Sunday, October 20, 2019


'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு ஜாமின் விசாரணை ஒத்திவைப்பு

Added : அக் 19, 2019 22:05

தேனி,'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமின் கோரிய ஐந்துபேரின் மனுக்கள் மீதான விசாரணை தேனி நீதிமன்றம் நாளை (அக்., 21) ஒத்தி வைத்தது.'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள் பிரவின், ராகுல், பிரியங்கா, இர்பான் , அவர்களது தந்தையர்கள் டாக்டர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ், முகமதுஷபி, தாயார் மைனாவதி ஆகியோர் சிறையில் உள்ளனர். மாணவர் உதித் சூர்யாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில் பிரவின், ராகுல், தந்தையர்கள் சரவணன், டேவிஸ், முகமது ஷபி ஆகிய ஐந்துபேர் ஏற்கனவே ஜாமின் கோரியிருந்தனர். இம்மனுக்கள் நேற்று தேனி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி விஜயா விடுப்பில் சென்றதால், மகளிர் நீதிமன்ற நீதிபதி கீதா விசாரித்தார். இவர் இம்மனுக்களை நாளை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024