Thursday, March 21, 2019

கேட்டரிங் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகளின் எதிர்காலம் என்ன தினமலர் வழிகாட்டியில் அள்ளித்தெளித்த ஆலோசனைகள்

Added : மார் 21, 2019 00:06


மதுரை, ''கேட்டரிங், பாராமெடிக்கல் மற்றும் ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இப்படிப்புகளை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன,'' என மதுரையில் நடக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று துவங்கிய இந்நிகழ்ச்சியின் மாலை அமர்வில் பேசியவர்கள்:கேட்டரிங் மற்றும் உணவு அறிவியல் சுரேஷ்குமார், பேராசிரியர், கடல்சார் விருந்தோம்பல் துறை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை:இது நுாறு சதவீதம் செய்முறை தொடர்புடைய படிப்பு. படித்து முடித்தவுடன் நுாறு சதவீதம் வேலைவாய்ப்பும் உறுதி. கார்கோ மற்றும் பயணிகள் உள்ளிட்ட கப்பல் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிப்பதால் இப்படிப்பிற்கு சிறப்பாக எதிர்காலம் காத்திருக்கிறது.

சுற்றுலா பயணிகள் கப்பல்கள், கப்பல் கம்பெனிகள், ஸ்டார் ஓட்டல்கள், ஏர்லைன் மற்றும் ஆர்மி கேன்டீன்கள், கார்ப்பரேட் மருத்துவமனை கேன்டீன்களில் பணிவாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எட்டாயிரம் பயணிகள் இருப்பர். அவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு தயாரித்து விருந்தினரை எப்படி உபசரிப்பது என்பதுதான் இப்படிப்பு. பல நாடுகளை சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைக்கும். வருமான வரி கிடையாது. 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் உயரும்.சர்வதேச கட்டமைப்பு வசதி, சிறப்பான பயிற்சி அளிக்கும் கல்லுாரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். 

பாடப்பிரிவுகள் உரிய அங்கீகாரம் பெற்றவையா என உறுதி செய்ய வேண்டும். இப்படிப்புகள் உள்ள மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் தரமான கட்டமைப்பு உள்ளது.பாராமெடிக்கல் மற்றும் ஹெல்த் சயின்ஸ்சரவண ஹரி கணேஷ், இணை பேராசிரியர், பிஸியோதெரபி துறை, எஸ்.ஆர்.எம்., பல்கலை:மருத்துவத் துறை சார்ந்த அறிவியல் படிப்புகள் தான் பாராமெடிக்கல் மற்றும் ஹெல்த் சயின்ஸ் படிப்புகள். எட்டு பேருக்கு ஒரு பாராமெடிக்கல் படிப்பு முடித்தோர் தேவையாக உள்ளது. மருந்து உற்பத்தி மற்றும் வினியோகத் துறைக்கு பார்மஸி முடித்தோர் அதிகம் தேவையாக உள்ளனர். இதற்காக பி.பார்ம்., டி.பார்ம்., படிப்புகள் உள்ளன.பிஸியோதெரபி முடித்தால் மறுவாழ்வு மையங்கள், பிட்னஸ் சென்டர்கள், சிறப்பு குழந்தைகள், முதியோர் பராமரிப்பு என பலவகையிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.பி.எஸ்சி., நர்சிங் முடித்தால் குறிப்பாக, பெண்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 இதுதவிர ஆகுபேஷன் தெரபி, ஸ்பீச் தெரபி, பப்பளிக் ஹெல்த் போன்ற படிப்புகளில் ஆர்வம் காட்டலாம். பி.எஸ்சி., நியூட்டரிஷியன் அன்ட் டயட்டிஸ், கார்டியல் புரொபொஷன் டெக்., கார்டியாக் கேர் டெக்., ஆபரேஷன் தியேட்டர் அன்ட் அனஸ்தீசியாஸ் டெக்., மெடிக்கல் லேபரட்டரி டெக்., போன்ற படிப்புகள் படிக்கும் போதே வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும். மருத்துவம், பொறியியல் கிடைக்காத நிலையில் இதுபோன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs  Swati.Deshpande@timesofindia.com 02.10.2024  Mumbai : Bombay HC on Tuesday con...