Thursday, March 21, 2019

சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்களை மருந்துடன் தேர்வுக்கு அனுமதிக்க வழக்கு

Added : மார் 21, 2019 00:23

மதுரை, சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்களை மருந்துகள், உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் தேர்வறைக்குள் அனுமதிக்க தாக்கலான வழக்கில், 'மதுரை இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனைகளின் சர்க்கரை நோய் பிரிவு தலைமை டாக்டர்கள் ஆஜராக வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகர் கேசவன் தாக்கல் செய்த பொதுநல மனு:முதல்வகை சர்க்கரை நோய் (டைப் 1) குழந்தைப் பருவத்தில் வருகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் (டைப் 2) வயதானவர்களுக்கு வருகிறது. முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு, மருத்துவ உதவிகள் தேவை. இப்பாதிப்புள்ள மாணவர்களை மருந்து, பழங்கள், சாக்லேட், குடிநீருடன் தேர்வறைக்குள் அனுமதிக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ,) தேர்வு கட்டுப்பாட்டாளர் 2017 பிப்.,21 ல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் பள்ளி பொதுத்தேர்வுகள், யு.பி.எஸ்.சி., நீட், ஜெ.இ.இ.இ., உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதச் செல்லும்போது அவர்களுக்குரிய உணவு, மருந்துகளை தேர்வறைகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

 இயற்கை உபாதை கழிக்க அனுமதிப்பதில்லை. அவர்களுக்குரிய உரிமை மறுக்கப்படுகிறது.முதல்வகை சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்களை மருந்துகள், உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் தேர்வறைக்குள் அனுமதிக்கவும், இயற்கை உபாதை போக்க அனுமதிக்கவும் மத்திய, மாநில அரசுகள் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, 'மதுரை இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனைகளின் சர்க்கரை நோய் பிரிவு தலைமை டாக்டர்கள் இன்று (மார்ச் 21) ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். மத்திய மனிதவளத்துறை செயலர், மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது' என்றனர்.

No comments:

Post a Comment

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs

HC confirms death for man who killed mother, ‘cooked’ organs  Swati.Deshpande@timesofindia.com 02.10.2024  Mumbai : Bombay HC on Tuesday con...