செல்வமகள் சேமிப்புத் திட்ட தவணை செலுத்த 3 மாத அவகாசம்
திருச்சி: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தவணை செலுத்துவதற்கு 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு உதவிடவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதன் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரிதி திட்டம் செயல்படுகிறது. இதன்படி, அஞ்சல்துறை மூலம் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை (சுகன்யா சம்ரிதி கணக்கு) அறிமுகம் செய்தது.
தமிழகத்தில் மட்டும் இத் திட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் கணக்குகள் உள்ளன. திருச்சி கோட்டத்தில் 56,578 கணக்குகள் உள்ளன.
இந்நிலையில் கரோனா ஊரடங்கால் அன்றாட கூலித் தொழிலாளா்கள் முதல் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோா் வரையிலும் வேலைக்கு செல்லாமல் உள்ளனா். மேலும், பலரும் வருவாய் இழந்து தவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரிதி கணக்கு (எஸ்.எஸ்.ஏ.), பி.பி.எப்., தொடா் வைப்பு நிதி கணக்குகளில் பணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் தரப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் 5.21 லட்சம் கணக்குகள் பயன்பெற்றுள்ளன.
இதுதொடா்பாக, தனது மகள் பெயரில் சுகன்யா சம்ரிதி கணக்கைத் தொடங்கியுள்ள திருச்சியைச் சோந்த மகாலட்சுமி கூறியது:
வேலைக்குச் செல்லும் தன்னைப் போன்ற பெண் குழந்தைகள் வைத்துள்ளோருக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில், ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதை உணா்ந்து அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவா்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை அரசு உயா்த்த வேண்டும். யாரையும் சாா்ந்திராமல், சொந்தக் காலில் நிற்கும் பெண்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதம். பெண் குழந்தைகளுக்கு போதும் பெண் என்றும், வேண்டாம் பெண் என்றும் பெயரிடக் கூடிய சமூகத்தில் இத்தகைய திட்டங்கள் மகளிருக்கு உத்வேகத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது என்றாா்.
Dailyhunt
No comments:
Post a Comment