Sunday, April 14, 2019

டோல்கேட்டில் அனுமதி மறுப்பு தேர்தல் அலுவலர்கள் வாக்குவாதம்

Added : ஏப் 14, 2019 00:34

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டோல்கேட்டில், கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதி மறுத்ததால், தேர்தல் அலுவலர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கு, ஏ.கே.டி., பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. அங்கு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவு செய்கின்றனர்.இதற்காக, பிற பகுதிகளில் இருந்து அலுவலர்கள், வேன்களில் வந்து செல்கின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை பயிற்சி முடித்த அலுவலர்கள், வேன்களில் புறப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலை மாடூர் டோல்கேட்டில், மாலை 3:45 மணியளவில், மூன்று வேன்களில் சென்ற தேர்தல் அலுவலர்களிடம், ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருப்பதால் கட்டணம் செலுத்த முடியாது என கூறியதை ஏற்க மறுத்த ஊழியர்கள், அதற்குரிய ஒப்புகை சீட்டு தேவை எனவும், இல்லாவிட்டால் கட்டணம் செலுத்துமாறு கூறி, வேனை அனுமதிக்க மறுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் அலுவலர்கள், டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையிலான போலீசார் சென்று, பேச்சு நடத்தினர். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்களை, கட்டணமின்றி அனுமதிக்குமாறு டோல்கேட் நிர்வாக ஊழியர்களிடம் பரிந்துரைக்கப் பட்டது. அதையடுத்து, 3 வேன்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024