Tuesday, March 19, 2019


அனுமதியின்றி விடுப்பு: டாக்டர்கள் மீது நடவடிக்கை

Added : மார் 19, 2019 03:12


கோவை: அனுமதியின்றி விடுப்பு எடுக்கும், அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 5,000க்கும் அதிகமான டாக்டர்கள் பணிபுரிகின்றனர். முன்னறிவிப்பு இன்றி, இவர்கள் விடுப்பு எடுப்பதாக எழுந்த புகார் உண்மை என தெரிய வந்ததால், நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:டாக்டர்கள் பணிக்கு வராமல் இருப்பதால், நோயாளிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.இரு நாட்களுக்கு மேல் விண்ணப்பம் வழங்காமல், விடுப்பு எடுக்கும் டாக்டர்களை, உடனடியாக பணியில் இணைய கடிதம் வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் மருத்துவ விடுப்பு எடுக்க முயலும் டாக்டர்களது உடல்நிலை குறித்து உறுதிப்படுத்த, மருத்துவ குழுவுக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும்.

குழு பரிந்துரையின்றி, விடுமுறையை அங்கீகரிக்க இயக்குனரகத்துக்கு பரிந்துரைக்கக்கூடாது. இரு மாதங்கள் பணிக்கு வராத டாக்டர்கள், ஓய்வு பெறும் நாள் வரை பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பின், முதுநிலை, உயர் மருத்துவ சிறப்பு படிப்பின்போது அரசு வழங்கிய, 'ஸ்காலர்ஷிப்' தொகையை. வட்டியுடன் அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இரு மாதங்களுக்கு மேல் பணிக்கு வராமல் உள்ள, டாக்டர்களை பணியிட மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதுஇவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024