இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
Added : செப் 28, 2018 21:37 |
சென்னை: பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மார்க்குக்கு கீழ் பெற்றுள்ள மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கான தகுதிசான்று தர கூடாது என என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி கூறி இருப்பதாவது: இந்தியாவில் பிளஸ் 2 வில் 90 சதவீதம் மதிப்பெண்ண பெற்ற மாணவரால் மருத்துவபடிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான தகுதி தேர்வு மதிப்பெண்களை 80 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். பணம் மூலம் வெளிநாட்டு கல்லூரிகளில் படிப்பதற்கான தகுதி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கூறி இருந்தார்.
இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள மருத்துவ கவுன்சில் வெளிநாட்டுகல்லூரிகளில் சேர நீட் தேர்வு தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment