சேலம், நாமக்கல்லில் சதம் அடித்த வெயில்
Added : மார் 20, 2020 01:24
சென்னை : திருத்தணி, சேலம், நாமக்கல் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு, நேற்று வெயில் கொளுத்தியது. நாளை முதல், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, திருத்தணி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை, நுங்கம்பாக்கம், 34; விமான நிலையம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கோவை, தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, திருச்சி, வேலுார், 37; தொண்டி, 36; பாளையங்கோட்டை, 35; பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, 34; கடலுார், காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி, 33; கன்னியாகுமரி, நாகை, 32; வால்பாறை, 30 குன்னுார், 25; ஊட்டி, 24; கொடைக்கானல், 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் நீடிக்கும்; பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலை நிலவும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில், காற்றின் திசை மாறுபடுவதால், திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment