Monday, April 8, 2019


ரயில் பயணச் சீட்டிலும் எம்.ஜி.ஆர். பெயர் 



By DIN | Published on : 08th April 2019 05:00 AM

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்ட மறு நாளே பயணச் சீட்டுகளிலும் புதிய பெயர் அச்சிட்டு வழங்கப்படுகின்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்' என பெயர் மாற்றி சனிக்கிழமை அரசாணை வெளியிட்டது. பெயர் மாற்ற விவரம் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே பயணச் சீட்டுகளிலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டு எம்.ஜி.ஆர். பெயரைக் குறிக்கும் வகையில் "எம்ஜிஆர் சென்னை சிடிஆர்' என அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024