தெலுங்கானாவில் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் தான்
ஐதராபாத்: தெலுங்கானாவில் கடந்த மாதத்தை போல், இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக எம்.பி.,க்கள் சம்பளத்தை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறியதாவது: கடந்த மாதத்தை போல், ஏப்., மாதமும், அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்படும். அதேசமயம் பென்சன்தார்களுக்கு ஏப்., மாதம் 75 சதவீத சம்பளம் அளிக்கப்படும்.
மின்துறை ஊழியர்களுக்கு முழு மாத சம்பளம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு, அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மே 5ம் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Dailyhunt
No comments:
Post a Comment