Saturday, April 25, 2020

கொரோனாவால் வறுமையில் வாடும் 94 வயது பார்வையற்ற அர்ச்சகர்

Added : ஏப் 25, 2020 02:03 


திருவாரூர்:பார்வையிழப்பு, கோவில் மூடப்பட்டது ஆகியவற்றால், 94 வயது அர்ச்சகர், வறுமையில் வாடி வருகிறார்.

திருவாரூர் அருகே, திருப்பள்ளி முக்கூடல் அடுத்த, குருவி ராமேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ளது, அஞ்சனாட்சி அம்மன் உடனுறை திருநேத்திரநாதர் கோவில்.திருவாரூர், தியாகராஜர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் அர்ச்சகராக இருந்தவர்,
சங்கர குருக்கள்.தற்போது, 94 வயதாகும் இவரது தாத்தா, அப்பா எல்லோரும் இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்கள் தான்.அறநிலையத் துறை சம்பளம், 3,000 ரூபாய்; இது போக தட்டில் விழும் வருமானத்தில், குடும்பத்தை நடத்தி வந்தார்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை அருளும் இந்த கோவிலை, பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தேடி வந்து தரிசித்து செல்வர். அப்படி வருவோரை எல்லாம் நன்றாக கவனித்து, அவர்கள்மனம் சந்தோஷப்படும்படி, பூஜைகள் செய்து அனுப்புவார்.தனக்கு வரும்
வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியும், ஊர் பெரியவர்களிடம் நன்கொடை பெற்றும், கோவிலின் வளர்ச்சிக்கு, தன்னால் முடிந்த அளவு உதவி செய்துள்ளார்.வயது மூப்பின்   காரணமாக, கோவில் நிர்வாகம், வேறு ஒருவரை அர்ச்சகராக நியமனம் செய்தது.

இதனால், சம்பளம் நின்றது. அதைப் பற்றி கவலைப்படாமல், கோவிலில் சேவை செய்து கொண்டிருந்தார்.இவரது மகன் கணேசன் வருமானத்தில், குடும்பம் ஓடியது. ஒன்பது மாதங்களுக்கு முன் கணேசன், திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். சங்கர குருக்கள் நொறுங்கி போனார்.வெளியுலகம் தெரியாத மருமகள், கல்லுாரி மாணவியான பேத்தியின் எதிர்காலம் மட்டுமின்றி, நிகழ்காலமும் கேள்விக் குறியாகவே, செய்வதறியாது பழையபடி கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தார்.

பக்தர்கள் தரும் பணத்தில், குடும்ப செலவுகளை, ஓரளவு சமாளித்து வந்தார்.   வயது மூப்பு காரணமாக, சங்கர குருக்களின் பார்வை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, எதிரில் இருப்பவர்கள் ஒரு நிழல் மாதிரி தெரியும் அளவிற்குதான் உள்ளது. யாராவது, அவரை கையை பிடித்து, அழைத்து சென்றால் தான் உண்டு.அடுத்த அடியாக, கொரோனா காரணமாக, கோவிலும் மூடப்பட்டதால், வந்து கொண்டிருந்த சொற்ப வருவாயும், ஒரு மாதத்திற்கு மேலாக நின்று போனது.

தற்போது, 94 வயதாகும் சங்கர குருக்கள் வறுமையின் உச்சத்தில் உள்ளார். இவரது மருமகள்  த்ராவின் தம்பி கிருஷ்ணகுமார், சென்னையில் உள்ளார். அவர்தான் அக்கா குடும்பத்திற்கு, தற்போதுஉதவியாக உள்ளார்.வறுமையில் வாடும், 94 வயது பார்வையில்லாத அர்ச்சகரின் குடும்பத்தை வாழ வைக்க வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை.

உதவ விரும்புவோர், சித்ரா - 84286 07448, கிருஷ்ணமூர்த்தி, 97911 25567 ஆகிய மொபைல்   எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...