Thursday, March 14, 2019

மாஜி கருவூல அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை லஞ்ச வழக்கில் விழுப்புரம் கோர்ட் அதிரடி

Added : மார் 14, 2019 04:42


விழுப்புரம்:சம்பள பட்டியலுக்கு அனுமதி வழங்க, 2,000 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற உதவி கருவூல அதிகாரி உட்பட இருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து,

விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளராக, 2004ல் பணிபுரிந்தவர் சுமதி. இவர் தன் துறை சார்ந்த குழந்தைகள் உணவூட்டு செலவின பட்டியல், மாதாந்திர சம்பள பட்டியல், சேமநல நிதி முன்பண பட்டியல் ஆகியவற்றை திண்டிவனம் சார் நிலை கருவூலத்தில், பில்கள் பாஸ் செய்ய வேண்டி சமர்ப்பித்தார். 

அதற்கு லஞ்சம் கேட்டதால், சுமதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி,உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்த தயாளனிட்ம், 2,000 ரூபாயும், கணக்காளர் தண்டபாணிக்கு, 1,500 ரூபாயும், இளநிலை உதவியாளர் அண்ணாதுரைக்கு, 500 ரூபாயும் வழங்கப்பட்டது.தயாளனின் பணத்தை அங்கிருந்த, வேளாண் பொறியியல் துறை அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவன் சுமதியிடம் வாங்கினான். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நால்வரையும் கையும், களவுமாக பிடித்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகள் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கணக்காளர் தண்டபாணி இறந்தார். இவ்வழக்கினை விசாரித்த, நீதிபதி பிரியா நேற்று தீர்ப்பு வழங்கினார்.திண்டிவனம் உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தயாளன், 79; ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் அண்ணா துரை, 62; ஆகிய இருவருக்கும் தலா, ஐந்து ஆண்டுகள் சிறையும், 6000 ரூபாய் அபராதமும் ஆறுமுகத்திற்கு, 49, நான்கு ஆண்டுகள் சிறையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024