2 மாதமா அல்லது 2 வருடமா? உங்கள் மொபைலை எப்போது மாற்ற வேண்டும்? #GadgetTips
மு.ராஜேஷ்
vikatan
மொபைலை மாத்துனா என்ன? இந்தக் கேள்வி ஒருவருக்கு எப்போது தோன்றும் எனத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு முடிவு இறுதியானதாக இருந்தால் கையிலிருந்து ஒரு தொகை செலவாகப் போவது மட்டும் உறுதி. சிலர் மொபைலை பல வருடங்களாக மாற்றாமல் இருப்பார்கள். இன்னும் சிலரோ ஒவ்வொரு மாதத்துக்கும் புது மொபைல் என்றாலும் ஓகே என்பார்கள். உண்மையில் எது நல்ல விஷயம் ? ஒரு மொபைலை எப்போது மாற்றலாம் ?
ஒரு கேட்ஜெட்டோ அல்லது மொபைலோ அதற்கு இவ்வளவு நாள்தான் ஆயுட்காலம் என்ற இலக்கெல்லாம் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை. அதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும் வரை பயன்படுத்த முடியும். எக்காரணம் கொண்டும் நிறுவனங்களின் விளம்பரங்களை மட்டும் பார்த்து ஒரு மொபைலை முடிவு செய்வது நல்லதல்ல. ஆப்பிள் முதல் சாம்சங் வரை மொபைல் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கக் குறிப்பிடத்தக்க சில உத்திகளையே கையாளுகின்றன. ஒருவரை மொபைலை வாங்க வைப்பதில் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது நாம் நினைப்பதை விடவும் அதிகம். ஒருபுறம் புதிதாக ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க மறுபுறம் அதை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மொபைல் விற்பனை அறிக்கைகள் காட்டுகின்றன. ஒரு மொபைல் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் போது இதை விடச் சிறப்பான வசதி இருக்கவே முடியாது என்று விளம்பரம் செய்கிறது, ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அதற்கு அடுத்த மாடலை அறிமுகம் செய்து அதே கருத்தை மீண்டும் முன் வைக்கிறது. அதை நம்பி சிலர் வாங்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.
மொபைலை மாற்றுவதற்கான சரியான சமயம் எது ?
மொபைலைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்துக்கு அதை ஹார்டுவேரில் பிரச்னை ஏற்படாமல் இருந்தாலும் அதன் மென்பொருளில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மென்பொருளின் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதைச் சரி செய்ய உதவும் சாஃப்ட்வேர் அப்டேட்களும், செக்யூரிட்டியைப் பலப்படுத்தும் அப்டேட்களும் ஒரு பாதுகாப்பான மொபைலுக்கு அவசியம் தேவைப்படுபவை. அதில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மொபைலை மாற்றலாம். எத்தனை ஜிபி ரேம் இருந்தாலும் போட்டோ எடுக்கும் போது ரெண்டு மூணு செகன்ட் லேட் ஆகும்போது, 100% சார்ஜ் போட்டும் அரை நாள் கூட தாக்குப்பிடிக்காத நிலையில், எந்தச் செயலியும் சரியாக ஓபன் கூட ஆகாதபோது என மொபைலை இயல்பாகப் பயன்படுத்த முடியாத நிலையில் மொபைலை மாற்றலாம்.
புதிய வசதிகளை நம்மால் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமோ அல்லது புதிய வசதிகளை பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமோ கூட ஒருவரை அடிக்கடி கைப்பேசியை மாற்றத் தூண்டலாம். இதற்காகச் செலவு செய்வது தேவையற்றது என்பதையும் உணர்ந்தால் போதும். அடிக்கடி மொபைலை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து விடுபடலாம்.
அப்படிப் புதிதாக ஒரு மொபைலை வாங்கும் போதும் நமக்கு எந்த வசதி அதிகம் தேவைப்படுமோ அதை வாங்கினால் போதுமானது. மொபைலை அடிக்கடி மாற்ற விரும்பாதவர்கள் அதில் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்து விடுவது அவசியம். மொபைல் அதிகம் டேமேஜ் ஆகியிருந்தாலும் பரவாயில்லை இருப்பதை வைத்தே சமாளிப்போம் என்று இருப்பதும் தவறான முடிவாக அமையக் கூடும். அவசரமான நேரத்தில் மொபைல் காலை வாரிவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பழுதடைந்த மொபைலை நீண்ட காலம் மாற்றாமல் இருப்பதும் சரியான முடிவாக இருக்காது.
மொபைல் பழையதாகிவிட்டதாக உணர்கிறீர்களா? அதன் ஸ்க்ராட்ச் கார்டையும், பேக் கேஸையும் மாற்றிப் பாருங்கள். மொபைல் புதிது போல தெரியும். அதை வைத்தே இன்னும் சில மாதங்களுக்கு அடுத்த மொபைல் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போடலாம்.
இறுதியாக தேவையற்றதை வாங்கினால் தேவையிருப்பதை இழக்க வேண்டியிருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

No comments:
Post a Comment