Tuesday, March 19, 2019

ஓபிஎஸ்ஸை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் சீட் இல்லை: நிராயுதபாணியாக நிற்கும் ‘தர்மயுத்த’ எம்.பி.க்கள்

Published : 19 Mar 2019 07:45 IST



அதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ‘தர்மயுத்தம்’ நடத்திய அவரது ஆதரவு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குக்கூட மீண்டும் ‘சீட்’ வழங்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல் வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத் தது. இதில் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கியுள்ளதாக தெரிவித் தார். அப்போது அவருக்கு பக்கபலமாக 10 எம்.பி.க்கள் நின்றனர்.

சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரால் முதல்வராக்கப்பட்ட கே.பழனிசாமி, பிறகு ஓபிஎஸ்ஸை அழைத்துக் கொண்டார். ஓபிஎஸ் துணை முதல்வர் ஆனார். அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் பொறுப்பு கள் வழங்கப்பட்டன.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் ஒரே அணி யாக நின்று சசிகலாவையும், டிடிவி தின கரனையும் ஓரங்கட்டினர். கட்சியின் பெயர் மற்றும் ‘இரட்டை இலை’ சின்னத்தை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே தேர்தல் ஆணை யம் வழங்கியது. கட்சி ஒருங்கிணைப் பாளராக ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப் பாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றனர்.

கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக் கும் ஓபிஎஸ், இத்தேர்தலில் தனது ஆதர வாளர்களுக்கு கணிசமான இடங்களை வாங்கிக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், அவரது ஆதரவு எம்.பி.க்கள் 10 பேரில் ஒருவருக்குகூட மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. மாறாக, ஓபிஎஸ் உட்பட பல அமைச்சர்கள், எம்எல்ஏக்க ளின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அதிமுகவின் 37 எம்.பி.க்களில் 27 பேர் ஈபிஎஸ் அணியினர்; 10 பேர் ஓபிஎஸ் அணியினர். இதில், ஈபிஎஸ் அணியை சேர்ந்த தம்பிதுரை (கரூர்) டாக்டர் வேணுகோபால் (திருவள்ளூர்), டாக்டர் ஜெயவர்தன் (தென் சென்னை), மரகதம் குமரேவல் (காஞ்சிபுரம்), மகேந்திரன் (பொள்ளாச்சி), செஞ்சி சேவல் ஏழுமலை (ஆரணி) ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியை சேர்ந்த சுந்தரம் (நாமக்கல்), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சத்தியபாமா (திருப்பூர்), வனரோஜா (திரு வண்ணாமலை), கோபாலகிருஷ்ணன் (மதுரை), செங்குட்டுவன் (வேலூர்), மருத ராஜா (பெரம்பலூர்), ஜெயசிங் தியாக ராஜ நட்டர்ஜி (தூத்துக்குடி), பார்த்திபன் (தேனி) உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரன் விபத் தில் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. அதுவும் வழங்கப்பட வில்லை.

ஏற்கெனவே, தனது தம்பிக்கு ஆவின் சேர்மன் பதவி வாங்கித் தந்த ஓபிஎஸ், தற்போது அவரது மகனுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று, ஆதரவாளர்களை கைவிட்டு விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஓபிஎஸ்ஸை இன்னமும் விட்டுக் கொடுக்காத அவரது ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, தலை மைப் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளது. அதனால், ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தர முடியாத நிலை ஏற்பட் டிருக்கலாம். அதற்காக, தன்னை நம்பி இருந்தவர்களை கைவிட்டுவிட்டார் என்று கூறமுடியாது’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 01.10.2024