Thursday, November 15, 2018

தாம்பரம் - கொல்லம் ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

Added : நவ 14, 2018 22:36

ஸ்ரீவில்லிபுத்துார்: தாம்பரம் - கொல்லம் சிறப்பு கட்டண ரயில் சேவையை, ஜனவரி வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தாம்பரத்திலிருந்து, ஜனவரி 2,4,7,9,16,18,21,23,25 ஆகிய தேதிகளில், மாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலுார், கொட்டாரக்கரா வழியாக கொல்லத்திற்கு மறுநாள் காலை, 9:20 மணிக்கு சென்றடைகிறது. அன்றே, மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து,காலை, 11:30 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில், மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது.
மாநில செய்திகள்

கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்


கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 15, 2018 06:26 AM
சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 380 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 400 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும். புயல் கரையைக்கடக்க்கும் போது வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Drivers of app cabs to go on strike again, from Saturday

ManthanK.Mehta@timesgroup.com

Mumbai:15.11.2018

The drivers and owners of Ola and Uber cabs have decided to go on strike from November 17 onwards if their demands are not met by then. “Two days after that, on November 19, a big morcha is planned from Bharat Mata junction to Vidhan Bhavan to highlight our continuing problems,” said Marathi Kamgar Sena leader Mahes Jadhav.

Drivers associated with app cabs had been on a fortnight-long strike till November 3. They returned to work following the intervention of state transport minister Diwakar Raote.

But at the time of withdrawing the strike, the drivers’ union had clarified that the withdrawal was temporary and discussions would continue with the managements of Ola and Uber for improving drivers’ earnings by increasing ride-time charges and incentives. One of the demands is linking fares with fuel price hikes “in the near future”.

A Uber spokesperson said, “We have instituted a national fuel price index, which will ensure that driver earnings across India are correlated with changes in the price of fuel. Mumbai is the first city where we will be rolling this out.”

Wednesday, November 14, 2018

`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி


எஸ்.மகேஷ்   vikatan 




``சேலம் - சென்னை ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணத்தில் 5.78 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க ஒரு வாரமாக ரிகர்செல் செய்தோம். நேரமில்லாததால்தான் குறைவான தொகையைக் கொள்ளையடித்தோம். அந்தப் பணத்தில் மூன்று மாதங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'' என ரயில் கொள்ளைத் தலைவர் மோஹர்சிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சேலம் - சென்னை ரயிலின் கொள்ளைச் சம்பவத்தை துப்பு துலக்கி மோஹர்சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காலியா என்கிற கிருஷ்ணா என்கிற காபு, பில்டியா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்களை கடந்த 30.10.18 முதல் 12.11.2018 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``5.78 கோடி ரூபாய் ரயில் கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியான மோஹர்சிங்கின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள கேஜ்ராசாக் என்ற சிறிய கிராமம். அவருடன் பிறந்தது 3 சகோதரர்கள், 3 சகோதரிகள். மோஹர்சிங்கின் தந்தையின் சகோதரர் பிரேம்டா பார்தி. அவருக்கு கிரண், சங்காராம், ருசி, மகேஷ், பாசு, அமீன், தரம் ஆகிய 7 மகன்கள். இவர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மோஹர்சிங், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கும்பல் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.
 
இந்தக் கும்பலுக்குத் தலைவனாக கிரண் இருந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு கிரண் தனது சகோதரர்கள் சங்காராம், ருசி, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸார், கிரணைத் தவிர மற்றவர்களை கைது செய்தனர். கிரணை போலீஸார் தேடி வந்தநிலையில் 2012-ம் ஆண்டு அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் கொலை வழக்கில் 2015-ம் ஆண்டு சங்காராமுக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. ருசியும், மகேஷும் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த 2015- ம் ஆண்டு விடுதலையாகினர்.



கிரண் இறந்துவிட்டதால் மோஹர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைமை ஏற்றுள்ளார். அவரின் தலைமையில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில் மோஹர்சிங் கும்பல் குறித்து ருக்சத் பார்தி, நாவல் பார்தி என இருவர் உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம், மோஹர்சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்தக் கொலைக்கு மோகர்சிங் மற்றும் அவரின் சகோதரர்கள் ராம்பூஜன், கஜராஜ், அவரின் சகோதரி சுலோசனா, மோஹர்சிங்கின் மனைவி பன்வாரா பாய் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இந்தக் கொலைக்குப் பிறகு உள்ளூர் போலீஸார் மோஹர்சிங் மற்றும் அவரின் குடும்பத்தினரை தீவிரமாகத் தேடினர். இதனால் அங்கிருந்து குடும்பத்துடன் மோஹர்சிங் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார். மோஹர்சிங் தலைமையிலான டீம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியது.


2016-ம் ஆண்டு மோஹர்சிங் தலைமையிலான டீம் தமிழகத்துக்கு வந்தது. விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். ரயில்வே தண்டவாளங்களின் அருகிலும் மேம்பாலங்களிலும் குடில் அமைத்து தங்கினர். இந்தச் சமயத்தில்தான் சேலத்திலிருந்து சென்னைக்குக் கோடிக்கணக்கில் ரூபாய் ரயிலில் எடுத்துச் செல்லும் தகவல் மோஹர்சிங்கிற்கு கிடைத்துள்ளது. இதனால் மோஹர் சிங் தலைமையில் ருசி, காலியா, பில்டியா ஆகியோர் அயோதியாபட்டினம் -விருத்தாசலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் ஒரு வாரமாகப் பயணித்து நோட்டமிட்டுள்ளனர். சின்னசேலத்திலிருந்து விருத்தாசலம் ஆகிய ரயில் நிலையங்கள் வரை 45 நிமிடங்களுக்கு மேலாக எங்கும் நிற்காமல் ரயில் செல்வதை கொள்ளைக் கும்பல் கண்டறிந்து பணத்தைக் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுள்ளனர். சின்னசேலத்தில் மோஹர்சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ரயிலின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துள்ளது. பிறகு ரயிலின் மேற்கூரையில் துளைபோட்ட அந்தக் கும்பல் பெட்டிக்குள் இரண்டு பேர் இறங்கியுள்ளனர். லுங்கியில் பணத்தை மூட்டையாகக் கட்டி மேலே எடுத்து வந்துள்ளனர். திட்டமிட்டப்படி விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டரில் உள்ள வயலூர் மேம்பாலத்தில் மகேஷ்பார்தி மற்றும் கூட்டாளிகள் காத்திருந்தனர். அவர்களிடம் பண மூட்டையைக் கொடுத்துவிட்டு மோஹர்சிங் தலைமையிலான கும்பல் ரயில் வளைவுப் பகுதியில் மெதுவாகச் செல்வதைப் பயன்படுத்தி ரயிலின் மேற்கூரையிலிருந்து குதித்து தப்பியுள்ளது'' என்றார்.



போலீஸ் காவலின்போது மோஹர்சிங், ``ரயிலில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு செல்லும் தகவல் கிடைத்ததும் அதே ரயிலில் பயணித்து ஒரு வாரம் ரிகர்செல் செய்தோம். அப்போது எப்படிக் கொள்ளையடிப்பது என்று திட்டமிட்டோம். அதன்படி கொள்ளையடித்தோம். 45 நிமிடங்களுக்குள் ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு அதில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்தோம். நாங்கள் கட்டியிருந்த லுங்கியில் 5.78 கோடி ரூபாயைத்தான் மூட்டையாக கட்டமுடிந்தது. இதனால் மீதமுள்ள பணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டோம். கொள்ளையடித்த பணத்தை சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம். கொள்ளையடித்த மூன்று மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு என்று அரசு கூறியதால் கொள்ளையடித்த பணத்தைச் செலவழிக்க முடியாமல் தவித்தோம். இருப்பினும் அந்த மூன்று மாதங்களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல். இதனால் செலவழிக்க முடியாத ரூபாய் நோட்டுக்களை தீ வைத்து கொளுத்தினோம்" என்று வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சவாலான வழக்கை திறமையாகக் கண்டுபிடித்த சிபிசிஐடி சிறப்புக் குழுவினருக்குச் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய போபால் சிபிசிஐடி போலீஸாருக்கும், குறிப்பாக அந்தப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரம்வீர்குஸ்வாவுக்கும் தமிழக காவல்துறை நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ரயில் கொள்ளையர்களைப் பிடித்த சிபிசிஐடி போலீஸ் டீம் மற்றும் முகமூடி அணிந்த கொள்ளையர்களின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
'ரெட் அலர்ட்' பயன்பாடு வேண்டாம்  வானிலை மையத்திற்கு தமிழக அரசு

dinamalar 14.11.2018

சென்னை: 'மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை, அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்க, இணைய தளத்தில், ரெட் அலர்ட் என்ற, சிகப்பு குறியீடை பயன்படுத்த வேண்டாம்' என, தமிழக வருவாய் துறை சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில், அவ்வப்போது, வானிலை நிலவரம் வெளியிடப்படுகிறது. புயல் உருவாகும்போது, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை தெரிவிக்கவும், அந்த பகுதிகளில், அரசு அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு தயாராக வேண்டும்

என்பதை குறிக்கவும், 'சிகப்பு' நிற குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இது, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது.

இதை தவிர்க்க, சிகப்பு நிற குறியீடு பயன்படுத்துவதை தவிர்க்கும்படி, தமிழக வருவாய் துறை சார்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது: புயல் தொடர்பான தகவல்களுக்காக, 'TN-SMART' என்ற, 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளோம். அதில், புயல் கரையை கடக்கும் நிகழ்வுகளை தெரிவிக்க உள்ளோம். இதை, பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, புயல் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இணையதளத்தில், எவ்வளவு மழை பெய்யும் என்பதை, அரசு அலுவலர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என, நான்கு நிறங்களை பயன்படுத்துவர். இதை, மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர்.

எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் பேசி, 'நீங்கள் கொடுக்கும் தகவல், எங்களுக்கு தெரிகிறது. பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்வதால், நிறம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்' என, கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு

Added : நவ 13, 2018 23:04

தேனி: 'லோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர், மண்டல அலுவலர்கள், பயிற்சி அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் , பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்தல்பணியாற்ற உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் முழு விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம்.இதனை இன்று காலையில் இருந்து (நேற்று) 48 மணி நேரத்திற்குள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில் தனியாக மிக அதிக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் அங்கு பணிபுரிந்த அலுவலர்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகிறது,' என்றார்.
'கஜா' நாளை இரவுக்குள்  கரை கடக்க வாய்ப்பு

dinamalar 14.11.2018

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், 'கஜா' புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.



வங்க கடலில், நவ., 9ம் தேதி இரவு உருவான, கஜா புயல், தமிழகத்தை நோக்கி மிகவும் மெதுவாக சுழன்ற வண்ணம் உள்ளது. இந்த புயல் நேற்று, மேலும் வலுவாகும் என, கூறப்பட்ட நிலையில், நேற்றிரவு வரை, அதேநிலையில் தான் இருந்தது. புயல் நகரும் வேகம், மணிக்கு, 25 கி.மீ.,லிருந்து, 15 கி.மீ., ஆக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம், தென்மேற்கு திசையில் வேதாரண்யத்தை நோக்கி சுழன்ற புயல், நேற்று வடமேற்கு திசைக்கு மாறி காரைக்காலை நோக்கி சுழன்ற வண்ணம் உள்ளது. எனவே, கடலுார் மற்றும் பாம்பன் இடையே, எந்த இடத்தில் வேண்டுமானாலும், புயல் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன், 'நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கும்' என தெரிவித்துள்ளார். அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின் படி கஜா புயல் நாளை பிற்பகல் முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.

ராமேஸ்வரம் தீவுக்கு ஆபத்து?

'கஜா' புயல் அறிவிப்பால் 2500 விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. 100 கி.மீ., வேகத்தில் புயல் கரையை கடக்கும் போது படகுகள், மீனவர் குடிசைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. புயல் பாதிப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் ஆய்வு செய்தார்.ஆனால், நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் சூறாவளிக் காற்று, கடல் கொந்தளிப்பு, ராட்சத அலை ஏதும் இன்றி கடல் குளம்போல் காட்சியளித்தது.

9 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

கஜா புயல் காரணமாக, புதுச்சேரி, கடலுார், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு 16ம் தேதி வரை 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் சீற்றத்துடன் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். 10 மீட்டர் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளது. கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் வங்க கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலில் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள கரைகளில், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NEWS TODAY 14.07.2026