Friday, October 25, 2019

Other universities

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் பொது சுகாதார இதழியல் படிப்பு

பதிவு செய்த நாள்: அக் 22,2019 22:08

சென்னை,: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 'பொது சுகாதார இதழியல்' என, புதிய பாடத்திட்டம் துவக்கப் பட்டுள்ளது.இது குறித்து, பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது:ஓராண்டு டிப்ளமா படிப்பான, முதுநிலை பொது சுகாதார இதழியல் படிப்பில், எட்டு இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. 


இதற்கான விண்ணப்ப பதிவு நடைமுறைகள் துவங்கப் பட்டுள்ளன. மாணவர்களின் வரவேற்பை பொறுத்து, இடங்கள் அதிகரிக்கப்படும்.இதில், மூன்று தாள்கள் இடைபெறும். அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விபரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவ குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்கள் வகுக்கப் பட்டுள்ளன.

இளநிலை பட்ட படிப்புடன், ஆறு மாத கால இதழியல் அனுபவம் கொண்டவர்கள், படிப்பில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள், www.tnmgrmu.ac.in என்ற இணைதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நவ., 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மருத்துவ கல்லுாரிகளில், தேர்வு அறையில் மாணவர்கள், 'காப்பி' அடிப்பதை தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். முறைகேடுகள் நடந்தால், கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...