Sunday, April 14, 2019

3 நாள் தொடர் விடுமுறை எதிரொலி 'சரக்கு' வாங்கி குவிக்கும் கட்சியினர்

Added : ஏப் 13, 2019 23:05

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அரசியல் கட்சியினர், 'சரக்கு'களை வாங்கி பதுக்கி வருகின்றனர்.தமிழகத்தில், தினமும் சராசரியாக, 65 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 100 கோடி; தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, 125 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கும். 

விற்பனை அதிகம் : மார்ச், 15 முதல், அரசியல் கட்சியினர், தேர்தல் பிரசாரத்தை துவங்கியதால், மதுபான விற்பனை, படிப்படியாக அதிகரித்து வந்தது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு, 16, 17, 18ம் தேதிகளில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மூன்று நாட்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வினியோகிக்க, 'சரக்கு'களை வாங்கி குவித்து வருகின்றனர். இதேபோல, கள்ள மார்க்கெட்டில் மது விற்போரும், ஒருபக்கம், சரக்குகளை வாங்கி குவிக்கின்றனர். அரசியல் கட்சினரின் பிரசாரம் சூடு பிடித்த நிலையில், ஏப்., 10 முதல், தமிழகத்தின் தினசரி மது விற்பனை, 105 கோடி ரூபாயாக உயர்ந்தது.நேற்று முன்தினம், 120 கோடியை தாண்டியுள்ளது. 'இதில், பீர், குவார்ட்டர் பாட்டில்களின் விற்பனையே அதிகம்' என, டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். 

ரூ.200 கோடிலோக்சபா பிரசாரம், மார்ச் மத்தியில் சூடு பிடித்தது. இதில் பங்கேற்பவர்களுக்கு, சாப்பாடு, 200 ரூபாய் கூலியுடன், சில வேட்பாளர்கள், சரக்கும் வினியோகித்தனர்.இதனால், மார்ச், 15 முதல், நேற்று வரை, டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு, கூடுதலாக சரக்கு விற்றுள்ளது.இன்றும், நாளையும், வழக்கமான விற்பனையை விட, 200 கோடி ரூபாய்க்கு, கூடுதலாக சரக்கு விற்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தல் ஆணையம் தரப்பில், நாளையும், மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க, டாஸ்மாக் நிறுவனத்துக்கு பரிந்துரைக்கும் யோசனை உள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து, இன்று முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.கூடுதல், 'டெலிவரி' டாஸ்மாக் நிறுவனத்திற்கு இன்று, தமிழ் புத்தாண்டு விடுமுறையாக இருப்பினும், டாஸ்மாக் கிடங்குகள் செயல்பட உள்ளன.மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், இன்று, அதிகளவில் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024