முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.160,93,74,572 நிதி
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 160,93,74,572 நிதி பெறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இது வரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Dailyhunt
No comments:
Post a Comment