Friday, September 28, 2018

தீபாவளி பஸ்கள் நவ., 3 முதல் இயக்கம்

Added : செப் 27, 2018 21:49

சென்னை, தீபாவளிக்கு, அரசு போக்குவரத்து கழகங்கள், 22 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்களை இயக்க உள்ளன.தீபாவளிக்கு, அரசு பஸ்களை இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர், போக்கு வரத்து கழக அதிகாரிகளுடன் நேற்று, ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து, அதிகாரி கள் கூறியதாவது:தீபாவளி பண்டிகை, நவம்பர், 6ல் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, நவ., 3, ௪, ௫ மற்றும், 7, 8ம் தேதிகளில், மொத்தம், 22 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில், வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க, கோயம்பேடு, அடையாறு,தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024