Saturday, September 29, 2018

காய்ச்சலுக்கு சிகிச்சைபெற முகவரி பதிவு கட்டாயம்

Added : செப் 28, 2018 23:02

சென்னை, 'காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவோரின், முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2017ல் டெங்கு காய்ச்சலில், 22 ஆயிரம் பாதிக்கப்பட்டனர்; 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பன்றி காய்ச்சலில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணமாகக் கூறப்பட்டது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற வருவோரின் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட, முழு தகவலையும் பெற்று, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, நோயாளியின் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு, உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்படும்.டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024