Tuesday, March 31, 2020

கொரோனா பாதிப்பை தவிர்க்க முதியோருக்கு மத்திய அரசு அறிவுரை

Added : மார் 30, 2020 23:03

புதுடில்லி:மத்திய சுகாதார அமைச்சகம், மூத்த குடிமக்கள், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

முதியோர்கள், என்ன செய்யலாம், எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:செய்ய வேண்டியவை*அடிக்கடி முகம், கைகளை கழுவ வேண்டும்.* வீட்டிற்கு வரும் விருந்தினர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.* அப்படியே சந்தித்தாலும், குறைந்தது மூன்றடி இடைவெளி விட்டு பேச வேண்டும்.*வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து களை தொடர வேண்டும்.* தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.*வீட்டில் சமைத்த சூடான உணவுகள், பழரசம், போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்*கண், மூட்டு அறுவை சிகிச்சை ஆகியவற்றை தள்ளி வைக்கலாம்.*அடிக்கடி பயன்படுத்தும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கலாம்.* லேசான காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும்* உடல் நலன் குறித்து, குடும்ப மருத்துவரை நேரில் சந்திப்பதற்குப் பதிலாக, தொலைபேசி மூலம் ஆலோசனை பெறலாம்.தவிர்க்க வேண்டியவை*காய்ச்சல், இருமல் இருந்தால், சுய மருத்துவம் பார்க்கக் கூடாது.*அதிக மக்கள் கூடும் காய்கறி சந்தைகள், மத வழிபாட்டு தலங்கள், பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.*இருமல், தும்மலின் போது, வெறும் கையால் தடுக்கக் கூடாது; கைக்குட்டை அல்லது துண்டை பயன்படுத்தலாம்.*காய்ச்சல் அல்லது இருமல் உள்ளோர் அருகில் செல்லக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வாசனை, உணவு ருசி இல்லாமல் இருப்பதும், கொரோனா பாதிப்புக்கான துவக்க அறிகுறி என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024