இனி தூரமும் பக்கம் தான் - சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லப் புதுரக விமான சேவைகள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புதுரக விமானமான AIRBUS A350-900ULR விமானத்தை வாங்கியுள்ளது.
உலகிலேயே அவ்வகை விமானம் வாங்கும் முதல் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
அந்த
விமானம், சிங்கப்பூரில் இருந்து நியூ யார்க் செல்லும் சேவையை
வழங்கவிருக்கிறது. அது அடுத்த மாதத்தில் இருந்து பயணச் சேவையைத் தொடங்கும்.
சிங்கப்பூரில்
இருந்து நியூ ஜெர்சி செல்லும் நேரடி விமான சேவையையும் நவம்பர் மாதத்தில்
இருந்து தொடங்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
AIRBUS A350-900ULR விமானம் 20 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் ஆற்றலைப் பெற்றது.
சிங்கப்பூரில் இருந்து நியூ யார்க் செல்ல கிட்டத்தட்ட 19 மணி நேரம் ஆகும்.
தற்போது
சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்ல, வாரந்தோறும் 40 விமான சேவைகள்
உள்ளன. டிசம்பர் மாதத்தில் இருந்து அது 53-க்கு அதிகரிக்கப்படும்.
No comments:
Post a Comment