ‘Baashha’, parodied well with Santhosh's question.

Several users were not so kind. "Narikaalan," said a tweet from user @aekumaran, a wordplay on the name of Rajini's character in his upcoming ‘Kaala’.

Another user @NaranayaM tweeted, "If you who merely add salt to your food could be so arrogant, imagine how arrogant we who produce that salt could be."

Political analysts took a dim view of what they considered a PR fiasco for Rajini. "This is a big setback (for Rajini)," said analyst 'Tharasu' Shyam.

"He may have intended to call the fringe elements associated with the protest as anti-socials. But saying so, given the current atmosphere, would suggest that Rajini is calling the common people as anti-socials," Shyam said.

It was normal for Rajini to run into resistance at Tuticorin considering he had made no attempt to connect with the people in the run up to the violence, said political commentator M Kasinathan.

"There was no statement (from Rajini) on the protests for 100 days. At least, the Rajini Makkal Mandram members should have been in touch with the protesters. The incident shows that the coordination between leadership and the support is not at a satisfactory level," Kasinathan said.

Had Rajini not deviated from his political strategy, Wednesday's fiasco could have been avoided, Kasinathan added.

Wednesday, May 30, 2018

பிரசாரத்துக்கு வந்த 'போலி' கோலி... மக்களை ஏமாற்றிய தில்லாலங்கடி அரசியல்வாதி 


எம்.குமரேசன்


திரைப்படம் ஒன்றில், நடிகர் கமல்ஹாசனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவருவதாக கிராம மக்களிடையே கஞ்சா கருப்பு வாக்குறுதி கொடுப்பார். மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு, கமல்ஹாசன் வேடத்தில் நடித்த சிறுவனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவந்து ஊர் மக்களிடையே தர்ம அடி வாங்குவார். அதே போல, தனக்காகத் தேர்தல் பிரசாரம்செய்ய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வருகிறார் என்று புனே அருகே ஊர் மக்களை ஏமாற்றியிருக்கிறார், லோக்கல் அரசியல்வாதி.



ஸ்ரீரூர் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. விட்டல் கண்பத் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மோகம் அதிகம் என்பதால், தேர்தல் நேரத்தில் அவர்களைக் கவர கிரிக்கெட் கிட்டுகளை வழங்கி இளைஞர்களின் ஓட்டுகளைப் பெற அரசியல்வாதிகள் முயல்வார்கள். கிரிக்கெட் போட்டி நடத்த நன்கொடைகளைத் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். கண்பத், இவற்றையெல்லாம் தாண்டி சற்று வித்தியாசமாக யோசித்தார். கண நேரத்தில் அட்டகாசமான ஐடியா உதித்தது.

தனக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்ய விராட் கோலியே கிராமத்துக்கு வர இருப்பதாக இளைஞர்களிடம் கண்பத் கூறத் தொடங்கினார். விராட் கோலியுடன் கண்பத் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அடிக்கப்பட்ட பேனர்கள் கிராமம் எங்கும் வைக்கப்பட்டிருந்தன. இளைஞர்களும் இந்திய கேப்டனைப் பார்க்கும் ஆர்வத்துடன் இருந்தனர். சொன்ன மாதிரி, சொன்ன தினத்தில் விலை உயர்ந்த காரில் விராட் கோலி கிராமத்துக்கு வந்து இறங்கினார். கண்பத்துக்காக பிரசாரத்திலும் ஈடுபட்டார். கண்பத் விவரமாக யாரையும் 'போலி' கோலி அருகே நெருங்கவிடவில்லை.



 மகிழ்ச்சியில் திளைத்த இளைஞர்களோ கோலியைக் காண முண்டியடித்தனர். ஒரு சிலர் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போதுதான், வந்திருப்பது விராட் கோலி அல்ல 'போலி ' கோலி என்று அறிந்துகொண்டனர். தேர்தலில் வெற்றிபெற அவரைப் போன்ற தோற்றமுடையவரை கண்பத் அழைத்துவந்திருப்பது தெரிந்து ஏமாற்றமடைந்தனர். உண்மை தெரிந்ததும் கண்பத், 'போலி' கோலியுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

`நம்பரும் போயிடும்... பணமும் திருடப்படும்!” - டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி #SimSwapping


ச.அ.ராஜ்குமார்   vikatan 30.05.2018

தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்' (SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.

ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.




`சிம்-ஸ்வாப் ' மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, ``தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்" என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.

அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.

அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.

கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஓ.டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன.

இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், ``எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.

 கொஞ்சம் உஷாராகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.

திருவிழாவில் வழங்கப்பட்ட திருநீறில் பிரச்னையா? 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! 


எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி   vikatan 30.05.2018

'திருநீறு’ எனப்படும் விபூதியைப் பூசிக்கொண்டால் கண்கள் பாதிக்கப்படுமா? `இதென்ன கேள்வி?’ என்கிறீர்களா? உண்மை. இந்த விபரீதம் நடந்திருப்பது தேனி மாவட்டம், போடி அருகேயிருக்கும் கொடுவிலார்பட்டியில்! அங்கே நடந்த கோயில் திருவிழாவில், திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.



கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கிறது மதுராமலிங்கம் செளடாம்பிகையம்மன் கோயில். பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கத்திவிடும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் பக்தர்கள். அதாவது, கத்தியால் தங்களின் வெற்றுடம்பில் அடித்துக்கொள்ளும் வேண்டுதல்! அப்போது உடலில் ஏற்படும் காயத்தில் திருநீறு பூசிக்கொள்வார்கள். அதன்படி, கத்திவிடும் நேர்த்திக்கடன் முடிந்ததும், எல்லா பக்தர்களின் உடலிலும் திருநீறு பூசப்பட்டது. அப்போதே சிலருக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. இரவு நேரம் என்பதால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஊர் மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட கிராம நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை தேனி நகரில் அமைந்திருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

"திருவிழா முடிஞ்ச பிறகு எல்லாருமே தூங்கப் போயிட்டோம். ஆனா எல்லாருக்குமே கண்ணுல எரிச்சல் இருந்திருக்கு. தண்ணீரால முகத்தையும் கண்களையும் கழுவிட்டுப் படுத்துட்டோம். ஆனா எரிச்சல் தாங்க முடியலை. எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குறவங்களும் அதே மாதிரி கண் எரிச்சல் இருக்குறதாச் சொன்னாங்க. சிலர் ராத்திரியே மருத்துவமனைக்குக் கிளம்பிப் போயிட்டாங்க.



என்னால ராத்திரியெல்லாம் தூங்கவே முடியலை. காலையிலதான் ஊர்ல நிறையப் பேருக்குக் கண் எரிச்சல் இருக்குறது தெரிஞ்சுது. கண் சிவப்பு நிறத்துல மாறிடுச்சு. கண்ணுலருந்து தண்ணீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு. உடனே நாங்க எல்லாரும் மருத்துவமனைக்கு வந்துட்டோம். இங்கே சொட்டு மருந்து கொடுத்தாங்க. திருவிழாவுல குடுத்த திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணம்னு சொல்றாங்க. உடம்புல கத்திவிட்ட அத்தனைபேருக்கும் கண்கள்ல எரிச்சலும் வலியும் இருக்கு. திருநீறுல ரசாயனம் எதையாவது கலந்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு. அந்தத் திருநீறையும் கையோட கொண்டுவந்திருக்கோம். ஹாஸ்பிட்டல்ல கொடுத்திருக்கோம். கண்கள் பாதிக்காம இருந்தா சரி’’ என்கிறார் பாதிக்கப்பட்ட ரவீந்திரன், கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.



அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்களில் பாதிப்பு ஏற்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடக்கம். அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் பாதிப்புக்கு என்ன காரணம் என்று அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, விளக்கம் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

இது தொடர்பாக தேனி மாவட்டப் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "நேற்று திருவிழாவில் கத்திபோடும் நேத்திக்கடன் நடைபெற்றிருக்கிறது. அப்போது வழங்கப்பட்ட திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணமா அல்லது திருவிழாவுக்காகப் போடப்பட்டிருந்த ராட்சத சோடியம் மின் விளக்குகள் காரணமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

சோடியம் விளக்குகளைப் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படுமா என்று ஒரு கண் மருத்துவரிடம் கேட்டோம். "நிச்சயம் பாதிக்கப்படும். 2,000 வாட் திறன் கொண்ட ராட்சத சோடியம் விளக்குகள் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண் எரிச்சல், கண் சிவந்து போவது, கண்ணீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற விளக்குகளால் பார்வைகூடப் பறிபோகலாம். இதே மாதிரியான சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன. எனவே, இது போன்ற விழாக்களில் அதிகத் திறன்கொண்ட மின் விளக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால், உடனே கண் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் கண் எரிச்சல் குணமாகும்’’ என்றார் அந்த மருத்துவர்.
சென்னை கொடுங்கையூர், பெருங்குடி... குப்பை மலைகளுக்கு அருகில் ஒரு சாபக்கேடான வாழ்க்கை! 

இளவரசன்  vikatan
30.05.2018 

சென்னையின் குப்பைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டப்பட்டு, மொத்தமாகச் சேர்ந்து சிறு சிறு குன்றுகளாக மாறி நிற்கின்றன. அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலே இன்னவென்று சொல்ல முடியாத கடும் துர்நாற்றம் வீசுகிறது; நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிற மாதிரி காற்றில் அத்தனை இறுக்கம்; உடனே அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்பது மாதிரி ஓர் அசெளகர்ய உணர்வு ஏற்படுகிறது.... 30 ஆண்டுகளாக அங்கேயே வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மாநகரத்தின் ஒட்டுமொத்த திடக்கழிவுகளும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகளில்தான் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.



வட சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 270 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,100 முதல் 2,300 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதேபோல பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கு, 1988-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதன் பரபரப்பளவு 228 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,200 முதல் 2,400 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்தக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளால் அந்தப் பகுதிகளில் ஏற்படும் முதல் பிரச்னை... கடுமையான துர்நாற்றம். மனிதர்களால் தாங்கவே முடியாத துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டுதான் அதற்கு அருகிலேயே வசிக்கிறார்கள் மக்கள். இவர்களுக்கு இந்தக் குப்பைக் கிடங்கால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்ற பிரச்னைகள் சர்வ சாதாரணமாக ஏற்படுகின்றன. பெருகியிருக்கும் ஈக்கள், கொசுக்கள், எலிகள் மூலமாகத்தான் விதவிதமான தொற்றுநோய்களும் பரவுகின்றன.

இந்த பூமியில் அரிதான நிலப்பகுதி நன்னீர் சதுப்பு நிலம். பாதுகாக்கப்படவேண்டிய நிலப்பகுதிகளில் சதுப்பு நிலமும் ஒன்று. பல்லுயிர் வளரும் இதை `அலையாத்தி காடுகள்’ என்று சொல்வார்கள். பள்ளிக்கரணை அப்படிப்பட்ட சதுப்பு நிலப் பகுதி. இந்த அரிய நிலப்பகுதியை குப்பைக் கிடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று, பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது.



பெருநகர சென்னை மாநகராட்சி என்னென்னவிதமான கழிவுகள், எவ்வளவு சதவிகிதம் கொட்டப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி...
* உணவுக் கழிவுகள் - 8 சதவிகிதம்
* பசுமைக் கழிவுகள் - 32.25 சதவிகிதம்
* மரக் கழிவுகள் - 6.99 சதவிகிதம்
* பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் - 5.86 சதவிகிதம்
* தொழிற்சாலைக் கழிவுகள் - 1.18 சதவிகிதம்
* உலோகக் கழிவுகள் - 0.03 சதவிகிதம்
* துணிக் கழிவுகள் - 3.14 சதவிகிதம்
* காகிதக் கழிவுகள் - 6.45 சதவிகிதம்
* ரப்பர் மற்றும் தோல் கழிவுகள் - 1.45 சதவிகிதம்
* கட்டடக் கழிவுகள் - 34.65 சதவிகிதம்

கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு எதிரில், 100 அடிக்கும் குறைவான தூரத்திலேயே இருக்கிறது வீட்டு வசதி வாரியக் குடியுருப்புப் பகுதி. அங்கே வசிக்கும் ஒருவர் சொல்கிறார். ``24 மணி நேரமும் கெட்ட நாத்தத்தை சுவாசிச்சுக்கிட்டேதான் வாழவேண்டியிருக்கு. ராத்திரியில கொசுத் தொல்லை, பகல்ல ஈ தொல்லை. எங்களுக்கு இது சாபக்கேடான வாழ்க்கை. மாசா மாசம் உடம்பு சரியில்லாமப் போயிடுது. உடம்பு சரியில்லைன்னா, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குப் போவோம்; ஊசி போடுவாங்க, மாத்திரைகள் கொடுப்பாங்க; ஆனா அடுத்த மாசமே மறுபடியும் ஏதாவது பிரச்னை வந்துடும். குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல்னு எப்பவும் ஏதாவது வந்துக்கிட்டே இருக்கு. சம்பாதிக்கிற பணத்துல பாதிக்குமேல ஆஸ்பத்திரிக்கே சரியாப் போகுது. கொசுக்கடியால சரியான தூக்கமில்லை, சருமத்துல ஏதாவது பாதிப்பு வந்துடுது, மூச்சுவிடுறது சிக்கலாகிடுது, இன்னும் ஆஸ்துமா, டி.பி-னு என்னென்னவோ நோய்களால அவதிப்படுறோம். இங்கே மாநகராட்சிக்காரங்க வந்து கொசு மருந்து அடிச்சே ஆறு மாசம் இருக்கும். எத்தனையோ தடவை போய் சொல்லிட்டோம்... ஆனாலும் மருந்து அடிக்க மாட்டேங்கிறாங்க...’’ - நீள்கிறது அவரின் வேதனைக் குமுறல்.



சற்று தூரத்தில் 50 வயதான ஓர் அம்மா நிதானமில்லாமல், முகமெல்லாம் வீக்கத்தோடு படுத்திருந்தார். என்னவென்று விசாரித்தோம், ``இந்த அம்மா ஒரு வருசத்துக்கு முன்னாடி நல்லாத்தான் இருந்தாங்க. என்ன பிரச்னைன்னே தெரியலை. திடீர்னு முகம், கை, காலெல்லாம் வீங்கிக்கும். இவங்களுக்கு எழுந்து நிக்கறதுக்கே தெம்பு இல்லாமப் போச்சு. டாக்டர்கிட்டப் போனா, ஊசி போடுவாங்க, மாத்திரை கொடுப்பாங்க. அவ்வளவுதான். பிரச்னை என்னன்னு விளக்கமா சொல்ல மாட்டாங்க. ஒரு வாரம் நல்லாயிருப்பாங்க. அப்புறம் மறுபடியும் கை, கால் வீங்கிக்கும்...’’ என்கிறார் ஒருவர். அவர் சொன்னதைப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அந்த அம்மா.

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால், உடல்நல பாதிப்புகள் மட்டுமல்ல... நிலத்தடி நீரும் அந்தப் பகுதிகளில் மிக மோசமாக மாசடைந்து வருவதாகச் சொல்கிறார் சமூக செயற்பாட்டாளர் உதய் ராஜ்... ``பெரிய குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளில் இருக்கும் வேதிப் பொருள்கள், கரிமப் பொருள்கள், மழைநீருடன் கலந்து, கீழே வடியும்போது கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை `லீச்சேட்’ (Leachate) என்று சொல்வார்கள். இந்த நீர், நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து இருக்கிறது. அந்த நீரை எடுத்துச் சோதனை செய்ததில் உலோகத் துகள்கள், ஆர்சனிக் போன்ற உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருக்கின்றன. சதுப்புநிலம் என்பதால், இந்த பாதிப்பு பள்ளிக்கரணைப் பகுதியில் மிக அதிகமாக இருக்கும். குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து தனியார் அமைப்புகள் இப்போதுதான் ஆய்வுகள் நடத்திவருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகுதான், எவ்வளவு பேர், என்னென்ன உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.’’



சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான `பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜனிடம் பேசினோம்... ``கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருக்கும் பிளாஸ்டிக், அழுகிய பொருள்கள் என அனைத்தும் சேர்ந்து அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்துவிட்டது. அந்தக் குப்பைகளை எரிக்கும்போது, அதிலிருக்கும் பிளாஸ்டிக்கும் சேர்ந்து எரிந்து வெளிவரும் புகையால் அந்தப் பகுதி மக்களுக்கு தோல் வியாதிகள், நுரையீரல் பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள், புற்றுநோய்கூட ஏற்படுகின்றன.

குப்பைகளைக் கையாள்வதில் தமிழக அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. வீடுகளிலிருந்தோ மற்ற இடங்களிலிருந்தோ குப்பைகள் எடுக்கும்போது, `மக்கும் குப்பை’, `மக்காத குப்பை’ எனப் பிரிக்க (Source Segregation) இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதை அவர்கள் முன்னெடுக்கவே இல்லை. பிளாஸ்டிக், பேட்டரிகள், மின்னணு சாதனக் கழிவுகள், அழுகிய காய்கறிகள்... என அனைத்துக் குப்பைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் கொட்டப்படுகின்றன. குப்பைக் கிடங்குகளை அகற்றக் கோரி கொடுங்கையூர், பெருங்குடிப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அரசு இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.



பெருங்குடி குப்பைமேடு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருக்கிறது. அங்கே குப்பைகளைக் கொட்டுவது அநியாயத்தின் உச்சம். சதுப்புநிலம் என்பது ஓர் உயிர்ச்சூழல். பல்லுயிர்கள் வாழும் பகுதி. அரிதாக இருக்கும் நன்னீர் சதுப்புநிலம். மழை, வெள்ள நீரைத் தேக்கிவைக்கும் இடம். இந்தப் பகுதி மற்ற இடங்களைவிட, பத்து மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. இந்தக் குப்பைக் கிடங்கால், அந்தப் பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்திருக்கின்றன. இயற்கையின் கொடையான அந்த சதுப்புநிலப் பகுதியை எதற்கும் லாயகற்றதாக மாற்றிவிட்டார்கள். `லீச்சேட்’ கலந்த நிலத்தடி நீரைக் குடித்தால் புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் இந்த லீச்சேட்டில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, கரிம வேதிப் பொருள்கள், ஆல்கஹால், ஆல்டிஹைடு என்று பல நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் இருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிரையே பறிக்கும் நோய்கள் வரக்கூட வாய்ப்பிருக்கிறது. அந்தப் பகுதி மக்களை ஆய்வுக்குள்ளாக்கினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

குப்பைகளில் கொட்டப்படும் `ஃப்ளோரசன்ட்’ பல்புகளிலிருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசித்தால், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். இந்தக் கிடங்குகளிலிருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்’ வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட இருபது மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உலகின் பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்பது சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 91 சதவிகிதம் மற்ற கழிவுகளுடன் சேர்ந்து கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும்வரை, தென் சென்னைப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதற்குக் காரணமும் சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் குப்பை கிடங்குதான். அந்த இடத்தில் இவ்வளவு பெரிய குப்பைக் கிடங்கு இருப்பதால், தண்ணீர் நிலத்தில் பரவி, உறிஞ்சப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனாலேயே அந்தப் பகுதியில் வெள்ளம் வந்தால் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும், அரசு குப்பை மேலாண்மையைச் சரிவர செய்யாததே காரணம்’’ என்கிறார் சுந்தரராஜன்.

குப்பைக் கிடங்குகளில் கள ஆய்வு செய்த சமூகச் செயற்பாட்டாளர் ஹேரிஸ் சுல்தானிடம் பேசினோம். ``கடந்த 8.4.2016-ல் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் கொண்டுவந்தது. அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தில், `பெரிய நிறுவனங்கள் தங்களது பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் அடைத்து விற்பனை செய்தால், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஆறு மாதங்களுக்குள் செய்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், எந்த நிறுவனமும் இதை நடைமுறைப்படுத்தவில்லை. பெருங்குடி, கொடுங்கையூர் மட்டுமில்லாமல் சிட்லப்பாக்கம், பல்லாவரம் ஏரிகளில் கொட்டப்பட்டுவரும் குப்பைகளை ஆய்வு செய்ததில், பெரிய நிறுவனங்களின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அவற்றில் அதிகமாக இருந்தன. சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அதை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய நகரங்களிலேயே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தாதது சென்னையாகத்தான் இருக்கும்’’ என்று வேதனையுடன் கூறுகிறார்.



குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் எழிலன் கூறுகிறார்... ``ஈக்கள் மற்றும் சிறு பூச்சிகள் பரப்பும் கிருமிகளால் பரவும் தொற்றுநோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, அமீபியாஸ் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. குடிநீரில் குப்பைக் கழிவுநீர் கலப்பதால், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் போன்ற வாயுக்களால், நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக் கோளாறுகள் உண்டாகும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஐ.எல்.டி (ILD - Interstitial Lung Disease) - நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு வரலாம். நான் அந்தப் பகுதியில் மூன்று முறை ஆய்வு செய்திருக்கிறேன். அங்கே வசிக்கும் மக்கள் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மற்ற இடங்களில் பெரும்பாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவது இல்லை.

இங்கே வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சருமப் பிரச்னைகள் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும், அந்தப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு மீத்தேன், சல்பர் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ரத்தக்குழாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்கள் ஏற்படலாம். ஆனால், அங்கே இதற்கான முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. வெளிநாடாக இருந்தால், அந்தப் பகுதி மக்களை பத்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் வசிப்பவர்கள் என்று பிரித்து முறையாக ஆய்வு நடத்தி, கண்டுபிடித்து அதைச் சரி செய்திருப்பார்கள். அரசுதான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதுபோன்ற இடங்களை `ஹாட் ஸ்பாட்ஸ்’ என்று கூறுவோம். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஐந்து பேருக்காவது எப்போதும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் கண்டறியப்படுவது வேதனை’’ என்கிறார் எழிலன்.
``மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..! - இந்த ஆசை சரிதானா? 

க.சுபகுணம்  vikatan 30.05.2018

கோடைக்காலம் தொடங்கியவுடன் கையில் நைலான் நரம்புகளால் செய்த தூண்டில்களை எடுத்துக்கொண்டு குளம் குளமாகத் தேடிச்சென்று மீன்பிடித்த நினைவுகள் பலரது மனதில் குளத்தோரச் சிற்றலைகளைப் போல் அலைமோதிக் கொண்டிருக்கும். அன்றெல்லாம் தேடித் தேடிச் சென்று கலங்கிய குளங்கள் தெளியும் வரை பொறுமை காத்திருந்தத் தருணங்களும், பொறி, அரிசிச் சோறு போன்றவற்றைத் தூவிவிட்டு அதைச் சாப்பிட மீன்கள் மேலே வரும்வரை நீரில் சிறு அலைகூடத் தளும்பவிடாமலும், தேவையான அளவு மீன்கள் மேலே வரும்வரை சிறு ஓசைகூடச் செய்யாமல் அமைதிகாத்த நிமிடங்களும் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத நினைவுக் குமிழிகள்.



அந்த நினைவுக் குமிழிகளுக்குள் நாம் தேடிப் பிடித்த அனைத்து மீன் வகைகளும் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. நமது ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவகக் குளங்களில். தூண்டிலில் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிச் சேகரிக்கும் மண்புழு இரைகளில் தொடங்குகிறது அன்றைய சிறுவர்களின் மீன் பற்றிய அறிவு. மண்புழுவைத் தூண்டிலில் கட்டிவிடுவதன் மூலம் அனைத்து மீன்களையும் பிடித்துவிட முடியாது. சூரை, கெண்டை, வவ்வால் போன்ற மீன்களை மட்டுமே அப்படிப் பிடிக்க முடியும். கொரத்தி, ஜிலேபி போன்ற சில மீன்களை நீரில் உணவைத் தூவி வலை போட்டுத்தான் பிடிக்க முடியும்.

கல் இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கல்லுளிமங்கன் முதல் சாப்பிடுவதற்கு ஆகாததால் கண்ணில் பட்டாலும் அவசியமின்றிக் கொல்லக்கூடாது என்று அப்படியே விட்டுவிட்ட ஓலை மீன் வரை எதையும் எப்போதும் தேவையின்றிப் பிடித்ததில்லை. பொழுதுபோக்காகவே இருந்தாலும் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு முன்னமே திட்டமிட்ட மீன்களைத் தவிர வேறு எதையும் பிடித்ததில்லை.



அன்று சிறுவர்களாய் நாம் குளங்கள் தேடி ஓடினோம். அதையே ஸ்போர்ட் ஃபிஷிங் (Sport Fishing) என்ற பெயரில் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு வித்தியாசம், நாம் சில மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டோம். இவர்கள் வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாம் போகலாம், மீன் பிடிக்கலாம். எவ்வளவு மீன்களை வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு விதியுண்டு. நாம் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும்.
இந்த வகைப் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் எழுதப்படாத ஒரு விதியுண்டு. ஒருமுறை பிடிக்கப்பட்ட மீன் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம். ஆனால், பிடித்தவுடன் கடலில் விட்டுவிட வேண்டும். அதற்கு ஏற்படும் காயங்களைப் பற்றியோ, அவற்றின் உடலில் சேரும் செயற்கை இரைகளைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் இல்லை. அது வெறும் மீன் தானே.



செயற்கை இரைகளைப் பயன்படுத்தி பிடிக்கும் இவர்கள் பிடிக்கப்படும் மீன்கள் கடலிலேயே மீண்டும் விடப்படுவதால் வளம் குறையாது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அந்தச் செயற்கை இரைகள் பிடித்த பிறகு விடப்படும் மீனின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதையும் அந்த பிளாஸ்டிக் இரை அதை எப்படியும் கொன்றுவிடும் என்பதையும் ஏன் மறந்து விடுகிறார்கள்?

உணவுக்காக வேட்டையாடலாம் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்காகக் கூட எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 95% மீன்கள் இந்தக் கடும் சோதனைகளைக் கடந்தும் உயிர் வாழ்கின்றனதான். ஆனால், இங்கே கொல்லப்படுவதல்ல பிரச்னை. மீன்களை ஒவ்வொருவராகப் பிடித்து அதற்கு 1%, 3%, 5% என்ற அளவுகளில் காயங்களைத் தந்துவிட்டு இரக்க குணத்தோடு அதை மீண்டும் வாழவிடுவது எவ்வளவு பெரிய கபட நாடகம்?

உணவுக்காக மீன் பிடிப்பவர்கள் மீண்டும் அவற்றின் வம்சம் வளர்வதற்காகக் கொஞ்சம் விட்டுவைப்பார்கள். ஆனால், இத்தகைய பொழுதுபோக்கு மீனவர்கள் தங்கள் சுய திருப்திக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தான் கொல்லவில்லையே! மீண்டும் உயிருடன் விட்டு விடுகிறார்களே! என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மீன்களுக்கு இயற்கையாகவே தப்பித்து வாழக்கூடிய திறன் உண்டு. ஆனால், நமது மனநிம்மதிக்காக அவற்றைப் பிடித்துத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புகார் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். இது கவனிக்கப்பட வேண்டிய விபரீத பிரச்னை. லாப நோக்கோடு உளவியல் ரீதியாக இந்த வகை ஆசைகளை வளர்த்தெடுக்கும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள், ஆசைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இயற்கையின் அடிப்படை அறங்களை மக்கள் மத்தியில் மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.



``ஓர் உயிரினத்துக்குக் காயம் உண்டாக்கும் வகையில் செய்யும் செயல்கள், கொடுக்கும் தண்டனைகள், வற்புறுத்திச் செய்யவைக்கும் செயல்கள் அது தண்டனையாகவோ அல்லது கொடுப்பவரின் மன நிம்மதிக்காகவோ எதுவாக இருப்பினும் அது சித்ரவதை தான்."

இது நமது சட்டத்தில் சித்ரவதை குறித்து எழுதப்பட்டிருக்கும் விளக்கம். இதில் எந்த உயிருக்கும் என்ற வரையறையில் மீன்களும் உள்ளடங்கும். இதற்கும் பலர் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். மீன்களுக்கு வலிகளை உணரும் நரம்பு மண்டலங்கள் இல்லாததால் இந்தச் செயல்களால் அவை எதையும் உணராது என்கிறார்கள். நம்மை சில நிமிடங்கள் சுவாசிக்க வழியற்ற வகையில் விட்டுவிடுவோம். மீண்டும் சுவாசிக்க அனுமதிக்கலாம். மீண்டும் அவ்வாறே சுவாசிக்க வழியின்றிச் செய்யலாம். மீண்டும் அனுமதிப்போம். இவ்வாறாகத் தொடர்ச்சியாக இம்சித்துக்கொண்டே இருந்தால், அப்போது புரியும் மீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் விடும்வரை மூச்சுத்திணறி அவை படும்பாடு.

என்றோ ஒரு பாட்டி சொன்ன வரிகள், ``தினமொரு பொழுதுபோக்கு இருந்தால், சூரியனைக் கண்ட பனிபோல் கவலைகள் கரையும்".

உண்மைதான். அது அடுத்த உயிர்களின் கவலைகளை அடித்தளமாகக் கொண்ட பொழுதுபோக்குகளாக இல்லாத வரையிலும்.
இரண்டாக உடைந்த ரயில் சக்கரம் - பெரும் விபத்து தவிர்ப்பு! 

பிரேம் குமார் எஸ்.கே.

ஓடும் ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்ததால், அதிவிரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



ரயில்வே துறையில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் போன்ற பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும். ஆனால், நேற்று காலை அதிவிரைவு ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் - யஷ்வந்த்பூர் அதிவிரைவு ரயிலின் சக்கரம், ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது இரண்டாக உடைந்துள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து விநோத சத்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திச் சோதித்துள்ளார். அப்போது ஒரு பெட்டியில், ஒரு சக்கரம் இரண்டாக உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே உயர் அதிகாரிகள், ”இதுபோன்று இது வரை நாங்கள் பார்த்தது இல்லை. ரயில் சக்கரத்தில் பிரச்னை வருவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். சக்கரம் அதிக முறை பயன்படுத்தப்பட்டதா அல்லது தயாரிப்பில் நடந்த குளறுபடியா என விசாரணை நடைபெறும்” என்றனர்.

  இதுபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் சக்கரத்தின் நிலைகுறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...