Sunday, September 23, 2018

பறக்கும் விமானத்திற்குள் காற்றழுத்தம் குறையும்போது ஏன் காது, மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது ?


இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு Jet Airways விமானத்தில் காற்றழுத்தக் கோளாறு ஏற்பட்டு பயணிகளின் காது, மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது.
அதைத் தொடர்ந்து காற்றழுத்தக் கோளாற்றுக்கும் காது, மூக்கில் இரத்தம் வருவதற்கும் என்ன தொடர்பு என்று ''செய்தி" அறிய விரும்பியது.
தொலைபேசி மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர். ரவி சேஷாத்திரியிடம் தொடர்பு கொண்டு பேசியது.

விமானம் மேலே செல்லச் செல்ல வெளிப்புறக் காற்றழுத்தம் குறைகிறது.
அதை ஈடுகட்ட விமானத்தினுள் காற்றழுத்தம் சரியான அளவில் பராமரிக்கப்படுவது முக்கியம்.

இல்லாவிட்டால், பயணிகள் சுவாசிக்கப் போதுமான பிராணவாயு இல்லாமல் போகும்.

பொதுவாகக் காற்றழுத்தம் திடீரென இறங்கி, போதுமான பிராணவாயு இல்லாதபோது நம் காது, மூக்கின் உட்பகுதிகள் எளிதாக பாதிக்கப்படும்.
அப்போது அந்த பாகங்களில் உள்ள சின்னச் சின்ன இரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வர ஆரம்பிக்கும் என டாக்டர். ரவி குறிப்பிட்டார்.
சில நேரங்களில் காற்றழுத்தக் கோளாறு மோசமாக இருந்தால் காதின் உள்செவிப்பறைகள் கிழியும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு காற்றழுத்தக் கோளாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காதில் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுத்து காது கேளாமல் போகலாம்.

அது சில மணி நேரம், சில நாள், இல்லை சில மாதம் வரைகூட நீடிக்கலாம் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024