முதல்வர் நிவாரண நிதிக்கு சாமானியர்களும் உதவி
Added : மார் 30, 2020 21:57
சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு, கூலித் தொழிலாளர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், ஆர்வமாக நிதி வழங்கி வருகின்றனர்.கொரோனா நோய் தடுப்பு பணிக்காகவும், ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, பணம் வழங்கும்படி, பொது மக்களுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அதை ஏற்று, ஏராளமானோர் நிதி வழங்கி உள்ளனர். கூலித் தொழிலாளர்கள் முதல், வசதி படைத்தவர்கள் வரை, அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர். இவர்கள், 100, 200, 500, 1,000 என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தொகையை, நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்; அதற்கான ரசீதை, முதல்வரின், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment