Friday, September 28, 2018

சைக்கிளில் சுற்றும் நெல்லை துணைவேந்தர்

Updated : செப் 28, 2018 00:17 | Added : செப் 27, 2018 22:58 |




திருநெல்வேலி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் சைக்கிளில் வலம் வருகிறார்.

பல்கலையை 'பசுமை வளாகமாக்கும்' முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்கலை வளாகத்தில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பல்கலை வளாகத்தில் தங்க 25 ஆண்டுகளாக வசதி இல்லை. பல்கலையில் இருந்து 25 கி.மீ., கடந்து வாடகை பங்களாக்களில் வசித்தனர். தற்போது துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் வசிக்க பல்கலை வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்து கிளம்பி மீண்டும் திரும்புவது வரை துணைவேந்தர் சைக்கிளில் மட்டுமே செல்கிறார். பல்கலையில் நடக்கும் விழாக்கள், பணிகளை பார்வையிடவும் சைக்கிள்தான். அவர் கூறுகையில், ''ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்கு அதிகாரிகள் தனி கார் வைத்துக்கொள்வது குறைந்துவிட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்கிறார். வளாகத்தில் உள்ள 550 ஏக்கர் பரப்பிலும் உள்ள அனைத்து துறைகளுக்கும் சைக்கிளில் வலம் வருகிறார்.

ரயில், பஸ், சைக்கிளை பயன்படுத்துகின்றனர். பல்கலையில் ஜி.பி.எஸ்., கருவிகளுடன் 100 சைக்கிள்களை பயன்படுத்த உள்ளோம். ஆசிரியர், மாணவர், அலுவலர்கள் இதை பயன்படுத்தலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024