Friday, March 8, 2019

23 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் 106 டிகிரி பதிவு: 10 நகரங்களில் 100 டிகிரி வெயில்

Published : 08 Mar 2019 07:23 IST




வெப்ப அலையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வருகிறது. சென்னை பல்லாவரத்தில் நாள் முழுக்க மேம்பால கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர், அந்திசாயும் மாலைப் பொழுதில் தண்ணீர் குடித்து இளைப்பாறுகிறார். பின்னணியில், சுட்டெரித்த சூரியன் தொடுவானில் தரையிறங்கும் காட்சி. படம்: எம்.முத்துகணேஷ்

தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கத்தால் 10 நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபடி, தமிழ கத்தில் கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை 7 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலை யில், புதன்கிழமை அன்று 9 இடங் களில் பதிவாகி இருந்தது. அதன் உச்சகட்டமாக நேற்று 10 நகரங் களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

நேற்று மாலை 5.30 மணி நில வரப்படி, அதிகபட்ச வெப்பநிலை யாக மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, சேலத்தில் 105 டிகிரி, திருத்தணி, திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, பாளையங்கோட்டை, நாமக்கல், வேலூர் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கோவையில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகி யுள்ளது.

மதுரையில் மார்ச் மாதத்தில் கடந்த 1996-ம் ஆண்டு அதிக பட்ச வெப்பநிலையாக 106 டிகிரி பதிவாகியிருந்தது. இதுவே மதுரையில் கடந்த 140 ஆண்டு களில் மார்ச் மாதத்தில் பதி வான அதிகபட்ச வெப்பநிலை யாகும். இந்நிலையில் 23 ஆண்டு களுக்கு பிறகு நேற்று மீண்டும் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு திசைக் காற்றின் வலு குறைய வாய்ப்புள்ளதால், தமிழகத் தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப் பில்லை. படிப்படியாக வெப்ப நிலை குறையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024