Sunday, September 23, 2018

Technology

நுகர்வோருக்கு லாபம்!

By ஆசிரியர்  |   Published on : 21st September 2018 01:52 AM  

கடந்த 2017 மார்ச் மாதம் வோடஃபோன் குழுமத்தின் இந்தியப் பிரிவும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைவது என்று எடுத்த முடிவு, கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறையின் ஒப்புதலைப் பெற்றது.
இடைப்பட்ட 16 மாதங்களில் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியிலிருந்தது, இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி 113 கோடியாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, இரண்டு இலக்க எண்ணிக்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த இணைப்புக்குப் பிறகு நான்காகக் குறைந்திருக்கிறது. அதில், பி.எஸ்.என்.எல். அரசுத்துறை நிறுவனம். ஏனைய மூன்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள். 

வோடஃபோன் இந்தியாவும், ஐடியா செல்லுலாரும் இணைந்து வோடஃபோன் - ஐடியாவாக மாறியதைத் தொடர்ந்து, இது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியிருக்கிறது. உலகின் 2-ஆவது மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சந்தையான இந்தியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தப் புதிய நிறுவனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். 
வோடஃபோன் - ஐடியாவில் மொத்த வாடிக்கையாளர் இணைப்புகள் 43 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பார்தி ஏர்டெல்' நிறுவனம் 35 கோடி இணைப்புகளுடனும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 25.1 கோடி இணைப்புகளுடனும் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து செயல்பட்டாலும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவது மட்டுமல்லாமல், மூன்று தனியார் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் கார்ப்பரேட் யுத்தத்திலிருந்து அது விலகியே இருக்கிறது. இனிவரும் காலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே வலிமையான தொலைத்தொடர்பு நிறுவனங்களாகச் செயல்படும் என்று கூறலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கியது முதல், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியது. 2016 வரையில் இலவசச் சேவை வழங்கி, அதைத் தொடர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் இணையதளம் உள்ளிட்ட சேவைகளை ஜியோ வழங்கத் தொடங்கியபோது, அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் செய்வதறியாது திகைத்தன. ரிலையன்ஸ் ஜியோ இப்போது 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஜியோ செல்லிடப் பேசிகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவரும் நிலையில், எல்லா நிறுவனங்களும் தங்களது உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய 4 ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையின் மூலம் ஒன்றரை ஆண்டு காலத்தில் 21.5 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது. இதை எதிர்கொள்ள, ஏனைய நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. இணைப்புக்குப் பிறகு வோடஃபோன்-ஐடியா நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு, வாடிக்கையாளர் தொடர்பான சேவைகளுக்குத் தரும் ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்கி இருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான போராட்டம் மேலும் அதிகரிக்கும்போது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தாற்போல என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது. 

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை மொத்தமாகத் தனது கைப்பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள முடியாமல் இருந்ததால்தான் வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் தனித்தனியாக செயல்படாமல் இணையும் முடிவுக்கே வந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

சந்தைப் பொருளாதாரம் என்பது போட்டியின் அடிப்படையிலானது. அதிகரித்துவரும் தொலைத்தொடர்பு சேவைக்கான சந்தையில் மூன்று பெரிய நிறுவனங்கள் போட்டியில் இறங்கியிருக்கும் நிலையில், கட்டணக் குறைப்பு யுத்தம் தொடங்கக்கூடும். அது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், இணையதள வேகமும், தரமான சேவையும், குறைந்த கட்டணத்தில் எந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் சேவைக்கு மாறிக்கொள்ளும் வசதியை தொலைத்தொடர்பு இடமாற்றம் (போர்ட்டபிலிடி) வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இனிமேல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அழைப்பு முறிவை (கால் டிராப்) அசட்டையாக ஒதுக்கிவிட முடியாது. 
வோடஃபோன் இந்தியாவும் ஐடியா செல்லுலாரும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த இணைப்பின் விளைவாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். இரண்டு நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்திருக்கின்றன. இணைப்பின் பயனாக இந்த நிறுவனத்திடம் 3 ஜி, 4 ஜி தொழில்நுட்பக் கருவிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதும், அழைப்புக் கோபுரங்களின் (டவர்) எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வாடிக்கையாளர்களுக்கான சேவை மேம்பாட்டை உறுதிப்படுத்துவதுடன் புதிய பகுதிகளைத் தங்களது தொடர்புக்குள் கொண்டு வரவும் உதவும்.

3.5 லட்சம் அகண்ட அலைவரிசை (பிராட்பாண்ட்) இணைப்புகளையும், 17 லட்சம் சில்லறை விற்பனையாளர்களையும், 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கும் வோடஃபோன் - ஐடியா நிறுவனத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அது எப்படி ரிலையன்ஸ் ஜியோவின் அதிகரித்துவரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தப் போகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

"ஆறுச்சாமி... ராம்சாமி... போதும் சாமி..!" - 'சாமி 2' விமர்சனம் #Saamy2


விகடன் விமர்சனக்குழு

'சாமி 2' திரை விமர்சனம்



'ஓல்டு இஸ் கோல்டு' என்பார்கள். உண்மைதான். சில பழைய விஷயங்களை திரும்ப தூசி தட்டி மீட்டெடுக்கவே கூடாது. காரணம், சில சமயங்களில் அப்படி தூர்வாரி தூசிதட்டும்போது தங்கம் துருப்பிடித்த தகரமாகிவிடும் வாய்ப்புகளுண்டு - இந்த டயலாக்கிற்கும் இந்த பட விமர்சனத்திற்கும் சாமியின் மேலிருக்கும் ஸ்கொயர் சத்தியமாக தொடர்பில்லை. (தூர்... தூசு... துரு... - அதாவது நாங்க ஹரி படம் பார்த்துட்டு வந்துருக்கோம்.) 'சாமி 2' படம் எப்படி?



திருநெல்வேலியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெருமாள் பிச்சையை போட்டுத் தள்ளியதிலிருந்து தொடங்குகிறது சாமி ஸ்கொயரின் வேட்டை. ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான பாபி சிம்ஹா. அவர் பெயர் ராவண பிச்சை, அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தரின் பெயர் மகேந்திர பிச்சை, இரண்டாவது அண்ணனின் பெயர் தேவேந்திர பிச்சை. (படிக்கவே தலை சுத்துதா?... அப்போ இதை எல்லாம் ஹரி ஸ்டைல் ஃபாஸ்ட் பார்வேர்ட்ல பாத்த எங்களுக்கு எப்படி இருக்கும்?)

ஆடியன்ஸ் தவிர மீதி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பெருமாள்பிச்சை பற்றிய தங்கமலை ரகசியத்தை தரையிறங்கிய இரண்டே நாட்களில் தெரிந்துகொள்கிறார், ராவண பிச்சை. அதன்பின் அவருக்கும் விக்ரமுக்குமான மோதல் சூடுபிடிக்கும் என நினைத்தால் அங்குதான் வெச்சுருக்காங்க ட்விஸ்ட். சடசடவென 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகி, 2031-ல்(???) நடக்கிறது கதை. அங்கும் ஒரு விக்ரம் இருக்கிறார். ஒரு பாபி சிம்ஹா இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் யார்?. ஆறுச்சாமிக்கு என்னாச்சு என்பதை சொல்லும் கதைதான் சாமி ஸ்கொயர்.

ஆறுச்சாமியாக விக்ரம். 2031-ல் இல்லை, நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும்கூட மனிதர் அப்படியேதான் இருப்பார் போல. 'சாமி' முதல் பாகத்தில் பார்த்த அதே விக்ரம். எடையைத் தவிர எதுவும் மாறவில்லை. நடிப்பும் அதே எனர்ஜி மற்றும் துள்ளலோடு! ஆனால் விக்ரம் 'சாமி' முதல் பாகத்திற்குப் பின் நடிப்பில் வெவ்வேறு உயரங்களைத் தொட்டுவிட்டதால் அதே பழைய ஃபார்மெட் கதை அவருக்கேற்ற தீனியைத் தராதது போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது.



'இவருக்குப் பதில் இனி இவர்' என்ற மெகாசீரியல் கான்செப்ட்டை சீக்வல் சினிமாக்களுக்கு கொண்டு வந்திருக்கிறார், ஹரி. ஆனால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது பொருத்தமில்லாத சாய்ஸாகவே இருக்கிறது. போதாக்குறைக்கு இயல்பாகவே அழகாக இருக்கும் அவரை மெனக்கெட்டு வெள்ளையாக்க முயன்று தோற்றிருக்கிறார்கள். மற்றொரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ் மற்ற ஹரி பட ஹீரோயின்களைப் போலவே வருகிறார்... விழுகிறார்... விரட்டுகிறார்... விரட்டப்படுகிறார்!

காமெடியில் இது சூரிக்கு அடுத்த லெவல் படம். முன்பெல்லாம் கோபம் வருவதுபோல காமெடி செய்தவர், இதில் ஒருபடி மேலேறி கடுப்பைக் கிளப்பும் காமெடிகள் செய்திருக்கிறார். எரிச்சலில் ஆடியன்ஸ் கொடுக்கும் கவுன்ட்டர்களே பலமடங்கு பெட்டர். 1432-வது முறையாக சொல்கிறோம் சூரி! உங்களது ஸ்டைலை மாற்றிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!

மற்ற அனைவரும் அடக்கிவாசிப்பதால் தனியாகத் தெரிகிறார், பாபி சிம்ஹா. அதே 'ஹே... ஏய்... ஏலேய்..' டைப் வில்லன்தான். ஆனாலும் ஆங்காங்கே அசால்ட் சேது தெரிவதால் ரசிக்க முடிகிறது. பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா - படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.



டி.எஸ்.பி இசை - நோ கமென்ட்ஸ். ஒரே கருவியை உருட்டி உருட்டி சவுண்ட் ரெக்கார்டிங் முடித்திருப்பார் போல. பழைய சாமியின் பி.ஜி.எம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அதில் ஒரு சதவீதம்கூட புது பேக்ரவுண்ட் ஸ்கோரில் இல்லை. பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். அதைவிடக் கொடுமை அவை இடம்பெற்றிருக்கும் இடங்கள். ப்ரியனும் அவருக்குப் பின் வெங்கடேஷ் அங்குராஜும் செய்திருக்கும் ஒளிப்பதிவுதான் படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது.

சூரியைப் போல ஹரியும் அடுத்த லெவல் பயணித்திருக்கிறார். முன்பெல்லாம் சீன்களில்தான் ஃபாஸ்ட் பார்வேர்டு மோடில் இருக்கும். இப்போதெல்லாம் கதையே 28 ஆண்டுகள் ஃபாஸ்ட் பார்வேர்டாகிறது. முதல் பாகத்தையும் இதையும் கனெக்ட் செய்யும் இடங்கள் எல்லாம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

சின்னச் சின்ன 'அட' ட்விஸ்ட்கள்தான் ஹரி ஸ்பெஷல். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகள் எதுவுமே இல்லை. முதல்பாதி முழுக்க இழுஇழுவென இழுத்தடிக்கும் திரைக்கதை. இரண்டாம் பாதியில்தான் ஹரியின் சாயல் தெரிகிறது. ஆனால் அதுவும் மிகப்பழைய சாயல். ஒரு கட்டத்தில் இது ஆக்‌ஷன் படமா, பேய்ப்படமா இல்லை டைம் ட்ராவல் படமா என்ற சந்தேகம் வேறு மூளைக்குள் வட்டமடிக்கிறது.

படம் முழுக்க யாராவது யாரையாவது அறைந்துகொண்டே இருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் பட்ஜெட்டைவிட எண்ணிக்கையில் தாண்டும் போல. போதாக்குறைக்கு விக்ரமும் 'இப்போது கையைத் தூக்கியடிப்பது உங்கள் விக்ரம்' என விடாமல் ஸ்க்ரோல் போடுமளவிற்கு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வசனங்கள். 'ஐ.ஏ.எஸ் மூளை.. ஐ.பி.எஸ் வேலை', நடந்தா ஒருவாரத்துல சாவ, ஓடுனா ஒரே நாள்ல சாவ' என அநியாயத்துக்கு அவுட்டேட்டட் வசனங்கள் காதைக் குடைகின்றன.



ஹரி படத்தில் லாஜிக் பார்ப்பது தெய்வக்குத்தம்தான். ஆனால் இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் கடைக்கோடி குடிமகனோடு 'ஹாய் டூட், நைட் என்ன டின்னர்?' ரேஞ்சுக்கு சாட் செய்வதெல்லாம் ஹரி படத்தில் மட்டுமே சாத்தியம்! 'எங்ககிட்டயும் கிராஃபிக்ஸ் பண்ண ஆளிருக்கு' எனக் காட்டுவதற்காகவே சி.ஜியை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒய் பாஸ்?

ஓரிடத்தில் 'இன்னுமா ஜாதி எல்லாம் பார்க்குறாங்க?' எனக் கேட்கிறார் விக்ரம். அதற்கு சில காட்சிகள் முன்னதாக, 'உன்னை நான் இந்த அடையாளத்தோட வளர்த்தேன்' என தொட்டுக் காண்பிக்கிறார் டெல்லி கணேஷ். ஓப்பனிங் காட்சியில் பெண்களை எப்படியெல்லாம் நடத்தவேண்டும் என பாடமெடுக்கிறார் ஹரி. நல்லது! ஆனால் விக்ரம் பளீர் பளீரென கீர்த்தி சுரேஷை அறைவது மட்டும் எப்படி ஹீரோயிசத்தில் வரும்? சாமி முதல் பாகம் வந்தபோது ஹீரோயின்களுக்கு படங்களில்கூட பெரிதாக வாய்ப்பில்லை. ஆனால் இரண்டாவது பாகம் வரும் நேரத்தில் அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா என பெண்கள் ஷீரோக்களாக படம் பண்ணி லாபம் பார்க்கும் வகையில் மார்க்கெட்டில் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் எத்தனை காலத்திற்கு பொண்ணுங்க இப்படி இருக்கணும், பசங்க அப்படி இருக்கணும் என்ற பாடம்?

'நான் பொறந்த ஊருல எதுவும் இன்னும் மாறல' என ஆதங்கமாக பாட்டும் வசனமும் வைப்பதெல்லாம் சரிதான். அந்த மாற்றத்தை ரசிகர்கள் உங்களிடமும் எதிர்பார்ப்பார்கள்தானே! கதையிலும் கருத்திலும் உங்களிடம் அந்த மாற்றம் எப்போது வரும்?

பறக்கும் விமானத்திற்குள் காற்றழுத்தம் குறையும்போது ஏன் காது, மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது ?


இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு Jet Airways விமானத்தில் காற்றழுத்தக் கோளாறு ஏற்பட்டு பயணிகளின் காது, மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது.
அதைத் தொடர்ந்து காற்றழுத்தக் கோளாற்றுக்கும் காது, மூக்கில் இரத்தம் வருவதற்கும் என்ன தொடர்பு என்று ''செய்தி" அறிய விரும்பியது.
தொலைபேசி மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர். ரவி சேஷாத்திரியிடம் தொடர்பு கொண்டு பேசியது.

விமானம் மேலே செல்லச் செல்ல வெளிப்புறக் காற்றழுத்தம் குறைகிறது.
அதை ஈடுகட்ட விமானத்தினுள் காற்றழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுவது முக்கியம்.

இல்லாவிட்டால், பயணிகள் சுவாசிக்கப் போதுமான பிராணவாயு இல்லாமல் போகும்.

பொதுவாகக் காற்றழுத்தம் திடீரென இறங்கி, போதுமான பிராணவாயு இல்லாதபோது நம் காது, மூக்கின் உட்பகுதிகள் எளிதாக பாதிக்கப்படும்.
அப்போது அந்த பாகங்களில் உள்ள சின்னச் சின்ன இரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வர ஆரம்பிக்கும் என டாக்டர். ரவி குறிப்பிட்டார்.
சில நேரங்களில் காற்றழுத்தக் கோளாறு மோசமாக இருந்தால் காதின் உள்செவிப்பறைகள் கிழியும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு காற்றழுத்தக் கோளாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காதில் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்து காது கேளாமல் போகலாம்.

அது சில மணி நேரம், சில நாள், இல்லை சில மாதம் வரைகூட நீடிக்கலாம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

இனி தூரமும் பக்கம் தான் - சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லப் புதுரக விமான சேவைகள்



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புதுரக விமானமான AIRBUS A350-900ULR விமானத்தை வாங்கியுள்ளது.

உலகிலேயே அவ்வகை விமானம் வாங்கும் முதல் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

அந்த விமானம், சிங்கப்பூரில் இருந்து நியூ யார்க் செல்லும் சேவையை வழங்கவிருக்கிறது. அது அடுத்த மாதத்தில் இருந்து பயணச் சேவையைத் தொடங்கும்.

சிங்கப்பூரில் இருந்து நியூ ஜெர்சி செல்லும் நேரடி விமான சேவையையும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

AIRBUS A350-900ULR விமானம் 20 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் ஆற்றலைப் பெற்றது.

சிங்கப்பூரில் இருந்து நியூ யார்க் செல்ல கிட்டத்தட்ட 19 மணி நேரம் ஆகும்.
தற்போது சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்ல, வாரந்தோறும் 40 விமான சேவைகள் உள்ளன. டிசம்பர் மாதத்தில் இருந்து அது 53-க்கு அதிகரிக்கப்படும்.

Medical College Inspections: SC Appoints Nandan Nilekani To Examine Possibility of Computer Network Based/ AI Solution [Read Order] | Live Law

Medical College Inspections: SC Appoints Nandan Nilekani To Examine Possibility of Computer Network Based/ AI Solution [Read Order] | Live Law: The Supreme Court on Wednesday appointed Mr. Nandan Nilekani for examining the possibility of a computer network based or artificial intelligence based technological solution for inspection of medical colleges by the Medical Council of India (MCI). The petitions before the court had initially been filed by private medical colleges which had been denied permission to …

ரூ.4,500 விலையில் டூயல் செல்ஃபி கேமரா..! அதிரடி விலை குறைப்பு..!! பிரபல மொபைல் நிறுவனம் அறிவிப்பு..!!

வாடிக்கையாளர்களை கவர பல தற்போது மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அதிரடி சலுகையை வழங்கி வருகிறது. இந்நிலையயில், பிரபல மொபைல் நிறுவனமான இன்டெக்ஸ் குறைந்த விலையில் டூயல் செல்பி கேமரா ஸ்மார்ட்போனை வாடிக்கையாளருக்கு வழங்க இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

வாடிக்கையாளர்களை கவர அணைத்து நிறுவனங்களும் பல சலுகைகளை மொபைல் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், ஸ்டார்ஐ 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துயுள்ளது. மிக குறைந்த விலையில் இரண்டு செல்பி கேமரா கொண்ட போனை ரூ.4,499 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட் போன் ஸ்னாப்டீல் வர்த்தக தலத்தில் மட்டும் கிடைக்கின்றது.

இதன் சிறப்பம்சங்கள்:

5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்- கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்
டூயல் சிம் ஸ்லாட்
8 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
8 எம்.பி + 2 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எப்.எம் (FM), ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
2400 எம்.ஏ.ஹெச்(Mah) பேட்டரி Posted by SSTA

டிவி நிகழ்ச்சியினால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்!



டிவி நிகழ்ச்சியினால் நேர்ந்த விபரீதம்!

தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியைப் பார்த்து வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்தபோது பள்ளி மாணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஊரப்பாக்கத்தை அடுத்த ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் வில்சன். இவர், தனியார் ஹோட்டலொன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செம்மஞ்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகனான ஜெபின், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், இன்று (செப்டம்பர் 22) வீட்டில் தனியாக இருந்தார் ஜெபின். அப்போது, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சாகச நிகழ்ச்சியை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தூண்டுதலுக்கு ஆளான ஜெபின், வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ஜெபின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் ஈசன் இளங்கோ அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், “ஊடகங்களில் முன்பெல்லாம் இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்போது, இந்த நிகழ்ச்சிகளைச் செய்து பார்க்க வேண்டாம் என்று சமூக அக்கறையுடன் டைட்டில் போடுவார்கள். அது மட்டுமல்லாமல், ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். “இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள்; ரொம்ப ஆபத்தானது; வீட்டில் இருக்கிறவர்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டாம்” என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே சொல்வார்கள். அல்லது அந்த நிகழ்ச்சியின் அடியில் எழுத்தில் அந்த தகவல் இருக்கும். தற்போது இதுமாதிரி எதுவும் போடுவதில்லை” என்று தெரிவித்தார்.

தற்போது, ஊடகங்கள் பொறுப்பற்ற தன்மையோடு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். “இது மாதிரியான சாகசங்கள் செய்தே ஆக வேண்டும் என்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. இதில் என்ன அவசியம் உள்ளது. இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யக்கூடாது. இது மாதிரி செய்கிறவர்களை ஊடகங்களும் அங்கீகரிக்கக்கூடாது” என்றார் ஈசன் இளங்கோ.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...