Monday, April 13, 2020

ஒரே நாளில் கேரளா செய்த சாதனை.. வெறும் 2 பேருக்கு மட்டும் கொரோனா.. 36 பேர் குணமடைந்தனர்.. கலக்குகிறது

 By Shyamsundar I | Published: Sunday, April 12, 2020, 20:21 [IST] 

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை... உலக நாடுகளை வியக்க வைத்த கேரளா இந்தியாவில் கேரளாவில்தான் முதலில் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அப்போது கேரளா மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவர்களின் உணவு முறை பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டது. 

ஆனால் இப்போது அதே கேரளா கொரோனாவில் இருந்து மீண்டு வர தொடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவில் இருக்கும் ஊடகங்கள் கூட கேரளாவின் செயல்பாடுகளை பாராட்ட தொடங்கி உள்ளனர். கேரளாவில் கொரோனாவிற்கு எதிரான திட்டங்களும், செயல்பாடுகள் வெற்றி அடைய தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் கேரளாவில் இதுவரை 375 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் மொத்தமாக இன்று மட்டும் 36 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் . அங்கு மொத்தமாக 179 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 194 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். காசர்கோடு நிலை இதில் கேரளாவில் காசர்கோடு மற்றும் கன்னூர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. காசர்கோட்டில் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் கண்ணூரில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றும் மட்டும் 28 பேர் காசர்கோட்டில் குணமடைந்து உள்ளனர். இன்று அங்கு யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. காசர்கோட்டில் இதுவரை 61 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலேயே அதிகமான குணப்படுத்தப்படும் சதவிகிதம் கொண்ட மாநிலம் என்ற சிறப்பை கேரளா பெற்று இருக்கிறது. கேரளாவில் இன்னும் 816 பேர் கொரோனா அறிகுறியோடு மருத்துவமனையில் தீவிரமான கண்காணிப்பில் உள்ளனர்.

 இன்னும் 1000 பேருக்கு சோதனை செய்ய வேண்டும். சிறப்பான சாதனை அதேபோல் கேரளாவில்தான் தற்போது மிக குறைவான இறப்பு சதவிகிதம் உள்ளது. அங்கு 1%க்கும் குறைவான மக்கள்தான் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மிக கடுமையான கட்டுப்பாடு, விரைவான சோதனை, வீடு வீடாக கண்காணிப்பு, மிக சரியான காண்டாக்ட் டிரேஸ் முறை என்று மிக சரியான திட்டமிடல் மூலம் கேரளா இந்த சாதனையை செய்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா விரைவில் முற்றிலுமாக குணப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024