Thursday, June 21, 2018

இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ந்த குடும்பத்தினர்: மகாராஷ்டிர அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் அதிர்ச்சி

Published : 21 Jun 2018 10:54 IST



படம்.| பிரதிநிதித்துவ நோக்கத்துக்கானது.

தாங்கள் மருத்துவமனையில் அனுமதித்தவர் உயிரோடு இருக்க அவர் இறந்து விட்டதாக வேறொருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையினர் ஒப்படைத்த உடலை வீட்டுக்கு எடுத்து வந்து பார்த்தபோது அதிர்ந்தனர், அது வேறொருவரின் உடல்!!

அவினாஷ் தாதாசாகேப் பக்வாதே என்பவர் உடல்நலக்கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 50 வயதான இவருடைய குடும்பத்தினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகிகள் பக்வாதே இறந்து விட்டார் என்று உடலை ஒப்படடைத்தனர். அதுவும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல் என்பதால் முகம் மூடப்பட்டிருந்தது குடும்பத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை, வீட்டுக்கு உடலை எடுத்து சென்று பார்த்தபோது தங்கள் உறவினர் அல்ல வேறொருவரின் உடலை ஒப்படைத்தனர் என்பதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

யார் இறந்ததாக உடல் ஒப்படைக்கப்பட்டதோ அந்த அவினாஷ் பக்வாதே மருத்துவமனையில் உயிருடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எப்படி இந்தக் குழப்பம்? என்றே தெரியாத குழப்பத்துடன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

அதைவிட அவலமானது, யாருடைய உடலை ஒப்படைத்தோம் என்ற அடையாளமும் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியரக்ளுக்குத் தெரியவில்லை.

சங்லி சிவில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது, இங்குதான் பக்வாதே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லிவர் பிரச்சினையினால் பக்வாதே அவதிப்பட்டு வருகிறார், சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று பக்வாதே குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பில் பக்வாதே இறந்து விட்டார் வந்து உடலைப் பெற்றுக்கொள்ளவும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து அலறியடித்துக் கொண்டு வந்த உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

“இதில் உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது, இது பக்வாதேயின் உடல் இல்லை என்ற ஐயம் எழுந்தது. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது உடனே உடலை எடுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்”என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சங்லியிலிருந்து 25 கிமீ தூரத்தில் தஸ்கவானில் உள்ள வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அவர் உடல் இல்லை இது என்ற சந்தேகம் எழ உடலில் சுற்றப்பட்ட துணியை அகற்றியுள்ளனர், அப்போது வேறொருவரின் உடலைக் கொடுத்தது கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர் குழப்பமும் அடைந்தனர், காரணம் பக்வாதே இறந்தது உண்மை ஆனால் உடல் மாறிவிட்டது என்றும், ஒருவேளை பக்வாதே உயிருடன் இருக்கிறார், வேறொருவர் உடலை கொடுத்துள்ளனர் என்ற நம்பிக்கைக் கீற்று மற்றொரு புறமுமாக குடும்பத்தினர் குழம்பியுள்ளனர்.

மருத்துவனைக்கு விரைந்து வந்து பார்த்தால் அவினாஷ் பக்வாதே உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தவர் உடல் யாருடையது, அவர் உடலை ஏன் இன்னும் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை, புரியாத புதிர்....
நிஜத்தில் ஒரு ‘சாட்டை’ சமுத்திரக்கனி: பணி மாறுதலில் சென்ற இளம் ஆசிரியரை கட்டிப்பிடித்து அழுத மாணவர்கள்

Published : 20 Jun 2018 21:21 IST
  திருவள்ளூர்

 


ஆசிரியரை செல்லவிடாமல் சூழ்ந்து கதறி அழும் மாணவர்கள்

திருவள்ளூரில் இளம் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவரை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் கண்ணீர் விட வைத்தது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தால் மாணவர்களுக்கு கற்றலில் பிரச்சினை ஏற்படாது. நல்ல நண்பன் நல்ல ஆசிரியராக இருக்க முடியும், அதுபோன்ற ஆசிரியர்களால் மாணவர்கள் கல்வி கற்றல் உயரும்.

அப்படிப்பட்ட இளம் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றபோது மாணவர்கள் அவரைப் பள்ளியை விட்டுச் செல்ல அனுமதி மறுத்து கட்டிப்பிடித்து அழுத சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அரசுப்பள்ளியில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டார் பகவான்.

பின்னர் பகவானுக்கு மாறுதல் கிடைத்தது, இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டுக் கிளம்பினார்.

ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர். இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து போலீஸார் சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.

ஆனாலும் அவர் போன பின்னரும் வகுப்புகளைப் புறக்கணித்து அனைவரும் போராட்டம் நடத்தினர். அவர் இல்லாமல் நாங்கள் பள்ளிக்கு வரமாட்டோம், இழுத்துப் பூட்டுவோம் என்று மாணவ மாணவியர் ஆவேசமாகத் தெரிவித்தனர். இப்படி ஒரு ஆசிரியரா? ‘சாட்டை’ படத்தில் சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியராக வந்து மாணவர்களின் நாயகனாக மாறுவார்.

அவர்மீது மிகுந்த அபிமானம் பொழியும் மாணவர்கள் அவரை மாறுதல் பெற்று போகும்போது அவரை அனுமதிக்க மறுத்து கண்ணீர் சிந்துவார்கள். அப்போது சமுத்திரக்கனி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும் என்று நல்ல அறிவுரை கூறிவிட்டு பிரியாவிடை பெற்றுச் செல்வார்.

அந்த சினிமா காட்சியை நினைவூட்டும் வண்ணம் ஆசிரியர் பகவானின் நற்செயல்கள் அமைந்ததைக் கண்டு பெற்றோரும், சக ஆசிரியரும் நெகிழ்ந்து போயினர்.
மருத்துவ தலைநகராக மாறும் 'மதுரை': 'எய்ம்ஸ்' மருத்துவமனையால் தென் மாவட்டங்களின் 'முகம்' மாறுமா?

Published : 21 Jun 2018 10:41 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் | படம்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மத்திய அரசின் 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, மதுரை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துரை செய்தார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நான்கு வழிச்சாலை, 200 ஏக்கர் நிலம், தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், ரயில்வே நிலையம், மிக அருகில் சர்வதேச விமானப்போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு 5 இடங்களில் ஒன்றை தேர்வு செய்வதாக கூறப்பட்டது.

இதில், 7 கி.மீ., தொலைவில் மதுரை விமானம் நிலையம், 2 கி.மீ., தொலைவில் என்எச்-7 நான்கு வழிச்சாலை, மிக அருகிலே திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் மதுரை ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மதுரை பெற்றிருந்தது.
 
மேலும், மதுரை, தென் மாவட்டங்களை இணைக்கும் பெருநகரம் என்பதாலும், கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள 18 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எளிதாக பயன்பெறுவார்கள் என்பதாலும் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என தென் மத்திய மாவட்ட மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

5 இடங்களை பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை குழுவும், தோப்பூரையே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 'எய்ம்ஸ்' இடம் தேர்வில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. திடீரென்று தமிழக அரசு, தோப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் செல்வதால் அங்கு 'எய்ம்ஸ்' அமைப்பது சிக்கலாக இருப்பதாக கூறி தஞ்சாவூர் செங்கிப்பட்டியை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசு, கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடத்தில் மட்டுமே 'எய்ம்ஸ்' அமைக்கப்படும் என கறாராக கூறிவிட்டது.

இந்த விஷயத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒருமித்த கருத்து இல்லாததால்தமிழகத்தில் 'எய்ம்ஸ்' அமைவது தள்ளிப்போய் வந்தது. அதேநேரத்தில் தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 'எய்ம்ஸ்' மருத்துவுமனைக்கான கட்டிப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

அதனால், 'எய்ம்ஸ்' விவகாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலைக்கு சென்றது. 'இடம்' தேர்வில் மத்திய அரசும், மாநில அரசும் ஒருவர் மீது ஒருவர் பழியைப்போட்டு தப்பிக்கப்பார்த்தனர். அதிருப்தியடைந்த உயர்நீதிமன்றம் கிளை, கடந்த வாரம் ஜூன்-14-க்குள் 'எய்ம்ஸ்' அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.

மற்றொரு புறம் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து 25 அமைப்பினர் டெல்லி, சென்னை, மதுரையில் கடந்த 3 ஆண்டாக மனித சங்கிலிப்போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் தோப்பூரில் 'எய்ம்ஸ்' அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மாநில அரசு அதற்கு தேவையான போக்குவரத்து வசதி, மின்சாரம், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவால் தற்போது தென் மாவட்ட மக்களுடைய கோரிக்கையை ஏற்று தற்போது மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைகிறது.

அங்கு 200 ஏக்கரில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவனை ரூ.1,600 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அந்த 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் முதற்கட்டமாக 100 எம்பிபிஎஸ் இடங்கள், 60 செவிலியர் பயிற்சி இடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அடுத்து ஆராய்ச்சிப்படிப்புகள், முதுநிலைப்படிப்புகளும் வர உள்ளது. அத்துடன் புற்றுநோய் கட்டிகள், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த ஓட்டம், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளை ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்யத் தேவையான ரேடியோ ஆக்டிவ் எலிமன்டை மும்பைக்கு அருகில் உள்ள ட்ராம்பேயில் உள்ள பாபா அணுஆராய்ச்சி நிலையத்திலிருந்து விரைவாக தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வர முடியும்.



அதனால், இதுவரை மதுரை சென்னைக்கு அடுத்த இரண்டாவது மருத்துவ தலைநகராக திகழ்ந்தது. தற்போது மதுரை ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகி அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதலமைச்சர் கே.பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளநிலையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையும் அமைவதால் தமிழகத்தின் மருத்துவ தலைநகராக மதுரை தலைநிமிர வாய்ப்புள்ளது.

இதுவரை வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையிலே மிகப்பெரிய வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தும் வடமாவட்டங்களை நோக்கியே சென்றது. தற்போது முதல் முறையாக தோப்பூரில் மத்திய அரசின் மிகப்பெரிய மருத்துவத்திட்டமான ‘எய்ம்ஸ்’ அமைவதால் தென் மாவட்டங்கள் மருத்துவம், கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மதுரையில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை தென் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய தொழிற்பேட்டைகள், மத்திய, மாநில அரசுகளின் பிரதானத்திட்டங்கள் இதுவரை தொடங்கப்படவில்லை.

அதனால், தென் மாவட்டங்களை சேர்ந்த படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் போன்ற தொழில்நகரங்களுக்கு இடம்பெயரும் அவலம் தொடர்ந்தது. தற்போது ‘எய்ம்ஸ்’ முதலீடு அமைவதால் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் விரைவுப்படுத்தப்பட்டு சர்வதேச விமானநிலைய அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவத்தொழிற்சாலைகள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்து திட்டங்கள் தொடங்க வாய்ப்புள்ளது.

3.25 கோடி மக்கள் பயன்பெற வாய்ப்பு:

மதுரை மடீட்சியா முன்னாள் தலைவரும், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான மணிமாறன் கூறுகையில், "தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆண்டிற்கு 27 லட்சம் நோயாளிகள், 9 லட்சம் உள் நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர். சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்குதான் அதிகளவு நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகின்றனர்.

18 மாவட்டங்களை சேர்ந்த 3.25 கோடி மக்கள், நேரடியாக 'எய்ம்ஸ்' மருத்துவமனையால் நேரடியாக பயன் பெறுவார்கள். 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைந்தால் மருந்து தொழிற்சாலைகள், அதற்கான துணை நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்பட ரூ; 5 ஆயிரம் கோடி வரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் புதிய தொழில் முதலீடுகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

மதுரை விமானநிலையம் மிக அருகில் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் பிற நகரங்களில் இருந்தும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் மதுரை வர வாய்ப்புள்ளது. அதனால், மதுரையில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சிப்பெற வாய்ப்புள்ளது. தென் மாவட்ட மக்கள், உயர் தர சிகிச்சைக்காக பல நூறு கி.மீ., கடந்து சென்னைக்கோ, பெங்களூரு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் குறைந்தப்பட்சம் நேரடியாகவும், மறைமுகமாவும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

'எய்ம்ஸ்'க்கு அருகில் 'பஸ்போர்ட்'

மதுரையில் 'பஸ்போர்ட்' அமைக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அந்த 'பஸ்போர்ட்'டை விமான நிலையத்திற்கும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் தோப்பூருக்கும் இடையில் 'ரிங்' ரோட்டிற்கு தொடர்புள்ள பகுதியில் அமைந்தால் விரைவான போக்குவரத்திற்கும், தென் மாவட்டங்கள் வளர்சிக்கும் உதவியாக அமையும்.

திருமங்கலம் ரயில்நிலையத்தில் முனையத்திற்கான வேலைகளை தற்போதே தொடங்கினால் 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டி முடிக்கும் நிலையில் எல்லாமே ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கணவே மதுரை நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், சாலைகளை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 'எய்ம்ஸ்' செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் நெரிசல் இன்னமும் கூடுதலாக வாய்ப்புள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல், காளவால் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலங்களை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். நகரச்சாலைகளை எளிதாக கடந்து செல்ல அவற்றை அகலப்படுத்த வேண்டும்.
இஸ்லாமியரை திருமணம் செய்ததால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரி: சுஷ்மாவிடம் முறையிட்ட பெண்

Published : 21 Jun 2018 14:41 IST

ஏஎன்ஐ நொய்டா

 


முகமது சித்திக் - ரண்வீர் சேத் தம்பதி

முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இந்து பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரி மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த ரண்வீர் சேத் என்ற பெண், முகமது சித்திக் என்பவரை 2007-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். அங்குள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு 7-வயது பெண் குழந்தை உள்ளது.

இருவரும் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தினர். இதற்காக நொய்டாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். அப்போது ரண்வீர் சேத்திடம் விசாரணை நடத்திய அதிகாரி, அவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்தது குறித்து விளக்கம் கேட்டார்.

இருவரும் மாறுபட்ட மதத்தை பின்பற்றுவது குறித்து பல்வேறு கேள்விகளை கேட்ட அதிகாரிகள், பெயரை மாற்றி அதனை அரசிதழில் வெளியிடடால் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியும் எனக் கூறினர். மேலும் ரண்வீர் சேத்தின் கணவர் முகமது சித்திக்கின் பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்தனர். முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ட்விட்டரில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு ரண்வீர் சேத் புகார் தெரிவித்தார். அதில், ‘‘நியாயமான ஆவணங்கள் இருந்தபோதும் வேறு ஒரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட் அதிகாரிகள் அநீதி இழைத்துள்ளனர்.

எனது கணவர் முஸ்லிம் என்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது குடும்ப விஷயம். இதற்கான எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது’’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிக்கு விளக்கம் கோரி வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட இருவருக்கும் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.
எப்போது உங்கள் மரணம்? - கண்டுபிடித்துச் சொல்லும் கூகுள்

Published : 21 Jun 2018 16:29 IST

புதுடெல்லி,

 

ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள் பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது.
 
வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று கூறுவார்கள். அது விரைவில் கூகுள் தொழில்நுட்பத்தால், நனவாகப் போகிறது.

கூகுள் நிறுவனத்தின் மெடிக்கல் பிரைன் டீம் ஒருங்கிணை ஆர்ட்டிபிஷயல் இன்டலிஜன்ஸை உருவாக்கி, மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்கள் எப்போது இறப்பார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வைத்துள்ளது.

இது முதல்கட்ட சோதனைதான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல்நலன் சார்ந்த விவரங்கள், மருந்துகள், மாத்திரைகள், போன்றவற்றின் உள்ளீட்டு விவரங்களைக் கூகுள் ஏஐ-யிடம்(ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்)அளித்தால், அந்த நோயாளி இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பார் என்ற விவரத்தை 93 முதல் 95 சதவீதம் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது.



அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை அளித்தாலும், எப்போது, எந்தத் தேதியில், எந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அடுத்து எத்தனை நாட்களுக்குப் பின் அவர் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும், அல்லது பரிசோதனைக்கு வர வேண்டுமா என்பதையும் கூகுள் ஏஐ தெரிவிக்கிறது.

இது குறித்த ஆய்வறிக்கை கடந்த மாதம் தி நேச்சர் வார ஏட்டில் வெளியாகி இருந்தது. அதில் மார்பகப் புற்றநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் உடல்பரிசோதனை குறித்த விவரங்கள் இந்தக் கூகுள் ஏஐயில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவரின் வாழ்நாள் குறித்து கேட்கப்பட்டது.

அந்த பெண் குறித்து ஆய்வு செய்த கூகுள் ஏஐ, 19.9 சதவீதம் உயிர்வாழ அந்த பெண்ணுக்கு சாத்தியம் இருக்கிறது என்றது. ஆனால், மருத்துவர்களோ 9.3 சதவீதம் மட்டுமே உயிர்வாழ சாத்தியம் என்று தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் கணிப்பின்படி அந்த பெண் இன்னும் சில மணிநேரங்களில் இறந்துவிடுவார் என்று முடிவு செய்தனர். ஆனால், இறுதியில் கூகுள் ஏஐ கணிப்பின்படி, அந்த பெண் அடுத்த சில நாட்களுக்கு உயிருடன் வாழ்ந்து அதன்பின் இறந்தார்.

கூகுல் ஏஐயில் செயல்படும் மனிதர்களின் நரம்புமண்டலம் போன்ற ஒருவகையான மென்பொருள் நாம் அளிக்கும் விவரங்களைத் தானாகவே கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது.

கடந்த காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்நலன் தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்து கூகுள் ஏஐயிடம் அவர்கள் இறந்த நாட்கள், தேதி குறித்து கேட்கப்பட்டது. அதில் கூகுள் ஏஐ கூறிய தேதிகள், நேரம் ஏறக்குறைய 95 சதவீதம் சரியாக பொருந்தியது கண்டு மருத்துவர்கள் வியந்துவிட்டனர். அந்த புள்ளிவிவரங்களைக் கொடுத்ததும் கூகுள் ஏஐ செயல்பட்ட விதம், வேகம், அதன் துல்லியத்தன்மை ஆகியவற்றைக் கண்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் வியந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கூகுள் நிறவுனத்தின் இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு மருத்துவமனைகளிலும், கிளினிக்களிலும் கொண்டுவரப்படும். அப்போது, ஒருநோயாளின் நோய் குறித்த விதம், அவரின் உடல்நலன் சார்ந்த விவரங்கள் மூலம் அவர்களின் வாழ்நாள் குறித்த துல்லியத்தன்மை, அவர் குணமடைவாரா, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதையும் அறிய முடியும்.

மேலும், கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் உடல்நலன் குறித்த விவரங்களை அளிக்கும் போது ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வரும், சாத்தியங்கள் குறித்து கண்டுபிடித்துக் கூற முடியும். கூகுள் மெடிக்கல் பிரையன் தொழில்நுட்பம், மருத்துவர்களோடு இணைந்து செயல்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் ஒருவருக்கு நீரழிவுநோய் வருமா என்பதையும் கண்டுபிடித்துக் கூற முடியும.்

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் பயணிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஊழியர்களின் சுயநலத்திற்காக பயண வழி உணவகங்களில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்

Published : 21 Jun 2018 18:56 IST


என்.முருகவேல் விருத்தாசலம்
 



விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே தத்தாதிரிபுரத்தில் கழிப்பிட வசதியற்ற பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப நிறுத்தப்படும் பயண வழி உணவகங்களால் மிகவும் மோசமான அனுபவங்களையே பல பயணிகள் சந்தித்திருக்கின்றனர்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் போது காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிவரை இரு புறங்களில் புற்றீசல் போன்று மோட்டல் என்ற உணவகங்கள் இருப்பதைக் காணலாம். அந்த உணவகத்தில் தேநீர் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு சுடுநீர் கிடைக்கும். விலை பற்றி கேட்டால் அடாவடியான பதில். வேணும்னா குடி, இல்லைன்னா போயிட்டே இரு.

உணவு பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் வைத்தது தான் விலை? அவர்கள் நினைப்பது தான் தரம்! சாப்பிட வேண்டியது பயணியின் தலையெழுத்து என்பது சொல்லாமல் சொல்லப்படும் கட்டளை. இத்தகைய மோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலை நகர்புறங்களில் உள்ள ஓட்டல்களில் நிர்ணயிக்கப்படும் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதைக் காண முடியும். சில மோட்டல்களில் விலைப் பட்டியலே இருக்காது. அவர்கள் சொல்லும் விலைக்கு பணம் கொடுக்கவேண்டும். இதில் கேட்கப்படாமலேயே டிப்ஸூம் வசூலிக்கப்படும். விலை அச்சிடப்பட்ட தின்பண்டங்களின் விலையோ கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இது தவிர இயற்கை உபாதைக்கான கழிப்பிடம் முதல் குடிநீர் அருந்துவது வரை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பயணிகள் நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலில், இத்தகைய மோட்டல்களில் இயற்கை உபாதைக்காக இறங்க நேரிடுகிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பேணப்படுவதில்லை. சில இடங்களில் சிறுநீர் கழிக்க மட்டுமே வசதி உள்ள சூழலில் வயதான பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. மேலும் சில இடங்களில் கழிப்பிட வசதி முற்றிலும் இல்லாத நிலையில், திறந்தவெளியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் விபத்தைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது.

குறிப்பாக சிதம்பரம்-சேலம் செல்லும் பயணிகளுக்காக, விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் மற்றும் தத்தாதிரிபுரம் ஆகிய இடங்களில் பேருந்துகளை நிறுத்தும் ஊழியர்கள், பெண் பயணிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நிறுத்திவிடுகின்றனர். அப்பகுதியில் உணவகம் இருக்கிறதே தவிர, இயற்கை உபாதைக்கான வசதி இல்லை. இதனால் ஆண் பயணிகள் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். பெண் பயணிகளின் நிலையோ பெரும் கவலைக்குரியதாகிவிடுகிறது.

அண்மையில் தத்தாதிரிபுரம் பகுதியில் பெண் பயணி ஒருவர் திறந்தவெளியில் மறைவான இடத்திற்குச் சென்ற போது, பாம்பு கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த போது, கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சிலரை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரட்டும் நிலை உள்ளது. மிகுந்த சங்கடத்திற்குள்ளாகும் பெண்கள், சிறுநீரை வெளியேற்ற முடியாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த விவகாரம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் கேட்டபோது, ''இதுபோன்ற உணவகங்களில் ஏன் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன என்ற கேள்வியை பயணிகள் எங்களிடம் கேட்கின்றனர். இத்தகைய அடிப்படை வசதியற்ற உணவகங்களில் நிறுத்தவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அதிகாரிகள் கட்டாயப்படுத்தும் போது நாங்கள் என்ன செய்வது?அவர்கள் கட்டாயத்தை மீறினால் விளக்கக் கடிதம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, எந்த மோட்டலில் நிறுத்தவில்லையோ, அதே மோட்டலுக்குச் சென்று ரசீதில் சீல் வைத்து வாங்கி வந்தால்தான், பயணக் கட்டண வசூலைப் பெற முடியும் என்று வாய்மொழி உத்தரவால் வதைக்கப்படுகிறோம்'' என்கின்றனர்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூரப் பேருந்துகள் நெடுஞ்சாலை ஓரங்களில், அடிப்படை வசதியற்று அமைந்துள்ள குறிப்பிட்ட சில மோட்டல்களில் உணவுக்காக நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அவலத்தை களைவதற்கு அரசு நிர்வாகம் நேரடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பது தொலைதூரப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பயணிகள் நலப் பிரிவு மேலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு முறையும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். பயணிகளின் வசதிக்கேற்ப உணவகங்களை நிறுத்தவேண்டும் என்று. ஆனால் எவரும் மதிப்பதில்லை. குறிப்பாக சிதம்பரம்-சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை ஆத்தூரில் தான் நிறுத்தவேண்டும் என பரிந்துரைத்திருக்கும் பட்சத்தில், இதுபோன்ற கழிப்பிட வசதியற்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்துவது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக அப்பகுதியில் ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
HC notice to govt, dental colleges 

Special Correspondent 

 
KOCHI, June 19, 2018 00:00 IST


The Kerala High Court on Monday issued notice to the State government and self-financing dental college managements on a batch of writ petitions filed by MDS course students seeking to grant them stipend for their three-year period of study and work.

According to them, though the students doing postgraduation in government dental colleges were provided stipend, students of self-financing colleges were refused stipend.

NEWS TODAY 25.07.2026