Sunday, June 17, 2018

2 மாதமா அல்லது 2 வருடமா? உங்கள் மொபைலை எப்போது மாற்ற வேண்டும்? #GadgetTips 

மு.ராஜேஷ்
vikatan

மொபைலை மாத்துனா என்ன? இந்தக் கேள்வி ஒருவருக்கு எப்போது தோன்றும் எனத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு முடிவு இறுதியானதாக இருந்தால் கையிலிருந்து ஒரு தொகை செலவாகப் போவது மட்டும் உறுதி. சிலர் மொபைலை பல வருடங்களாக மாற்றாமல் இருப்பார்கள். இன்னும் சிலரோ ஒவ்வொரு மாதத்துக்கும் புது மொபைல் என்றாலும் ஓகே என்பார்கள். உண்மையில் எது நல்ல விஷயம் ? ஒரு மொபைலை எப்போது மாற்றலாம் ?



ஒரு கேட்ஜெட்டோ அல்லது மொபைலோ அதற்கு இவ்வளவு நாள்தான் ஆயுட்காலம் என்ற இலக்கெல்லாம் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை. அதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும் வரை பயன்படுத்த முடியும். எக்காரணம் கொண்டும் நிறுவனங்களின் விளம்பரங்களை மட்டும் பார்த்து ஒரு மொபைலை முடிவு செய்வது நல்லதல்ல. ஆப்பிள் முதல் சாம்சங் வரை மொபைல் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கக் குறிப்பிடத்தக்க சில உத்திகளையே கையாளுகின்றன. ஒருவரை மொபைலை வாங்க வைப்பதில் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது நாம் நினைப்பதை விடவும் அதிகம். ஒருபுறம் புதிதாக ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க மறுபுறம் அதை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மொபைல் விற்பனை அறிக்கைகள் காட்டுகின்றன. ஒரு மொபைல் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் போது இதை விடச் சிறப்பான வசதி இருக்கவே முடியாது என்று விளம்பரம் செய்கிறது, ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அதற்கு அடுத்த மாடலை அறிமுகம் செய்து அதே கருத்தை மீண்டும் முன் வைக்கிறது. அதை நம்பி சிலர் வாங்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.

மொபைலை மாற்றுவதற்கான சரியான சமயம் எது ?



மொபைலைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்துக்கு அதை ஹார்டுவேரில் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலும் அதன் மென்பொருளில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மென்பொருளின் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதைச் சரி செய்ய உதவும் சாஃப்ட்வேர் அப்டேட்களும், செக்யூரிட்டியைப் பலப்படுத்தும் அப்டேட்களும் ஒரு பாதுகாப்பான மொபைலுக்கு அவசியம் தேவைப்படுபவை. அதில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மொபைலை மாற்றலாம். எத்தனை ஜிபி ரேம் இருந்தாலும் போட்டோ எடுக்கும் போது ரெண்டு மூணு செகன்ட் லேட் ஆகும்போது, 100% சார்ஜ் போட்டும் அரை நாள் கூட தாக்குப்பிடிக்காத நிலையில், எந்தச் செயலியும் சரியாக ஓபன் கூட ஆகாதபோது என மொபைலை இயல்பாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மொபைலை மாற்றலாம்.

புதிய வசதிகளை நம்மால் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமோ அல்லது புதிய வசதிகளை பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமோ கூட ஒருவரை அடிக்கடி கைப்பேசியை மாற்றத் தூண்டலாம். இதற்காகச் செலவு செய்வது தேவையற்றது என்பதையும் உணர்ந்தால் போதும். அடிக்கடி மொபைலை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து விடுபடலாம்.



அப்படிப் புதிதாக ஒரு மொபைலை வாங்கும் போதும் நமக்கு எந்த வசதி அதிகம் தேவைப்படுமோ அதை வாங்கினால் போதுமானது. மொபைலை அடிக்கடி மாற்ற விரும்பாதவர்கள் அதில் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்து விடுவது அவசியம். மொபைல் அதிகம் டேமேஜ் ஆகியிருந்தாலும் பரவாயில்லை இருப்பதை வைத்தே சமாளிப்போம் என்று இருப்பதும் தவறான முடிவாக அமையக் கூடும். அவசரமான நேரத்தில் மொபைல் காலை வாரிவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பழுதடைந்த மொபைலை நீண்ட காலம் மாற்றாமல் இருப்பதும் சரியான முடிவாக இருக்காது.

மொபைல் பழையதாகிவிட்டதாக உணர்கிறீர்களா? அதன் ஸ்க்ராட்ச் கார்டையும், பேக் கேஸையும் மாற்றிப் பாருங்கள். மொபைல் புதிது போல தெரியும். அதை வைத்தே இன்னும் சில மாதங்களுக்கு அடுத்த மொபைல் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போடலாம்.


இறுதியாக தேவையற்றதை வாங்கினால் தேவையிருப்பதை இழக்க வேண்டியிருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
தகவல் அனுப்ப வாட்ஸ்அப்பை நம்பும் வங்கிகள்... முடிவுக்கு வருகிறதா SMS காலம்?

ஞா.சுதாகர்


எஸ்.எம்.எஸ் பூஸ்டர்கள் போட்டு, நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய காலம் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. முதலில் நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்த நாம் இன்று, ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு அனுப்புவதே அரிதாகிவிட்டது. ஆனாலும்கூட, இன்றும் நம் மொபைல் இன்பாக்ஸ் காலியாக இருப்பதில்லை. கால் டாக்ஸி கம்பெனியில் இருந்து வங்கிகள் வரைக்கும் எல்லா நிறுவனங்களின் குறுஞ்செய்திகளும் அங்குதான் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. சின்னச் சின்ன OTP-யில் இருந்து முக்கியமான தகவல்கள் வரைக்கும் அத்தனையும் இன்பாக்ஸிற்குத்தான் வருகின்றன. இந்த ட்ரெண்டை சில மாதங்களுக்கு முன்னர் கொஞ்சம் மாற்றியமைத்தது வாட்ஸ்அப். அந்நிறுவனம் புதிதாக தொடங்கிய வாட்ஸ்அப் பிசினஸ் என்ற வசதியின்மூலம், சேவை நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பவைத்தது. புக்மைஷோ, மேக்மை ட்ரிப் போன்ற நிறுவனங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் சேவையைத்தான் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றன. தற்போது அந்தப் பட்டியலில் வங்கிகளும் இணையவிருக்கின்றன.

வங்கிகளில் இருந்து நாம் பணம் எடுக்கும்போதோ, பணம் போடும்போதோ அதை உறுதிப்படுத்தும்விதமாக நம் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். தற்போது இந்தக் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாக, வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன சில வங்கிகள். எஸ்.பி.ஐ., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் ஆகிய வங்கிகள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன.



எந்த மாதிரியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்?

வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சேவை வழங்க வேண்டும் எனில், வாட்ஸ்அப் பிசினஸ்தான் இப்போதைக்கு ஒரே வழி. இதன்மூலம் வங்கிகளுடன் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு வங்கிகளால் வாட்ஸ்அப் செய்யமுடியும். வங்கிகளின் Verified வாட்ஸ்அப் கணக்கை வாடிக்கையாளர்களும் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு சில குறிப்பிட்ட சேவைகளை மட்டும்தான் வங்கிகள் பரிசோதித்து வருகின்றன. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் விவரங்கள், பிற டெபிட் /கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் போன்ற தகவல்கள் மட்டும் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும். இப்போதைக்கு கோடக் மஹிந்திரா மற்றும் இண்டஸ்இண்ட் ஆகிய இருவங்கிகள் மட்டும்தான் சோதனை முறையில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் சேவைகளை அனுப்பத்தொடங்கியுள்ளன. எஸ்.பி.ஐ, ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகள் இன்னும் களத்தில் இறங்கவில்லை.

குறுஞ்செய்திகள் அவ்வளவுதானா?

குறுஞ்செய்திகளோடு மட்டுமின்றி, வாட்ஸ்அப்பிலும் வங்கிகள் செய்திகளை அனுப்ப முடிவெடுத்திருப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, வாடிக்கையாளர்களின் வசதி. இன்று வங்கிகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இணைய வசதியுடனும், தினசரி வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, செய்திகளை வாட்ஸ்அப்பிலேயே அனுப்புவது மிகுந்த பயனுள்ளதாக அமையும். இரண்டாவது, செலவு. தற்போது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு ஆகும் செலவைவிடவும், வாட்ஸ்அப் செய்ய குறைவான செலவே ஆகும். மேலும், குறுஞ்செய்தி மூலமாக இருவழி தகவல் தொடர்பு என்பது கடினம். ஆனால், வாட்ஸ்அப்பில் வங்கிகளும், வாடிக்கையாளர்களும் எளிதாக உரையாட முடியும். இதன்மூலம் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் மட்டுமின்றி, கூடுதலான வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கமுடியும்.



 உதாரணமாக, அக்கவுன்ட் பேலன்ஸ் செக் செய்வது, வங்கிக்கணக்குகளில் தகவல்களை அப்டேட் செய்வது, புகார்களைப் பதிவு செய்வது போன்ற சேவைகளை வாட்ஸ்அப் மூலம் எளிதாக வழங்கிவிடலாம். எனவே, வங்கிகளின் இந்த வாட்ஸ்அப் என்ட்ரி வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே பயனளிக்கக்கூடியதுதான். ஆனால், இந்த முயற்சியால் தற்போது வங்கிகள் நமக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் எந்த மாற்றமும் இருக்காது. காரணம், வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளர்களை அலர்ட் செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி. அதில் மாற்றங்கள் வரும்வரைக்கும் இப்போதைய நடைமுறையும் அப்படியே தொடரும்.
''மார்க் பார்க்காமலே கையெழுத்துப் போடுவார் அப்பா!'' - பாலகுமாரன் மகள் உருக்கம் #FathersDay 

ஆ.சாந்தி கணேஷ்

ஜூன் 17 - உலக தந்தையர் தினம்.

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி அவருடைய மகள் கெளரியுடன் ஒரு மென் இருள் நேரத்தில் பேச ஆரம்பித்தேன்.

''எல்லாருக்கும் நான் கெளரி. அப்பாவுக்கு மட்டும் கெளரா. அப்படித்தான் என்னை ஸ்பெஷலா கூப்பிடுவார். என் மேல பிரியம் அதிமாச்சுனா ல கெளரவம்மான்னு கூப்பிடுவாரு.

வாஞ்சை, பிரியம், கருணை... இந்த மூன்று வார்த்தைகளின் ஒட்டு மொத்த சங்கமம்தான் அப்பா. அவருடைய எழுத்துக்களும் அதையே பிரதிபலிக்கும். அதனாலதான் அவர் எழுத்துக்களை படிச்சவங்க எல்லாம் அவரை 'அப்பா', 'அய்யா'ன்னு உரிமையா அழைச்சாங்க. வீடு தேடி வந்து பார்த்துட்டுப் போனாங்க. அதுதான் என் அப்பா.

அப்பாங்கிற வார்த்தைக்கான உரிமையை அவர் எனக்கும் சூர்யாவுக்குமானதா மட்டும் பார்க்கலை. அதை நாங்களும் புரிஞ்சு வைச்சிருந்தோம். தன்னைத் தேடி வர்றவங்களுக்கு தாயுமானவரா, தகப்பனா இருந்தார் அப்பா. அவரோட அன்புல எதிர்பார்ப்பே இருக்காதுங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, பிள்ளைகளான எனக்கும் சூர்யாவுக்கும்கூட எதையும் எதிர்பார்க்காத அன்பைத்தான் அள்ளி அள்ளிக் கொடுத்தார். 'அன்பு என்பது ஒருவரிடம் வசப்படுவதோ அல்லது ஒருவரை வசப்படுத்துவதோ அல்ல. அதுவாகிப் போதல், அதாவது, நாமே அன்பாகிப் போதல்' என்பார். இப்படித்தான் என் வீடும், வீட்டாரும் பாலகுமாரனாகி நிற்கிறோம்'' என்று நினைவுகளில் மூழ்குகிறார் கெளரி.



''சின்ன வயசுல அப்பா என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போகும்போது சத்தமா பாட்டு பாடிட்டே வண்டி ஓட்டுவாங்க .பல நேரங்கள்ல தேவாரம், திருவாசகம், சில நேரங்கள்ல சினிமா பாடல்கள். எம்.ஜி.ஆரோட 'அதோ அந்தப் பறவைப்போல ' பாட்டை ரோட்டுல சத்தமா அப்பா பாடுறப்போ பயங்கர உற்சாகமா இருக்கும். அப்பாவோட ஃபேவரைட் பாட்டுன்னா 'சிவப்பு ரோஜாக்கள்' படத்துல வர்ற 'நினைவோ ஒரு பறவை' பாடல்தான்.

நான் அஞ்சாவது படிக்கிறப்ப கமல் சாரோட 'விக்ரம் ' படம் ரிலீஸாச்சு. அந்தப் படத்துக்காக கமல் சார் நிறைய குழந்தைகளோட இருக்கிற மாதிரி ஒரு போஸ்டர் ரெடி பண்ணாங்க. அப்பாவுக்கு கமல் சார் நல்ல நண்பர் அப்படிங்கிறதால நான், சூர்யா, சந்தான பாரதி சார் பசங்க எல்லோரையும் வைச்சு அந்தப் போஸ்டரை உருவாக்கினாங்க. அந்த போஸ்டரை நான் படிச்ச ஆதர்ஷ் வித்யாலயா (ராயப்பேட்டை) ஸ்கூல் காம்பவுண்ட் சுவர்லேயும் ஒட்டியிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு என்னோட கிளாஸ் மிஸ், 'நீ பாலகுமாரன் பொண்ணா... உங்கப்பாகிட்ட எனக்கு ஆட்டோகிராப் வாங்கிக்கொடு'ன்னு கேட்டாங்க . நானும் அப்பாகிட்ட கேட்டேன். அவரும் 'என்றென்றும் அன்புடன் பாலகுமாரன்'ன்னு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். நானும் அதைச் சமர்த்தா ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுப் போனேன். ஆனா , டீச்சர்கிட்ட கொடுக்கலை. நானே வைச்சுக்கிட்டேன். ஏன்னா, நான் வாங்கின ஒரே செலிபிரெட்டி ஆட்டோகிராப் அப்பாவுடையதுதானே'' என்று கலகலக்கிறார் இந்த அப்பா பொண்ணு .

''மத்த அப்பா மாதிரியில்ல எங்கப்பா. மார்க் ஷீட் நீட்டுறப்பயோ, ரேங்க் கார்டுல கையெழுத்து வாங்குறப்பவோ நாங்க பயப்பட்டதா சரித்திரமே இல்ல. ஏன்னா அப்பா நாங்க வாங்கின மார்க்கை பார்த்தாத்தானே... பார்க்கவே மாட்டாங்க. மார்க் கார்டை வாங்கினதும் எங்க கையெழுத்து போடனும்னு மட்டும் பார்ப்பார். உடனே கையெழுத்து போட்டு எங்ககிட்ட கொடுத்திருவாங்க அப்பா.
எனக்கே ஆச்சர்யமா இருக்கும். ஒருநாள் மனசு கேக்காம அப்பாகிட்டேயே 'ஏம்பா, எங்க மார்க்ஸை செக் பண்ண மாட்டேங்கிற'ன்னு கேட்டேன். 'படிக்கிறது, ரேங்க் வாங்குறது உன்னோட பொறுப்பு. அதை நான் சொல்லி நீ செய்யக்கூடாது' அப்படின்னார். அந்த வார்த்தைகள் எங்களோட பொறுப்பை இன்னும் அதிகமாக்குச்சு'' என்றவர், தன் அப்பாவிடம் தான் வியந்த குண நலன்களைப் பட்டியலிடுகிறார்.

''கடவுள் நம்பிக்கை உள்பட எந்தவொரு விஷயத்தையும் எங்கமேல அப்பா திணிச்சதேயில்லை. எங்களுக்கான விஷயங்கள் எல்லாமே ஒரு பூ மலர்வது போலத்தான் நடந்துச்சு. அப்பா ஒரு நல்ல டெஷிசன் மேக்கர். பிரச்னைகளை பதட்டமே இல்லாம அணுகுவார். அதே மாதிரி ஒரு விஷயத்தை சூப்பர் ஃபாஸ்ட்ல செய்வார். தள்ளிப் போடுறதுங்கிறதே அப்பாவுக் அப்பாவுக்கு தள்ளிப் போடுதறது பிடிக்காது, கோபப்படுவார் அப்பா... ஆனால் அந்தக் கோவத்தால நாம சிரமப்படுற மாதிரி இருக்காது" என்றவர் தன் அப்பாவின் ஆன்மீக பற்று பற்றிப் பகிர்ந்து கொண்டார்.



''நான் திருமணம் முடிச்சு துபாய் போனதுக்கப்புறம் திடீர்னு போன் பண்ணுவாரு . 'கெளரா எல்லாம் சரியாயிருக்கா'ன்னு கேப்பாரு. 'காலையிலே இருந்து கால் வலிக்குதுப்பா 'ங்கிற உண்மையைச் சொல்லுவேன். 'அதான், மனசுக்குள்ள என்னவோ பண்ணுச்சு' என்பார்.

அப்பா எங்களைவிட்டு கிளம்பறதுக்கு முன்னாடி, அதாவது மே மாசம் ஆரம்பத்துல நான், என் கணவர் எங்க குழந்தையோட ஜார்ஜியாவுக்கு டூர் போயிருந்தோம். அங்கே ஒரு சர்ச் இருந்தது. செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் சர்ச்சுக்குள்ள போனவுடன் அங்க இருந்த கோபுரத்துக்குப் பக்கத்துல என் கணவர் நிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். அதை அப்பாவுக்கு அனுப்பினேன். அது டெலிவர் ஆனதும் என் போனோட சார்ஜ் ஆஃப் ஆகிடுச்சு. அந்த தேவாலயத்துல saint nino அப்படிங்கிற பெண் தெய்வத்தை வணங்குறாங்க . இவங்க இயேசு கிறிஸ்துவோட சிஸ்யர்கள்ல ஒருவர்னு சொல்லப்பட்டவர். ஜார்ஜியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியவர் இவர்தானாம். இந்த ஆலயத்தில் இவரைத்தான் பெண் தேவதையாக வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்துக்குள் நான் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே வருகிற வரைக்கும் என்னைச் சுற்றி 'ரும்' என்கிற ஒரு அதிர்வு சுற்றிக்கொண்டே இருந்தது. இந்தச் சத்தம் என் கணவருக்கு கேட்குதானு கேட்டப்ப அப்படி எதுவும் இல்லியேன்னு சொன்னார். இதையெல்லாம் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்புறதுக்காக ஹோட்டல் வந்துட்டு போனை ஆன் செய்றேன். என் ஃபோட்டோஸ் பார்த்துட்டு அப்பா அனுப்பின மெசேஜ்.

  எனக்கு அந்த சர்ச்சுக்குள் என்னென்ன நிகழ்ந்ததோ அதையெல்லாம் அப்பா வரிசையாக அதில் அனுப்பியிருந்தார். அதுவும் காலை 11.36க்கு நான் சர்ச் படத்தை அனுப்பியிருக்கிறேன். 11. 37, 11.38 என வரிசையாக மெசேஜ் செய்திருக்கிறார். ஸோ, கூகுள் செய்து பார்க்கவெல்லாம் நேரம் கிடையாது. தவிர, அதற்கு முன் தினம் நாளைக்கு இந்த சர்ச்சுக்கு போகப் போகிறேன் என்பதை நான் அப்பாவிடம் சொல்லவும் இல்லை. அப்பாவிடம் ஒரு ஆன்மிக சக்தி இருந்ததுங்க. அது மதமெல்லாம் கடந்து இருந்தது'' மெய் சிலிர்க்கிறார் பாலகுமாரன் மகள்!


தொப்பையைக் குறைக்கும் புதிய கார்பாக்ஸிதெரபி... சாத்தியம்தானா' - மருத்துவர்கள் சொல்வது என்ன? #Carboxytherapy 


ஜி.லட்சுமணன்

`தொப்பையைக் குறைக்க வியர்க்க, வியர்க்க ட்ரெட்மில்லில் ஓட வேண்டாம். விதவிதமான டயட் முறைகளையெல்லாம் பின்பற்ற வேண்டாம். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால் போதும்... தொப்பை குறைந்து, ஸ்லிம்மாகிவிடலாம்’ என்று ஆச்சர்யப்படவைத்திருக்கிறது அமெரிக்காவில் அண்மையில் நடந்த ஆய்வு ஒன்று.



` `கார்பாக்ஸிதெரபி' (Carboxytherapy) எனப்படும் இந்தச் சிகிச்சையில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அடங்கிய பிரத்யேக ஊசியை அதிகக் கொழுப்பு சேர்ந்திருக்கும் இடத்தில் போட்டால், அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புச் செல்களை நீக்கி விடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (Northwestern University) நடத்திய ஆராய்ச்சியில்தான் இந்தப் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த ஆய்வுகுறித்த விவரங்களை அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி-யின் (American Academy of Dermatology) இதழில் வெளியிட்டிருக்கிறது நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்.

இந்தச் சிகிச்சை முறை குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் முழுமையாகவில்லை. இப்போதுதான் முதன்முறையாக மனிதர்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது. `உடல் பருமன் அளவீடு (BMI) 22-லிருந்து 29-க்குட்பட்ட 16 பேருக்கு இந்த ஊசியைப் போட்டு, பல கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டது. முடிவில், அல்டரா சவுண்ட் மூலம் பரிசோதித்ததில் அந்தப் பகுதியிலிருக்கும் கொழுப்புகள் ஐந்து வாரங்களில் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு.



``கார்பாக்ஸிதெரபி என்றால் என்ன... தொப்பையைக் குறைக்க உண்மையில் இந்தச் சிகிச்சை உதவுமா?’’ - சரும மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்.

``கார்பாக்ஸிதெரபி (Carboxytherapy), அழகுக்கலையில் ஏற்கெனவே பயன்பாட்டிலிருக்கும் ஒரு வகை சிகிச்சை முறை. கண்களின் கருவளையம், தழும்பு போன்றவற்றை நீக்கும் சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கு, இந்தச் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இப்போது கொழுப்பை நீக்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தச் சிகிச்சையில் கொழுப்பு அதிகமிருக்கும் பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடு அடங்கிய பிரத்யேக ஊசியைப் போடுவார்கள். இது, ஏற்கெனவே உடலில் அந்தப் பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை இன்னும் கொஞ்சம் அதிகரித்து, கொழுப்பு செல்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆக்சிஜன் அளவைக் குறைத்துவிடும். இதனால் அந்தப் பகுதியிலிருக்கும் செல்கள் இறந்து போவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இதன் சாத்தியம் குறித்து முழுமையாக விளக்கப்படவில்லை.

அதே நேரத்தில் 16 பேரைக்கொண்டு நடத்தப்பட்ட மிகவும் சிறிய ஆய்வு இது. அதோடு, நீண்டகாலத்துக்கு அது பலன் தந்தது என்றும் சொல்லப்படவில்லை; ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் கொழுப்புகள் உருவாகியிருப்பதாகத்தான் ஆய்வு முடிவு சொல்கிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிலருக்கு சிகிச்சை முடிந்த பிறகு வலி உள்பட சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு இந்தக் கொழுப்பு குறைக்கும் சிகிச்சை முறை சிறந்தது எனச் சொல்ல முடியாது. முழுமையான கிளினிக்கல் ட்ரையல் முடிந்த பிறகே, இதை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஷரதா.



``கார்பாக்ஸிதெரபி சிகிச்சை முறையில் தொப்பை குறைப்பு சாத்தியம்தானா... இது யாருக்கொல்லாம் பயன் தரும்?’’ - குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``உடற்பயிற்சி, டயட் போன்றவற்றைச் செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல்படும் இளம் தலைமுறையை, இது போன்ற சிகிச்சை முறைகள் ஈர்க்கின்றன. அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த ஓர் ஆய்வாகவே இது தெரிகிறது. `ஒரே ஓர் ஊசியைப் போட்டுக்கொண்டால் போதும், தொப்பையைக் குறைத்துவிடலாம்’ என்கிறது இந்த ஆய்வு.

இதில் பங்கேற்றவர்களும் ஆபத்தான உடல் பருமன் கொண்டவர்கள் இல்லை. அவர்களை வைத்துத்தான் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். எனவே, இது அழகுக்கலையில் தற்காலிகமாகப் பயனளிக்கலாம். ஆனால், அதிக உடல் எடையைக் குறைக்க இந்த முறை போதுமானதல்ல. மேலும், இந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்க இதுபோன்ற சிறிய ஆய்வுகள் மட்டும் போதாது.

 குறிப்பிட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குவதற்கு பல்வேறு சிகிச்சைகள் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றில் பரவலாக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை லைப்போசக்‌ஷன் (Liposuction). இதில், அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், பிரத்யேக ஊசி மூலமாகவும் உடலிலிருக்கும் கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும். பெரும்பாலும், கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியிலிருக்கும் அதிகக் கொழுப்பு இந்தச் சிகிச்சை முறையில் அகற்றப்படும். இந்தச் சிகிச்சையில் ரத்த இழப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் என்பதால், லைபோசக்‌ஷன்தான் நடைமுறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது’’ என்கிறார் பட்டா ராதாகிருஷ்ணன்.
''161-வது பிரிவைப் பயன்படுத்துங்கள்!'' - எடப்பாடி பழனிசாமிக்கு வழிகாட்டும் கட்சிகள்!
MUTHUKRISHNAN S


vikatan  

உச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில் மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியாகப் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, கடந்த 2014- ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18- ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, `குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி, அவர்களை விடுதலை செய்வது பற்றி அரசு உரிய முடிவு செய்யலாம்' என்று அறிவுரை வழங்கியது. அதனடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்த நிலையில், மன்மோகன்சிங் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.



அதன்பின்னர், `அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று 2014 மற்றும் 2016- ம் ஆண்டுகளில் இரு முறை மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை வைத்த போதிலும், அதை ஏற்க மத்திய ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து, மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் ``தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் இந்த முடிவு குறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கூறுகையில், ``குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும். ஏனெனில், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில் முக்கியமானப் பிழையை, தான் செய்ததாக, இவ்வழக்கைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற அமர்விலேயே அவர் தன் உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூத்த நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக்கொண்டு, ஏழு பேரையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.



கொலையுண்ட ராஜீவ்காந்தியின் குடும்பத்தினர், ராகுல் காந்தி உட்பட `குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழுபேரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு மறுப்பேதுமில்லை' என்று தெரிவித்து விட்டனர். ராஜீவ் காந்தி கொலையில் பன்னாட்டுச் சதி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு பேரின் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது. இந்திய அரசோ, ஏழு பேரின் விடுதலையை ஏற்க முடியாது எனக் குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.

மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும். அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் படி தண்டனை குறைப்பை வழங்க முடியும். அந்த அதிகாரம் கட்டற்றது. ஆளுநர் முடிவு என்பது, தண்டனை குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சரவையின் முடிவே ஆகும். குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கூறியிருப்பது, மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது. எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்டப்பிரிவு 161-இன் படி அறிவிக்க வேண்டும்" என்றார்.



தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ``ஏறக்குறைய நான்கு வருடத்துக்கும் மேலாக அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை நிராகரித்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற முடிவு. அவர்களை விடுதலை செய்யும் பிரச்னையில், பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் குழப்பம் ஏற்படுத்துவதிலும், மாநில அரசும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஏற்கெனவே எடுத்த முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், தனது கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 27 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ``தண்டனை குறைப்பு தொடர்பாக ராஜீவ் கொலைக்கைதிகள் ஏழு பேரின் விவகாரத்திலும், இந்தித் திரைப்பட நடிகர் சஞ்சய் தத் விவகாரத்திலும் மத்திய அரசு எவ்வாறு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொண்டது என்பதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ள முடியும். மும்பைத் தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்தும் மத்திய அரசின் சட்டமான ஆயுதச் சட்டத்தின்படி சி.பி.ஐ. வழக்கில்தான் தண்டிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையில் 17 மாதங்கள் தண்டனை குறைப்பு செய்யப்பட்டு முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசு, இந்த ஏழு பேரின் விடுதலையை மட்டும் எதிர்ப்பது ஏன்? எனவே, அவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, ஏழு பேரின் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவது. இரண்டாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி, ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது ஆகும்.



நீதிமன்றத்தின் மூலமாக அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் என்பதாலும், மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ளாது என்பதாலும் முதலாவது வாய்ப்பின்படி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, தமிழக அரசின் முன் உள்ள கடைசி வாய்ப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமே. இதை உணர்ந்து உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 161-ஆவது பிரிவின்படி, ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்; அத்தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி, அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

 இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ``பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றத்தில் இதை தமிழக அரசின் சார்பில் எடுத்துச் சொல்லி, ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்க துணையாக இருப்போம்" என்றார். பேரறிவாளனுக்குப் பரோல் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, அரசியலமைப்புச் சட்ட விதி 161-ஐ பயன்படுத்தி அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யுமா என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.
`நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தானே செய்வீர்கள்' - திமுகவுக்கு எதிராகக் கொந்தளித்த அறப்போர் இயக்கம்! 
 
மலையரசு

அதிமுகவை போல திமுகவும் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சேதப்படுத்தியும் கொடிக்கம்பங்களை நட்டுவைத்துள்ளதை அறப்போர் இயக்கம் வெளிகொண்டுவந்துள்ளது.



தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்கப் பேனர், கட் அவுட் கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கிய பின்பு இது மீண்டும் படுஜோராக செயல்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கலாச்சாரம் எல்லை மீறும் வகையில் இருக்கும். அதாவது, சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் - அவுட்களும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்படும். அதற்காக நடைபாதைகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை வாசிகள் அடிக்கடி பார்க்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் சரி, அவர் மறைந்த பின்னும் சரி, அதிமுக தலைவர்களை வரவேற்க இந்த மாதிரி சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இதுகுறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதேபோல் மேலும் ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை சிக்கியிருப்பது திமுக. இதனை அறப்போர் இயக்கம் வெளிகொண்டுவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சென்னை ஈகா தியேட்டர் - கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சேதப்படுத்தியும் கட் - அவுட்களும், கொடிக் கம்பங்களும் நடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் ட்விட்டரில் ஸ்டாலினை டேக் செய்து, ``புதிய கிரானைட் நடைபாதையைச் சேதப்படுத்தி கொடிக் கம்பங்கள் நட்டியுள்ளதற்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவ திமுகவுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே, இந்தப் பதிவை பார்த்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ``நடந்த சிரமத்திற்கு மன்னிக்கவும். எங்களால் ஏற்பட்ட சேதத்தை எங்கள் கட்சி தொண்டர்கள் சரி செய்வார்கள். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாது. சேதங்களைச் சரி செய்த புகைப்படம் விரைவில் பதிவிடப்படும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்." எனக் கூறியுள்ளார்.
Just one check-in baggage on Jet Airways flights from July 

16 Jun 2018 | By Shiladitya Ray



Full service carrier Jet Airways has announced the first-ever restrictions in India on permissible check-in baggage on flights.

From July 15, economy class passengers on the airline will only be able to check in one bag weighing 15kg or less for free.

Meanwhile, 'premiere' class passengers will be allowed to carry two checked-in bags weighing 15kg or less for free.

Under the new rules, Jet Platinum flyers can carry two checked-in bags for free even when travelling on the economy class.

Meanwhile, Platinum card holders travelling premiere can carry two checked-in bags of 25kg each.

Interestingly, Jet Airways said that these restrictions had been in place for their international flights for over a year now, and that these will now apply for domestic flights.



ConfusionHowever, there's some confusion about certain details

However, what's not clear is how the airline will handle passengers who don't follow the new baggage rules.

For instance, if a passenger carries two checked-in baggage weighing 10kg and 5kg, it's not clear whether Jet Airways will charge any fee as a penalty.

The Jet Airways' note to travel agents and flyers did not address this concern.

What'll happen remains to be seen.

Baggage normsBaggage restrictions are pretty common in international flights

Although the number of baggage restrictions is a first for an Indian carrier in the domestic context, international flights generally have myriad restrictions like this.

Having fewer bags to load on to the aircraft has its advantages - it ensures quicker turnaround time for an aircraft, and airlines can use the additional storage space on planes to ferry cargo and earn additional revenues.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...