Sunday, April 14, 2019

குளிக்காத கணவனிடம் இருந்து விவாகரத்து கோரிய மனைவி

Added : ஏப் 13, 2019 22:08

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து ஒரு வாரமாக குளிக்காததால், துர்நாற்றம் வீசும் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி, நீதிமன்றத்தை நாடியுள்ளார். ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. போபாலை சேர்ந்த, 25 வயதுள்ள இளைஞனும், 23 வயது இளம்பெண்ணும், காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், ஓராண்டுக்கு முன் திருமணம் செய்தனர்.மனு தாக்கல்இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த மாதம், இருவரும், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், விவாகரத்து பெற விரும்புவதாகக் கூறி, போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
குடும்ப நல நீதிமன்ற ஆலோசகர் ஷைல் அவஸ்தி கூறியதாவது:இளம்பெண் அளித்த மனுவில், 'கணவன் ஒரு வாரமாகியும் குளிக்காமல், தாடியை அகற்றாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. குளிக்கும்படி கூறினால், உடலிலும், உடையிலும் வாசனை திரவியத்தை பயன்படுத்துகிறார்' என, குற்றஞ்சாட்டியிருந்தார். கணவனுடன் சேர்ந்து வாழும்படி, பெற்றோர் கூறிய அறிவுரையை, அந்தப் பெண் ஏற்கவில்லை. கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்கியும், சமரசம் ஏற்படவில்லை.

உத்தரவுஇதையடுத்து, இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, ஆர்.என்.சந்த், கணவன், மனைவி இருவரும் ஆறு மாதங்களுக்கு, தனித்தனியாக வாழும்படி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி, கணவன், மனைவி இருவரும், ஆறு மாதங்கள் தனியாக வாழ வேண்டும். அதன் பின், அவர்களுக்கு, சட்டப்படி விவாகரத்து வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024