Monday, March 4, 2019

50-வது ஆண்டை கொண்டாடிய ராஜதானி எக்ஸ்பிரஸ்

Updated : மார் 04, 2019 04:05 | Added : மார் 04, 2019 03:54

கோல்கட்டா: முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கிய பயணத்தின் 50-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



நாட்டின் மிக பெரிய பொது துறைகளில் ஒன்றான ரயில்வே துறை பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் கால மாற்றத்திற்கேற்ற வகையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் , துரந்தோ எக்ஸ்பிரஸ் என துவங்கி தற்போது தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வரை பல்வேறு விரைவு ரயில்களையும் இயக்கி வருகிறது. அவற்றில் முதன் முறையாக இயக்கப்பட்டவவை ராஜதானி எக்ஸ்பிரஸ்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் பயணத்தை மார்ச் மாதம் 3 -ம் தேதி 1969-ம் ஆண்டில் மே.வங்க மாநிலம் ஹவுாவில் இருந்து இருந்து புதுடில்லிக்கு துவங்கியது. தற்போது 50 -வது ஆண்டை எட்டி உள்ளது. இதன் பொன் விழா மே.வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக ரயில் சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் விழாவில் முன்னாள் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். பொன் விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.ஹவுரா ரயில் நிலைய ஊழியர்கள் பொன்விழாவை குறிக்கும் செய்தி அடங்கிய பேட்ஜ் அணிந்திருந்தனர்.


பொன்விழா தினத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாநிலத்தின் பாரம்பரிய மீன் உணவு மற்றும் சைவ கட்லெட் , ஐஸ்கிரீம் போன்றவை வழங்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி (கிழக்கு)ஜெனரல் மேனேஜர் டேபாசிஸ் சந்திரா கூறினார்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்

*நாட்டின் முதலாவது ஏசி ரயில்

*பயணத்தின் இடையே பயணிகளுக்கு கட்டணத்துடன் உணவு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

*முதலாவது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024