ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு
By Vishnupriya R | Updated: Sunday, April 12, 2020, 13:22 [IST]
பெங்களூர்: பெங்களூரில் இரண்டாவது மனைவி வீட்டில் லாக்டவுனால் சிக்கிக் கொண்ட கணவனை தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முதல் மனைவி போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இறுதியில் கணவரோ யாரும் வேண்டாம், லாக் டவுன் முடியும் வரை நண்பர் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டார்.
பெங்களூரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மாதுரி (பெயர் மாற்றம்) திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். வெளியூர் இதையடுத்து அவ்வப்போது தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தார். இதுகுறித்து முதல் மனைவிக்கு தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மனைவியிடம் கெஞ்சினார். ஒரு வாரம் விட்டு மறுவாரம் இதையடுத்து போலீஸார் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டனர்.
இதையடுத்து கணவன், இரு மனைவிகள் தங்கள் உறவினர்களுடன் பேசினர். அப்போது இரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் தான் செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும் இருவர் வீடுகளிலும் ஒரு வாரம் ஒரு வாரம் தங்குவதாக ஒப்பந்தம் போட்டு கொண்டனர். வீட்டுக்கு வர அழைப்பு இந்த நிலையில் மார்ச் 21-ஆம் தேதி 2ஆவது மனைவியின் வீட்டுக்கு சென்ற கணவன் 28 ஆம் ஆண்டு முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் அவரால் திரும்பவில்லை. இதனால் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு தங்க நேரிட்டு விட்டது. வீட்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தீர்ந்து போய்விட்டதால் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். லாக்டவுன் அவரும் வருவதாக கூறியிருந்த நிலையில் வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவர் காவல் உதவி மையத்தை அணுகினார்.
இது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய நிலையில் கணவர் நவீன் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அதாவது இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து வெளியேறிய கணவர், விஜயநகரில் உள்ள நண்பருடன் இந்த லாக்டவுன் முடியும் வரை தங்கியுள்ளார். ஒருவழியாக இந்த இரண்டு பொண்டாட்டி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment