Saturday, October 26, 2019

ஆதார் பதிவு முகாம் பள்ளிகளில் ஏற்பாடு

Added : அக் 25, 2019 23:41

சென்னை, தபால் நிலையங்கள் வாயிலாக ஆதார் பதிவு முகாம் நடத்த பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாடு முழுவதும் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் முக்கிய அடையாள எண்ணாக பயன்படுத்தப்படுகிறது.வங்கி கணக்கு சமையல் எரிவாயு உதவி தொகை திட்டங்கள் நல திட்டங்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர் சேர்க்கை தேர்வுகள் என அனைத்திற்கும் ஆதார் எண் பயன்படுத்தப் படுகிறது. இதையொட்டி பள்ளி கல்லுாரிகளிலேயே மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று உரிய விபரங்கள் சேகரிக்கப் படுகின்றன. அதனால் பள்ளிகளில் ஆதார் எண் பதிவுக்கான முகாம் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மண்டல தபால் அலுவலகங்கள் வழியே இந்த முகாம்களை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024