Saturday, September 29, 2018

குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்

Added : செப் 28, 2018 22:17






ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில், தன் இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூர தாய், அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர், விஜய், 30; தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அபி ராமி, 25. இவர்களுக்கு அஜய், 7, மற்றும் கார்னிகா, 4, என்ற ஆண், பெண் குழந்தைகள் இருந்தன.குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், 27, என்பவனுடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31ல், குழந்தைகள் இருவருக்கும் பாலில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தாள்.கள்ளக்காதலன், சுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை, நாகர்கோவிலில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன் சுந்தரத்தையும், ஒரே வாகனத்தில் நேற்று அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, அக்.,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்காதலர்கள் அபிராமியும், சுந்தரமும் மீண்டும் புழல் சிறைக்கு, பலத்த பாதுகாப்புடன், ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.ஒரே வேனில் வந்த போதிலும், இருவரும் தனித்தனியாக, சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். வேனில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தாள்.வழக்கு முடிந்து, புழல் சிறைக்கு செல்வதற்காக, வேனில் அபிராமி அமர்ந்து இருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தாள். சுந்தரத்தை பார்ப்பதற்காக, அவனின் காதல் மனைவியும், நீதிமன்றம் வந்திருந்தார். அவர் மிகவும் சோகமாக இருந்தார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...