நிவாரணம் கிடைக்குமா: பூஜாரிகள் தவிப்பு
Added : ஏப் 25, 2020 01:49
மதுரை:கொரோனா ஊரடங்கால் கிராம கோயில் பூஜாரி களுக்கு அரசு வழங்கும் நிவாரண நிதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் கிராம கோயில் பூஜாரிகள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். ஊரடங்கிலும் பூஜை செய்து வருகின்றனர். பக்தர்கள் வராததால் தட்டுக்காணிக்கை உள்ளிட்ட வருவாயின்றி சிரமப்படுகின்றனர்.
இதற்கிடையே 'நலவாரிய உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு அடுத்த சுற்றில் உதவித் தொகை வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட பூஜாரிகள் ஓய்வூதியம் பெறுவதால், அவர்களுக்கு கொரோனா நிவாரணம் கிடையாது' என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என தவிப்பிற்குள்ளாகி இருக்கும் பூஜாரிகளின் ஏழ்மையை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment